என் பறவை

உனக்குப் பிடித்த அந்த இசையை
இன்னும் நான் நிறுத்தவே இல்லை
யுகப்பாடலாய் என்னுள்
ஒலித்துக் கொண்டிருக்கிறது
விசித்திரச் சிறகணிந்து
உன் வானில் உலவுகிறது
என் பறவை

காற்றின் திசைகளில்
உனதும் எனதுமான
நீயும் நானும் மட்டுமே அறிந்த
எம் காலத்தின் சுவடுகள்
அடை மழையென்ன
நெருக்கும் இருளின் கனதியென்ன
அடர் பனியென்ன
எதுவுமே பாெருட்டில்லை
நினைவுகளின் வானத்தில்
சஞ்சரிக்கும் பறவைக்கு!

உனக்குப் பிடித்த அந்த இசையை
என்னுள்..
ஆன்ம விசையாய்!
இன்னும் நான் நிறுத்தவே இல்லை

Leave A Reply