காசாவின் பெற்றோர் அந்தப் பின்-நிசப்தத்தை எப்படித் தாங்குவர் ? குழப்படிகாரக் குழந்தைகளின் கூச்சல் ஜொகான் சண்முகரத்தினம் நோர்வேஜிய நாளிதழ் [Class Struggle/Klassekampen] | 26.10.2023 கடந்த சில வாரங்களாக நான் வழமைக்கு மாறாக குழந்தைகளை ஏசுவதை நிறுத்தியிருந்தேன். நித்திரையிலிருந்து மகள் பிந்தி எழும்பியதால் பள்ளிக்கூடத்திற்குத் தாமதமாகச் சென்றபோதும், பேருந்து எடுத்திருக்க வேண்டிய நேரத்தில் கண்ணாடிக்கு முன் …
‘Mrs. Chatterjee vs. Norway’ என்ற ஹிந்திப்படம் நோர்வே ஊடகத் தளத்தில் முக்கிய பேசுபொருளானது. ராணி முகர்ஜி முதன்மைப் பாத்திரத்தில் நடித்த அத்திரைப்படம் மார்ச் 17 இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் திரையரங்குகளில் வெளியாகியது. இது ஒரு சர்ச்சைக்குரிய உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் 2011இல் நிகழ்ந்த குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவைக்கும்; …
மண்ணை விளைச்சலுக்கு உகந்ததாக்குதல்- செப்பனிடுதல் – வளப்படுத்துதல் என்பதாகத் தான் பண்படுத்துதல் தமிழிலும் வழங்கப்படுகின்றது. மாற்றத்திற்கு அனுமதிக்கப்படாத ஒன்றைச் செப்பனிட முடியாது, வளப்படுத்த முடியாது. அதன்படி பண்பாடு என்பதும் வளப்படுத்தலுக்கும், செப்பனிடலுக்கும், தெரிவுகளுக்கும் உட்பட்டதே. அது மாறுதலுக்கு உட்படக்கூடியதே பண்பாடு என்பதை மேலோட்டமாகச் சொல்லப்போனால் அது வாழ்வுமுறையுடன் தொடர்புடையது. பண்படுத்தலைக் குறிப்பது. அது மாறாத்தன்மை கொண்ட …
போக்காளி நாவல் 3 களங்களைக் கொண்டுள்ளதாகப் பார்க்கலாம். முதற்பகுதி, புலம்பெயர் நாடொன்றுக்கான ஆபத்து நிறைந்த பயணங்களும், சென்று சேர்ந்த நாட்டில் வாழ்வை நிலைநிறுத்துவதற்கான போராட்டங்களும். இரண்டாவது பகுதி: நிலைநிறுத்திய வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கான பாடுகளும் நெருக்கடிகளும் அடைவுகளும். மூன்றாவது பகுதி, புலம்பெயர் சூழலில் முதற்தலைமுறைக்கும் இரண்டாவது தலைமுறைக்குமிடையிலான முரண்பாடுகள். முரண்பாடுகள் என்பவை மொழியிலிருந்து, அடையாளம், கலாச்சாரம், …
எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், விமர்சகர்கள், வெளியீட்டாளர்கள், நூலகர்கள் மற்றும் வாசகர்கள் ஊடாடுவதற்கும் அனுபவத்தைப் பெறவுமான நோர்வேயின் மிகப்பெரிய இணைவுத்தளமாக இந்த விழா விளங்குகின்றது. பல வடிவங்களில் கலை, இலக்கிய, அரங்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நோர்வே இலக்கிய விழா ஒவ்வொரு வருடமும் மே 30ஆம் நாளிலிருந்து ஜூன் 5ஆம் திகதி வரையான ஒரு வாரம் நடைபெறுவது வழக்கம். கொரோனா …
சிங்கள மக்களின் தற்போதை எழுச்சியானது இளைய தலைமுறையிலிருந்து செயற்திறனும் ஆளுமையும் ஜனநாயகத்தின் பன்மைத்தன்மையை மதிக்கின்ற பண்புமுடைய புதிய அரசியல் தலைமையை அல்லது தலைமைகளை உருவாக்குமாயின் அது இலங்கைத்தீவின் எதிர்கால அரசியலுக்கு வலுச் சேர்க்கக்கூடியது. 1948இற்குப் பின்னர், அதாவது இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னரான 70 ஆண்டு கால வரலாற்றில் அந்நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி இதுவென …
நேரநெருக்கடி காரணமாகவும் ஒட்டுமொத்த நிகழ்வொழுங்கின் தன்மை கருதியும் 10.04.2022 நடைபெற்ற எனது மூன்று புத்தகங்களின் அறிமுக நிகழ்வில், எனது உரையில் மனதிலிருந்ததை முழுமையாகப் பகிர்ந்துகொள்கின்ற வாய்ப்பு அமையவில்லை. ஆதலால் பகிர்ந்தவற்றோடு பகிராமற்போனவற்றையும் சேர்த்து இந்தப் பதிவு. நிகழ்வை நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளடக்கக்கனதியுடனும் நிகழ்வினைக் கவிதா நெறிப்படுத்தியிருந்தார். எழுத்தாளர் சரவணன் ’அதிகார நலனும் அரசியல் நகர்வும’; புத்தகம் …
தலிபான்களுடன் மேற்கு அவசரமாக பேச முன் வந்ததற்கான ஒரு காரணியாக ரஷ்யாவையும் சீனாவையும் தலிபான்களுடன் பேச விடாமல், நெருங்க விடாமல் தடுப்பது என்பதாகவும் கருதலாம். அது மேற்கின் பிராந்திய நலன்சாந்த நகர்வு. ஐரோப்பா எதிர்கொள்ளும் அகதிகள் நெருக்கடியும் துணைக்காரணியாகக் கொள்ளக்கூடியது. 2022 ஜனவரி இறுதியில் ஆப்கானிஸ்தானின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்களின் குழு ஒன்று நோர்வே தலைநகர் …
அரசியல் அதிகார நிறுவனங்களில் எடுக்கப்படும் முடிவுகளின் தரத்தினையும் விளைவுத்தாக்கத்தினையும் உறுதிப்படுத்தவும் அது பன்மைத்துவத்தினைப் பிரதிபலிக்கவும் வேண்டும் என்ற கருத்தியல் நோர்வே உட்பட்ட ஸ்கன்டிநேவிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வலுப்பெற்று வருகின்றன. அந்தப் பன்மைத்துவம் என்பது பாலின, இனத்துவ, மொழித்துவ, சமய மற்றும் வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட (LGBT – lesbian, gay, bisexual, and …
1970 – 1990 வரையான இருபதாண்டுக் காலப்பகுதியிலேயே நோர்வே அரசியலில் அதி முக்கியத்துவம் பெற்ற காலமென வரையறுக்கப்படுகின்றது. அதற்கு முன்னர் கிட்டத்தட்டப் பிரசன்னம் இல்லாமலிருந்த நிலையிலிருந்து மக்களால் தேர்நதெடுப்பட்ட ஜனநாயக அரசியல் அமைப்புகளுகள், பொதுச் செயற் குழுக்களுக்குள் பெண்கள் மிக அதிக எண்ணிக்கையில் பிரவேசிக்கின்றனர். இதனை ஆய்வுத் துறையில் Critical mass அல்லது Critical volume …