காத்திருப்பின் தருணங்கள்

தெருவோர மரங்களிலும்
அதன் கிளைகளிலும்
உறைபனியிலும் உதிராத
ஊசி இலைகள் சிலவற்றிலும்
கட்டடங்கள்
சுவர்கள்
வெளிகள்
தரிப்பிடங்கள்
யாவற்றிலும்
சில சொற்கள்
எம் மவுனங்கள்
விவாதங்கள்
காத்திருப்பின் தருணங்கள்
இப்போதும்
அங்கே
சிந்திக்கிடக்க‌க் கூடும்
நீ அறிந்தவைகளும்
அறியாதவைகளும்
அறிய முற்படாதவைகளுமான
என் இரகசியங்களை
அவை தம் நினைவில்
வைத்திருக்கக்கூடும்

Leave A Reply