வாழ்வின் கவிதை

வாழ்வின் கவிதை

அங்கேதான் நின்றுகொண்டிருக்கிறது
காத்திருப்புகளுக்குப் பழக்கப்பட்ட மனம்
நினைவூறிக் கிடக்கின்ற
மனவோடை

கடலாகி வியாபிக்கிறது
விசும்பினிடை
தோன்றிக் கொண்டிருக்கிறது
ஒற்றை முகம்

கண்காணாக் காடொன்றின் நிலத்தில்
ஆழமாய் பதிந்துகிடக்கிறது
அன்பின் ஆதிவேர்
காற்றின் மேனியில்
படர்கிறது
தொன்ம ஏக்கத்தின் அழல்

காலமற்ற வெளிகளில்
எழுதப்பட்டுக்கொண்டேயிருக்கிறது
வாழ்வின் கவிதை!

Leave A Reply