துருக்கியின் தேர்தலும் குர்தீஸ் கட்சியின் நாடாளுமன்றப் பிரவேசமும்
குர்திஸ் அரசியல் கட்சி வரலாற்றில் இதற்கு முன்னர் துருக்கிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தினைக் கொண்டிருக்கவில்லை. இன்னொரு வகையில் சொல்வதானால் குர்திஸ் மக்களுக்கு துருக்கியின் ஜனநாயக நடைமுறைகளில் பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுவந்துள்ளது. பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மூலம் துருக்கிய மைய அரசியலில் குர்திஸ் கட்சியொன்று பங்கெடுப்பது இதுவே முதற்தடவை என்பதால் குர்திஸ்; ஐனநாயக மக்கள் கட்சியின் இந்த வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இந்ந வெற்றி, அனைத்து சிறுபான்மையினருக்குமான வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.
துருக்கி நாட்டில் புதிய அரசாங்கத்தைத் தெரிவு செய்வதற்கான நாடாளுமன்றத் தேர்தல் 2015 ஜூன் ஆரம்பத்தில் (08ஃ06ஃ15) இடம்பெற்றது. கடந்த 2002இலிருந்து 13 ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருந்த Recep Tayyip Erdogan தலைமையிலான ‘நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி” (Justice and Development Party – AKP) பெரும்பான்மையை இழந்து, தனித்து ஆட்சியமைக்க முடியாத சூழல் தோன்றியுள்ளது. 41 வீத வாக்குகளையே அக்கட்சி பெற்றுள்ளது.
2002 இற்குப் பின்னர் Erdogan இன் கட்சி பெரும்பான்மையை இழந்தது இதுவே முதற்தடவை. ஏனைய 3 கட்சிகளும், அதாவது Republican People’s Party, Nationalist Movement Party, Peoples’ Democratic Party ஆகிய 3 எதிர்க்கட்சிகளும் Erdogan கட்சிக்கு பாரிய சவாலாக வாக்குகளைப் பெற்றிருந்தன. இவை முறையே 25, 13, 13 வீதமான வாக்குகளைப் பெற்றிருந்தன. இதில் 13 வீத வாக்குகளைப் பெற்று தேசியவாதக் கட்சி (Nationalist Movement Party) ஒரு கடும்போக்குவாதக் கொள்கையுடைய கட்சியாகும். PKK அமைப்புடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை முறிப்பதற்கு பெரும் முனைப்புக்காட்டி வந்துள்ளது.
அமெரிக்கா, ரஸ்யா போன்ற நாடுகளின் அரசியலமைப்பிற்கு இணையாக, ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஆட்சி முறைமையைக் கொண்டுவருவதற்கான Erdoganஇன் முனைப்பினை துருக்கிய மக்கள் இந்தத் தேர்தலில் நிராகரித்திருந்தனர். அதிலும் குறிப்பாக குர்திஸ் பின்னணியைக் கொண்ட ஜனநாயக மக்கள் கட்சி – (People’s Democracy Party –HDP) 10 வீதத்தைத் தாண்டி வாக்குகளை அறுவடை செய்தமை Erdoganஐ பொறுத்தமட்டில் ஜீரணிக்க முடியாத ஒன்றாகியது. ஏனெனில் அதிகார வலுவாக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி முறைமை பற்றிய அவரது கனவு கலைக்கப்பட்டுள்ளது. அத்தோடு குர்தீஸ் உட்பட்ட சிறுபான்மையின மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைத் தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட ‘10 வீத வாக்கு எல்லையை’ தாண்டி, 80 உறுப்பினர்களுடன் ஜனநாயக மக்கள் கட்சி நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்துள்ளது.
துருக்கியின மொத்த மக்கள் தொகையில் 20 வீதத்தினர் குர்திஸ் இன மக்களாவர். ஜனநாயக மக்கள் கட்சியானது துருக்கிய அரசின் தடைகளுக்கு ஆட்பட்டு பல தடவைகள் பெயர் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.
கடந்த 2002 இலிருந்து 12 ஆண்டுகள் துருக்கியின் பிரதமராக பதிவிவகித்த Erdogan , 2014இல் ஆண்டு ஜனாதிபதியாக பதவியில் அமர்ந்தார். அனைத்து அதிகாரங்களையும் தனக்குக் கீழ் உருத்திரட்டுவதன் ஊடாக தனக்கான பதவியை நீண்ட கால அடிப்படையில் உறுதிப்படுத்துவதில் அவர் தீவிரமாயிருந்தார். துருக்கியை ஒரு சர்வாதிகார ஆட்சிபீடமாக மாற்றிவிடுவார் என்ற அச்சம் அந்நாட்டின் முற்போக்கு சக்திகள் மட்டத்தில் நிலவிவந்தது.
குர்திஸ் அரசியல் கட்சி வரலாற்றில் இதற்கு முன்னர் துருக்கிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தினைக் கொண்டிருக்கவில்லை. இன்னொரு வகையில் சொல்வதானால் குர்திஸ் மக்களுக்கு துருக்கியின் ஜனநாயக நடைமுறைகளில் பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுவந்துள்ளது. பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மூலம் துருக்கிய மைய அரசியலில் குர்திஸ் கட்சியொன்று பங்கெடுப்பது இதுவே முதற்தடவை என்பதால் குர்திஸ்; ஐனநாயக மக்கள் கட்சியின் இந்த வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இந்ந வெற்றி, அனைத்து சிறுபான்மையினருக்குமான வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.
இந்தக் கட்சி குர்தீஸ் அல்லாத துருக்கிய இடதுசாரிகள், மனித உரிமை ஆர்வலர்களின் வாக்குகளையும் பெற்றுள்ளது. குர்தீஸ் அல்லாதோர் மற்றும் இடதுசாரிகள் அதிகார வலுவாக்க ஜனாதிபதி முறைமையை எதிர்த்து யுக்தி அடிப்படையில் இதற்கு வாக்களித்திருந்தனர்.
இதற்கு முந்தைய தேர்தல்களில் குர்திஸ் மக்கள், இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட துருக்கிய அரசியல் கட்சிகளுக்கு கணிசமாக வாக்களித்து வந்துள்ளனர். இந்தப் போக்கு இந்தத்தேர்தலில் மாறியிருந்தது. பெருமெண்ணிக்கையிலான துருக்கிய இடதுசாரி வாக்காளர்கள் ஜனநாயக மக்கள் கட்சிக்கு வாக்களித்த சூழல் காணப்பட்டது.
குர்திஸ்தானின் ஏனைய பகுதிகளிலும் ஜனநாயக மக்கள் கட்சியின் வெற்றி கொண்டாடப்பட்டது. ஈரான், ஈராக் சிரியாவின் ரோஜாவா பிரதேசங்களில் அதன் தேல்தல் வெற்றி கொண்டாட்டத்திற்குள்ளானது.
AKP கட்சியானது வாக்கு வங்கியைத் தக்கவைக்கும் நோக்குடன் மதத்தையும் அரசியலையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தியதான வகையில் தனது நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்துள்ளது. “AKP கட்சிக்கு வாக்களிக்காதவர்கள், இஸ்லாமியர்கள் இல்லை” என்ற மிக மோசமான அடிப்படைவாதக் கூற்றினை தேர்தல் பரப்புரைக் கோசமாக முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மத நம்பிக்கைகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் ஒன்றோடொன்று கலப்பதன் மூலம் மக்களின், குறிப்பாக இஸ்லாமியப் பெரும்பான்மை வாக்குகளை வேட்டையாடும் வெளிப்படையான, அதேவேளை மோசமான மத அடிப்படைவாத நிலைப்பாடாகும்.
இது ‘செப்ரெம்பர் 11’இற்குப் பின்னர், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையிலும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் படையெடுப்பிற்கும் ஆதரவாக உலக நாடுகளை அணிசேர்ப்பதற்கான நிர்ப்பந்தமாக அமெரிக்க முந்நாள் ஜனாதிபதி George W.Bush உதிர்த்த “எம்தோடு நிற்காத அனைவரும் பயங்கரவாதிகளின் பக்கம் நிற்பவர்களே” என்ற கூற்றினை நினைவூட்டுகிறது
குர்தீஸ் ஜனநாயக மக்கள் கட்சியினை “குர்தீஸ்-துருக்கிய இடதுசாரி எதிர்க்கட்சி” என வகைப்படுத்தலாம் என்ற கருத்து நிலவுகின்றது. இது துருக்கியிலுள்ள குர்திஸ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளில் பெரியது. இந்தக்கட்சியானது ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு தலைமைத்துவங்களைக் கொண்டிருக்கின்றது. 42 வயதுடைய Selahattin Dermitas மற்றும் 44 வயதுடைய ஆகிய இரண்டு தலைமைத்துவங்களால் வழிநடத்தப்படுகின்றது.
mbg; Selahattin Derm அடிப்படையில் ஒரு மனித உரிமைச் சட்டவாளர். இவர் இளவயதில் குர்தீஸ் விடுதலை அமைப்பில் இணையும் முனைப்புக் கொண்டிருந்த போதும், சந்தர்ப்ப சூழ்நிலையால் அது கைகூடவில்லைFigen Yuksekdag என்ற தகவலும் உள்ளது. கட்சியின் வெவ்வேறு மட்டங்களிலும், அலகுகளிலும் ஆண்-பெண் சமத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தலைமைத்துத்திலும் நிர்வாகத்திலும் இருபாலாரின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குர்திஸ் விடுதலை அமைப்பிலும் (PKK) இதே மரபினைக் காண முடியும்.
Figen Yuksekdag – இவர் பெண்கள் உரிமைச் செயற்பாடுகளில் பல ஆண்டுகாலம் இயங்கிவருபவர். “சோசலிச பெண்” எனும் இதழின் (Socialist Woman Magazine) ஆசிரியராகச் செயற்பட்டவர். பெண்கள் உரிமைக்கான செயற்பாடுகள் மற்றும் அரசியல் செயற்பாடுகளுக்காக 2009இல் கைதானவர். 2010இல் “ஒடுக்கப்பட்டோருக்கான சோசலிசக் கட்சி – Socialist party of the Oppressed” எனும் கட்சியை நிறுவினார். 2014இல் HDP கட்சியில் இணைந்தார்.
குர்தீஸ் மக்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தும் அதேவேளை தூய தேசியவாதத்தை முன்னிறுத்தாமல், முற்போக்கான இடதுசாரிக் கொள்கை நிலைப்பாடுகளைக் கொண்ட கட்சியாகத் தனது அரசியல் நிலைப்பாடுகளை HDP கட்சி முன்வைத்து வந்துள்ளது. இனங்களுக்கிடையிலான சமத்துவம், பால் சமத்துவம், மதச்சார்பின்மை, மனித உரிமைகள் மற்றும் இடதுசாரிப் பொதுவுடமை, முற்போக்குக் கொள்கை நிலைப்பாடுகளை முன்னிறுத்தும் கட்சியாக மக்கள் மத்தியில் வெளிப்பட்டு வந்துள்ளது. துருக்கியின் மைய அரசியலை நோக்கிய பணிகளிலும், குர்தீஸ் அல்லாத துருக்கியின் ஏனைய மக்களைக் கட்சியைத் திரும்பிப் பார்க்கவைத்ததிலும் Selahattin Dermitas வகிபாகமும் பங்களிப்பும் முக்கியமானது. குர்தீஸ் பின்னணி அல்லாத வாக்காளர்களின் வாக்குகளால் தான் 10 வீதத்தைத் தாண்டிப் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கும் வாய்ப்பினைப் பெறமுடிந்தது.
பொருளாதாரத்தில் மந்தமான வளர்ச்சி, சமூகத்தில் பொருளாதார ஏற்ற்தாழ்வு, கல்வியில் வீழ்ச்சி, கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படும் நிலை, அமைதிவழி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் மீது கடும் நடவடிக்கை என ஏற்கனவே ஐனநாயகத்தையும் நாட்டின் சுமூக சூழலையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது Erdogan தலைமையிலான 13 ஆண்டுகால ஆட்சியென்ற கருத்து மேலோங்கியுள்ளது.
குர்திஸ்தான் விடுதலை அமைப்பிற்கும் (PKK) துருக்கி அரசாங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை முயற்சிகளிலும் HDP கட்சி முக்கிய பங்காற்றியுள்ளது. அக்கட்சிக்குத் தேர்தல் மூலம், கிடைத்துள்ள அரசியல் அங்கீகாரம் குர்திஸ் மக்களின் அரசியல் உரிமைளை வென்றெடுப்பதற்கான பேரம்பேசும் வலுவினை அதிகரித்துள்ளது எனலாம். முதற்தடவையாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கின்றமை குர்தீஸ் மக்களைப் பொறுத்தவரையில் குறியீட்டு ரீதியிலும் நடைமுறை அரசியல் ரீதியிலும் முக்கியத்துவத்திற்கும் கொண்டாட்டத்திற்கும் உரியது.
Selahattin Demirtas தலைமையிலான கட்சிக்கு மக்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்குரிய மோசடி வேலைகளில் ஆளும்தரப்பு ஈடுபட்டிருந்ததான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்திருந்தன. வாக்குச்சாவடிகளிலிருந்து HDP கட்சியின் வேட்பாளர்பட்டியல்களைக் காணாமற் போகச் செய்தமை, வறிய மக்களுக்குப் பணம் கொடுத்து அக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டமை, குர்திஸ் மக்கள் செறிந்து வாழும், அவர்களின் வாக்குப்பலம் மிக்க பகுதிகளில் செயற்கையான மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டு வாக்களிப்புகள் இடம்பெறுவதைத் தடுப்பது போன்ற மோசடிகள் இடம்பெற்றதான தகவல்களும் உண்டு.
இந்தத்தேர்தலில் முக்கியத்துவம் பெற்ற விடயமாகக் கருதப்படுவது, குர்தீஸ் பின்னணியைக் கொண்ட ஐனநாயக மக்கட் கட்சி, 13 வீத வாக்குகளைப் பெற்று, 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டமையாகும். இது வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக அனைத்துலக கவனத்தைப் பெற்றிருந்தது. இதன் முக்கியத்துவத்திற்கும் அனைத்துலக கவனக்குவிப்பிற்குமுரிய காரணங்களுக்குப் பன்முகப் பரிமாணங்கள் உள்ளன.
அரசியல் கட்சியாக நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு 10 வீதத்திற்கு குறையாத வாக்குகளைப் பெறவேண்டுமென்பது துருக்கியின் தேர்தல் நியதிகளில் ஒன்று உலகிலேயே இவ்வாறு அதிகூடிய விகிதாசாரத்தைக் கொண்டுளள நாடாக துருக்கி உள்ளது. இது குர்தீஸ் மற்றும் துருக்கியின் ஏனைய சிறுபான்மையின மக்களின் உரிமைகளை நசுக்குவதற்காக திட்டமிட்ட முறையில் 1980கிளில் அமுல்படுத்தப்பட்ட ஒரு தேர்தல் சட்டமூலமாகும். குர்திஸ் மக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்கள் எந்தவகையிலும் ஜனநாயகத்தில் பங்கேற்காமல் தடுப்பதன் மூலம் அம்மக்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் உரிமைகளையும் நிராகரிப்பதே இந்த தேர்தல் நடைமுறையின் உள்நோக்கம்.
நாடாளுமன்றப் பிரவேசமானது, குர்திஸ் தரப்பினுடைய நீண்ட காலப்போராட்டங்களினதும், தூரநோக்கு மிக்க அரசியல் செயற்பாடுகள் மற்றும் மூலோபாயச் சிந்தனையின் விளைவுகளாகும்.
இதற்குமுன்னர் உதிரிகளாக துருக்கியின் நாடாளுமன்றத்தில் குர்தீஸ் பின்னணியைக் கொண்ட உறுப்பினர்கள் அங்கம் வகித்திருக்கின்றார்கள். ஒன்றில் சுயேட்சை வேட்பாளர்களாகப் போட்டியிட்டு, அல்லது துருக்கியின் இடதுசாரிக் கட்சியூடாகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகியிருந்தார்களே அன்றி, இப்படி ஒரு கட்சியாக அல்ல. 10 வீதத்தினைத் தாண்டி, 80 உறுப்பினர்களுடன், நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தினைப் பெற்று எதிர்க்கட்சிகளின் விரசையில் பலமான நிலையை அடைவது இதுவே முதற்தடவை.
மாறுகின்ற உலக ஒழுங்கிற்கும் அது தோற்றுவிக்கும் புறச்சூழல்களுக்கும் அமைய தெளிந்த அரசியல் சிந்தனையுடனும் தூரநோக்குடனும் அரசியல் உரிமைப்போராட்டத்தை வடிவமைத்து முன்னேறும் திறனும் தலைமைத்துவ ஆளுமையும் குர்தீஸ் மக்களிடம் ஒப்பீட்டளவில் பிரகாசமாக உண்டெனலாம். விடுதலைக்கான போராட்டத்தைப் பல தசாப்தங்களாகத் தொடரச்சியாக முன்னெடுத்துவரும் அவர்கள், போராட்டத்தை நீர்த்துப்போகவிடாது உயிர்ப்புடன் காப்பாற்றி வருகின்றனர். அதற்குரிய மூலோபாயங்களையும் காலத்திற்குக் காலம் வகுத்து வந்திருக்கின்றார்கள்.
பொங்குதமிழ், ஜூன் 2015