பேரன்பின் படிமங்கள்

கவிதைகளுக்கு
ஊற்றுத் திறந்துவிட்ட
அந்த விழிகளை
நினைவில் ஏந்தி நிற்கிறது
மனம்

பேரன்பின் உருவகங்களாய்
பேரழகின் படிமங்களாய்
பெருங்கனிவின் சொற்களாய்
பேரிளமையின் பிரவாகமுமாய்
காட்சிகள் அகல விரிகின்றன
நினைவுகள் துழாவிக்
கையளைந்து கொண்டிருக்கின்றன

இன்னமும் ஈரலிப்புடன்
ஊறிக்கொண்டிருக்;கின்றன
அந்தச் சொற்கள்
கனவுகளை வனைந்தபடி

அடர்மவுனத்தின் மொழிபெயர்ப்பிலிருந்து
பகிராத் தருணங்களும்
கனதி அர்த்தங்களும்
இடைவிடாது
சொட்டுகின்றன!

Leave A Reply