வல்லமையின் உயிர்

பறவை என்பது
திசையைக் கணிப்பது
தூரத்தைக் கடப்பது
தேடலை உந்துவது
துயரை ஆற்றுவது
சூட்சுமத்தை அறிவது
சட்டகத்தைத் தகர்ப்பது
வெளிகளை அளப்பது
வெறுமையை நிரப்புவது
வேட்கையைத் தணிப்பது
வர்ணங்களைத் தீட்டுவது
எனவாக…
யாதுமாகி நிற்கும்
யதார்த்தம்
பறவை என்பது
பறத்தல் என்பதற்கு
அப்பாலும் விரிந்த
வல்லமையின் உயிர்
வாழ்வின்
வானளந்த தடம்!

/09-07-19

Leave A Reply