இடிபாடுகளின் குவியலுக்கடியில்! ஒவ்வொரு நாளும் இங்கு எமது துயரங்களுக்கு அழைப்பு விடுத்தபடியிருக்கிறது ஒவ்வொரு காலடியும் இங்கு நம்பிக்கைகள் மீதான எங்கள் பெருவிருப்பினை பிணைத்தபடியிருக்கிறது அனைத்தும்; இங்கு துர்ரதிஸ்ரவசமான பஞ்சத்தின் வன்முறையை எண்ணி அழுதபடியிருக்கிறது இங்கு ரத்தம் அமைதியாக உறுதிப்படுத்தப்பட்டு துக்கம் தரையை நனைக்கிறது. அவன் இறந்துவிட்டான் கட்டட இடிபாடுகளின் குவியலுக்கடியில் புதையுண்டு போகையில் அவனது பெருமைமிகு …
சூரியனுக்கு எவர் சொல்வர்? என் நிலத்தைப் பற்றி சூரியனுக்கு எவர் எடுத்துச் சொல்வர் துன்புற்ற என் மெட்லர் மரத்தைப் பற்றி நரம்புகள் நீங்கிய என் வசந்தகாலம் பற்றி என் உதவிக்காய் நீளும் என் கரத்தினைப் பற்றிச் சூரியனிடம் யார் எடுத்துச் சொல்வர் வேர்களற்ற என் பூந்தோட்டத்தை எவர் விபரிக்கக்கூடும் வருவோர் அனைவருக்காகவும் எனது கதவுகள் திறந்திருப்பதை, …
நிறங்கள் விரிந்த கனவொன்றின் வேர் ஆழமாய் ஊன்றிக் கிடக்கிறது இன்னமும் திசைகளெங்கும் படர்ந்த மரக் கிளைகளில் அமர்ந்திருக்கிறது ஒரு பறவை பெருமூச்சும் பேருவகையும் பரிதவிப்பும் குதூகலமும் வெறுமையுமாய் உணர்வுகளில் கூடுகட்டும் சூட்சுமமறிந்த பறவை காட்சிகள் மாறித்தோன்றும் வானமாய் வாழ்க்கை அதன் ஆச்சரிய மாயத்தில் விரிகிறதென் சிறகு 11/06/19
மலைமுகடுகளைக் கழுவி வழியும் மழைநீரை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறேன் தாளகதியுடன் இறங்கும் சாரலின் ஓசை நின்றுவிடக்கூடாதென்று மனம் வேண்டுகிறது எங்கோ தூரத்திலிருந்து பறவையின் குரல் செவிகளில் விழுகிறது பகலை நலன் விசாரித்து நகர்கிறது காற்று அவ்வப்போது முகம் காட்டி மறைகிறது மாயவெயில் மஞ்சள் சிவப்பு நீலம் வெள்ளை ஊதா நிறங்களில் விரிந்து சிரிக்கின்றன கோடைப்பூக்கள் நீள்இரவின் …
கனிவைச் சிந்தும் விழிகளுள் கனவிருள் போர்த்திய வெளிகள் ஒளிர்கின்றன உதடுகளின் விரிதலில் நட்சத்திரங்கள் அணைந்திருந்த வானம் வெளிக்கிறது காதலின் பெருங்காட்டில் இலைகள் நழுவிய மரம் துளிர்க்கின்றது புன்னகைத் துளிகளில் ஸ்தம்பித்த கடல் கரை புரள்கிறது காமத்தின் பேராறாய் மழை இறங்கி நிலம் செழிக்கிறது ஏக்கத்தின் உறைதலில் அரவமற்றிருந்த காடுகள் அசைகின்றன ஒற்றை வார்த்தையின் விசாரிப்பில் வெறிச்சோடிய …
பறவை என்பது திசையைக் கணிப்பது தூரத்தைக் கடப்பது தேடலை உந்துவது துயரை ஆற்றுவது சூட்சுமத்தை அறிவது சட்டகத்தைத் தகர்ப்பது வெளிகளை அளப்பது வெறுமையை நிரப்புவது வேட்கையைத் தணிப்பது வர்ணங்களைத் தீட்டுவது எனவாக… யாதுமாகி நிற்கும் யதார்த்தம் பறவை என்பது பறத்தல் என்பதற்கு அப்பாலும் விரிந்த வல்லமையின் உயிர் வாழ்வின் வானளந்த தடம்! /09-07-19
புகை விழுங்கிக் கிடக்கிறது நகரம் பிரமாண்ட வெளிச்சங்கள் பாய்ச்சியும் இருள் கவிந்து கடக்கிறது பேரிரைச்சல்களின் வாழ்வு நகரவாடை அற்ற மனிதவாடை குறைந்த தேடல்களின் பயணங்கள் அவ்வப்போது தேவையென்றாகிறது பெருங்காடுகளின் பச்சை பேரலைகளின் வெண்மை நீர்நிலைகளின் குளுமை தழுவிவரும் காற்றுக்கு தனிவாசம் மனம் விரும்பும் இசை அங்கு கசிந்துகொண்டே இருக்கிறது அழகின் அதிசயங்களைத் தரிசிக்கக் கிடைக்கின்றது உயிர்ப்பின் …
அங்கேதான் நின்றுகொண்டிருக்கிறது காத்திருப்புகளுக்குப் பழக்கப்பட்ட மனம் நினைவூறிக் கிடக்கின்ற மனவோடை கடலாகி வியாபிக்கிறது விசும்பினிடை தோன்றிக் கொண்டிருக்கிறது ஒற்றை முகம் கண்காணாக் காடொன்றின் நிலத்தில் ஆழமாய் பதிந்துகிடக்கிறது அன்பின் ஆதிவேர் காற்றின் மேனியில் படர்கிறது தொன்ம ஏக்கத்தின் அழல் காலமற்ற வெளிகளில் எழுதப்பட்டுக்கொண்டேயிருக்கிறது வாழ்வின் கவிதை!