James Gallagher (BBC மருத்துவ மற்றும் அறிவியல் நிருபர்) தமிழில்: ரூபன் சிவராஜா பொதுவாக ஒரு தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் எடுக்கும். ஆனால் அதே அளவு கால உழைப்பிற்குரிய பெறுபேறுகளைச் சில மாதங்களில் அடையலாமென ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 2021 நடுப்பகுதியில் புதிய தடுப்பூசி கிடைக்கப்பெறும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். அப்படி நிகழும் பட்சத்தில் அதுவொரு …
இக்கட்டுரைகளின் பயன்பாடு பல வகைகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. விளிம்புநிலைக் குழந்தைகள் பற்றிய உலகத் திரைப்படங்களை, அவற்றின் வெவ்வேறுபட்ட பரிமாணங்களை, சினிமா மரபுகள் சார்ந்த வேறுபட்ட பின்னணிகளோடு வாசகர்களுக்கும், திரைப்பட ஆர்வலர்களுக்கும் அறிமுகப்படுத்துவது – அத்தோடு அந்தத் திரைப்படங்களைத் தேடிப் பார்க்கத் தூண்டுவது. சாதாரண சினிமா பார்க்கும் வாசகர்களைத் தாண்டி, தமிழ்ச்சூழலில் திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கும் பயனுடையது. …
பனிப்போருக்குப் பின்னான உலக ஒழுங்கிலும் செப்ரெம்பர் 11 இற்குப் பின்னான அமெரிக்க நலன்களை முன்னிறுத்திய மற்றுமோர் புதிய உலக ஒழுங்கிலும் அமெரிக்கா தலைமையில் உலகம் முழுவதும் மேற்குலகம் இராணுவத்தை அனுப்பி போர்களை விரிவுபடுத்தியுள்ளது. கொரோனா இன்னுமோர் பதிய உலக ஒழுங்கினைத் தோற்றுவிக்கவிருக்கின்றது. உலகம் முழுவதும் அதிகார நலன்களுக்காக அமெரிக்காவும் மேற்குலகமும் இராணுவங்களை அனுப்பி மனித குலத்தினை …
சமூக மீள்இயக்கத்திற்கான சக்கரங்களைச் சுழலவைப்பதற்கு கின்ரர்கார்டன்களும் ஆரம்பப் பாடசாலைகளும் திறக்கப்பட வேண்டியது தவிர்க்கமுடியாத யதார்த்தம். ஆனால் சமூக பொருளாதார நலன்களை முன்னிறுத்தி பாடசாலைகளை அவசரப்பட்டுத் திறக்கும் போது அவை மீண்டும் தொற்றுப்பரம்பலை அதிகரிக்க வழியேற்படுத்திவிடக்கூடாது. அப்படி நிகழுமாயின், அதனைத் தடுப்பதற்குரிய அவசரகாலத்திட்டங்களை மீண்டும் முதலிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டிவரும். நோர்வேயில் கொரோனா தொற்றுப்பரம்பல் தடுப்பு நடவடிக்கைகளைத் தளர்த்தும் …
கொரோனா நெருக்கடியை முன்வைத்து..! கியூப மருத்துவத்துறை சர்வதேச நாடுகளில் பங்களிப்பதென்பது அதன் உலகளாவிய மனிதாபிமான செயற்பாட்டின் ஒரு நீண்டகால நிலைகொள் வடிவம். இந்தப் பங்களிப்பிற்கு ஒரு நீண்ட வரலாற்றுப் பக்கம் உள்ளது. அந்த வரலாறு கியூப வெளியுறவுக் கொள்கையோடு தொடர்புபட்டது. பொதுவான வெளியுறவுக் கொள்கை மரபுகள் நலன்சார் இராஜதந்திர உறவுகளை மையப்படுத்தியது. கியூபாவின் மருத்துவப் பங்களிப்பு …
காட்டுத் தீ, காடழிப்பு, வெள்ளப்பெருக்கு போன்றன காட்டின் வகிபாகத்தைப் பலவீனப்படுத்தி எதிர்மறையான சுழற்சியை ஏற்படுத்துகின்றது. பருவகாலங்களில் சமநிலை அற்ற, இயல்பான சுழற்சி அற்ற மாற்றங்கள் நிகழ்கின்றன. வறட்சியான பகுதிகள் மேலும் வறட்சியடைகின்றன. இயற்கையின் கூறுகளை, வளங்களை மட்டுமல்ல, மனிதர்களுக்கும் நாளாந்த வாழ்விற்கும் பாரிய குந்தகங்களை ஏற்படுத்துகின்றது என்பது வெள்ளிடை மலை. உணவு, குடிநீர்த் தட்டுப்பாடு, உடல் …
பொருள்முதல்வாத உலகமயமாக்கலும் அது ஊதிப்பெருப்பித்துள்ள நுகர்வுக் கலாச்சாரமும் இயற்கையின் சமநிலையில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. சுற்றுச்சூழலை, இயற்கையை மாசுபடுத்தும் காபநீரொக்சைட், கழிவுகளின் வெளியேற்ற அதிகரிப்பு ‘Global Climate Change’ எனப்படும் பூமியின் வெப்ப அதிகரிப்பிற்கான மூலம். இயற்கையின் சமநிலையைக் குலைப்பதால் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம் என்பது ஒரு இருப்பியல் அச்சுறுத்தல். போர்களுக்கு அடுத்தபடியாக அல்லது …
Thomas Hylland Eriksen, நோர்வேஜிய சமூக மானிடவியல் பேராசிரியர் தமிழாக்கம்: ரூபன் சிவராஜா இன்றைய நெருக்கடியை விமர்சனபூர்வமான மீள்சிந்தனைக்கு பயன்படுத்தமுடியும். உலகப் பொருளாதாரத்தைத் தாங்கியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத இழைகளையும் அதன் அமைப்பியல் பாதிப்பு பற்றியும் உணர்ந்திருக்கின்றோம். இந்த நுண்ணறிதலை ஆரோக்கியமானதாக மாற்ற முடியும். பொருத்தமான தெரிவுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், கொரோனா நெருக்கடிக்குள்ளிருந்து சில நன்மைகள்; வெளிவர …
உலக ஒழுங்கினையும், அதன் அரசியலையும் தீர்மானிக்கும் சக்தியாக தகவல் தொழில்நுட்பம் விளங்குகின்றது. அதற்கு ஈடாக வேவொரு சமூக ஊடகத்தினை இன்றைய புறநிலையில் சுட்டமுடியாது. அதிலும் குறிப்பாக விரல்நுனியில் தகவல்களைப் பரப்பும் பெரும் சமூக ஊடகமாக முகநூல் விளங்குகின்றது. இன்றைய உலகின் அனைத்துவகைக் கருத்துருவாக்கங்களிலும் பெரும் செல்வாக்குச் செலுத்தும் வகிபாகத்தினை அது கொண்டிருக்கின்றது. நிறுவனங்களும் அதிகார மையங்களும் …
2008 இல் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, 2011 வாக்கிலிருந்து ஐரோப்பா மட்டத்திலும் நிதிநெருக்கடி தாக்கத்தினை ஏற்படுத்தத்தொடங்கியது. இதன் விளைவும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் பிரித்தானியாவின் முனைப்பிற்கு வலுவூட்டியது. 2013 இடம்பெற்ற தேர்தலில் கென்சர்வற்றிவ் கட்சி இதனை ஒரு வாக்குறுதியாகவும் முன்வைத்தது. ஒன்றியத்துடனான உறுப்புரிமை நிபந்தனைகள் தொடர்பாக மீள்பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுளு, 2017இற்கு முன்னர் Brexit …