– பகுதி 2 வானவில் அரங்கக் கருத்துருவாக்கம் என்பது விருப்பங்களை அவற்றின் வண்ணங்களாகக் பிரித்துக் கலைத்துப்போட்டுப் புதியதாக – விரும்பிய வழிகளில் அவற்றை மீண்டும் இணைப்பதைக் குறிக்கின்றது. மனித இயல்புக்குள் இருக்கக்கூடிய அனைத்து விதமான நுணுக்கமான பக்கங்களையும், குறிப்பாக ஒடுக்கப்படுகின்ற, தளைகளுக்குட்பட்டிருக்கின்ற பக்கங்களை வானவில் உத்திகளின் மூலம் வெளிக்கொணர முடியும். ஆரம்பத்தில் முதன்மைப்பாத்திரத்தின் குண இயல்பில் …
– பகுதி 1 அகவயப்பட்ட நிலையில் மனிதர்கள் தமது நினைவுகளையும் அனுபவங்களையும் அழகியல் சார்ந்த பரிமாணத்தில் வெளிப்படுத்த முடியும். கடந்தகால அல்லது தன்னுணர்வற்ற நிலையில் நேர்ந்த அனுபவங்களை நிகழ்காலத்திற்கு நெருக்கமாக எடுத்துவருவதற்கு கலைகளின் அழகியல்வெளி துணைநிற்கக்கூடியது. அநேக அரங்குகள் அக மோதல்களை அழகியல் வெளியில் முன்வைக்க விளைகின்றன. அதனூடாக பரந்த பரிமாணத்தை வெளிப்படுத்தவும் முடியும். அரங்கியல் …
கட்புலனாகா தியேட்டர் (Invisible Theater) பற்றிய எனது கட்டுரை (பகுதி 1). தாயகத்திலிருந்து வெளிவரும் ‘தமிழர் தளம்’ மாதமிரு முறை, ஓகஸ்ட் முதலாவது இதழில்: கட்புலனாகா தியேட்டர் (Invisible Theater) – சமூக மாற்றத்திற்கான கருவி! – ரூபன் சிவராஜா பிரேசில் நாட்டு அரங்கவியல் அறிஞர் Augusto Boal தோற்றுவித்து வளர்தெடுத்த ‘ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கம்’ (Theatre …
கட்புலனாகா தியேட்டரில் அதன் முதன்மைப் பாத்திரங்கள் பாதுகாப்புக் காரணங்களால் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் அவ்விடத்திலிருந்து வெளியேறி விடுவர். மீதமுள்ள பாத்திரங்களும், அவதானிகளும் கையாளப்பட்ட பேசுபொருளை மேற்கொண்டு விவாதித்துச் செயற்படுவர். கட்புலனாக தியேட்டர் முற்றுமுழுதாக வெற்றியடையலாம் அல்லது படுதோல்வியடையலாம். இரண்டுக்குமான இடைவெளி மிகக்சொற்பம். எந்தக் கட்டத்தில் மக்கள் தலையிட்டுக் கருத்துக்கூறுவர் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. அது …
வாழ்க்கையில் எதற்குமே பொருளில்லை¸ சத்தில்லை¸ சாரமில்லை? முன்னைய பதிவொன்றில் கடந்த வாரம் பார்த்ததாக நான் குறிப்பிட்ட இன்னொரு நாடகம் இளைஞர்களுக்கானது. நோர்வேஜிய மொழியில் இதன் தலைப்பு ‘Ingenting’. இதன் பொருள் ‘எதுவுமேயில்லை’ (பொருளற்ற வெறுமை) . இதன் பேசுபொருளும்¸ வடிவமும் இது எழுப்புகின்ற கேள்விகளும் பல்பரிமாணம் மிக்கவை. மேடை அமைப்பு¸ ஆற்றுகை, வடிவம்¸ பேசுபொருள்¸ நடிப்பு¸ …