நில அபகரிப்பினால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் 40 000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. சாதிய ஒடுக்குமுறை தொடர்வதன் விளைவாக தாழ்த்தப்பட்ட மக்கள் நிலவுரிமையற்ற நிலையில் உள்ளனர். இன ரீதியிலான பிளவுகளையும் நிலப்பிரச்சினை அதிகப்படுத்துகின்றது. முஸ்லீம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறவில்லை. பாதுகாப்பு தொடர்பான பரஸ்பர நம்பிக்கையீனம் அகலவில்லை. போருக்குப் பின்னான சூழலில் …
இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக கடந்த 2010இலிருந்து உலகின் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அரபு நாடுகளில் ஏற்பட்ட வெகுசன எழுச்சி, ஆட்சி மாற்றங்கள், மத்திய கிழக்கில் இஸ்ரேல் பலஸ்தீனப் பிரச்சினையின் இழுபறி, சிரியாவின் உள்நாட்டுப்போர், ஈராக்கில் ’இஸ்லாமிய அரசு – IS’இற்கு எதிரான அமெரிக்காவின் போர், உக்ரைன் நெருக்கடி எனப் பல்வேறு பிராந்தியங்களிலும் …
பல பத்து ஆண்டுகள் அடிமைப்படுத்தப்பட்ட சமூகமாகவும், அடிமைப் படுத்திய சமூகமாகவும் இருந்த ஒரு தேசத்தை மீண்டும் பகை முரண்களுக்குள் இட்டுச் செல்வதை முற்றிலும் தடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புணர்வோடுதான் கறுப்பின மற்றும் வெள்ளையின மக்களுக்கிடையிலான நல்லிணக்கம் முன்னிலைப்படுத்தப்பட்டது. அதனால் தான் நல்லிணக்கத்திற்கான முக்கிய குறியீடாகவும் மண்டேலா மேற்குலகத்தால் போற்றப்படுகின்றார். தென்னாபிரிக்காவில் நிலவிவந்த வெள்ளையர்களின் நிறவெறி மேலாதிக்க …