‘Mrs. Chatterjee vs. Norway’ என்ற ஹிந்திப்படம் நோர்வே ஊடகத் தளத்தில் முக்கிய பேசுபொருளானது. ராணி முகர்ஜி முதன்மைப் பாத்திரத்தில் நடித்த அத்திரைப்படம் மார்ச் 17 இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் திரையரங்குகளில் வெளியாகியது. இது ஒரு சர்ச்சைக்குரிய உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் 2011இல் நிகழ்ந்த குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவைக்கும்; …
இக்கட்டுரைகளின் பயன்பாடு பல வகைகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. விளிம்புநிலைக் குழந்தைகள் பற்றிய உலகத் திரைப்படங்களை, அவற்றின் வெவ்வேறுபட்ட பரிமாணங்களை, சினிமா மரபுகள் சார்ந்த வேறுபட்ட பின்னணிகளோடு வாசகர்களுக்கும், திரைப்பட ஆர்வலர்களுக்கும் அறிமுகப்படுத்துவது – அத்தோடு அந்தத் திரைப்படங்களைத் தேடிப் பார்க்கத் தூண்டுவது. சாதாரண சினிமா பார்க்கும் வாசகர்களைத் தாண்டி, தமிழ்ச்சூழலில் திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கும் பயனுடையது. …
சினம்கொள்! – ஈழச் சினிமா பற்றிய நம்பிக்கையை முன்னகர்த்தும் திரைப்படமாக நோக்கக்கூடியது! ஜனரஞ்சக சினிமாவுக்கும் யதார்த்த சினிமாவுக்கும் இடைப்பட்ட ஒரு வடிவத்தை தேர்ந்து கொண்டிருக்கின்றார் கனடியத் தமிழரான திரைப்பட நெறியாளர் ரஞ்சித் ஜோசப். தொழில்நுட்ப நேர்த்தியும் காட்சிக் கோர்வையின் கச்சிதமும் உணர்வு பூர்வமான கதை சொல்லலும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. காட்சிபூர்வ அழகியல், பாத்திரப்படைப்பில் அழுத்தம், தொய்வற்ற …
‘96’ – காதலித்துப் பிரிந்தவர்கள் இரண்டு தசாப்தங்களுக்குப் பின் சந்திக்கும் தருணங்களின் மென்னுர்வுகளைச் சித்தரிக்கின்றது. மனம் திறந்து உணர்வுகளையும் நினைவுகளையும் மிக நெருக்கமாகப் பகிர்ந்து கொள்கின்றார்கள். ஆனால் ‘உடல்’ மீது கட்டமைக்கப்பட்ட பிற்போக்கு விம்பத்தை நிறுவுவதிலும் புனிதப்படுத்துவதிலும் இயக்குனர் கொண்டிருக்கும் கவனம் நெருடுகிறது. ‘உடல்’ சார்ந்து ‘கலாச்சாரக் காவல்தனம்’ பல இடங்களில் வலிந்த திணிப்பாகத் தோன்றுகிறது. …
புதியவன் ராசையாவின் ‘ஒற்றைப் பனை மரம்’ திரைப்படம் நேற்று ஒஸ்லோவில் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. -‘ஒற்றைப் பனை மரம்’ பின்-முள்ளிவாய்க்கால் துயரத்தினைச் சித்தரிக்கிறது. -முதல் 15 நிமிடங்கள் வரை முள்ளிவாய்க்கால் இறுதிக் கணங்களும், இராணுவத்தின் பிடிக்குள் மக்கள் கையறுநிலையில் செல்வதும், காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. – இதன் முதன்மைப் பாத்திரம் ‘புனர்வாழ்வு’ பெற்று விடுதலையாகும் விடுதலைப் புலிகள் அமைப்பின் …