வா மீண்டும் காதலில் வீழ்வோம் தங்கபஸ்பங்களை முழுவுலகின் மீதும் பரவுவோம் புதிய வசந்தமென்றாவோம் வானத்துவாசம் காவிவரும் தென்றலை உணர்ந்திருப்போம் பூமிக்குப் பச்சை உடுத்துவோம் இள மரமொன்றின் பசும் சாறுபோல் எம்முள் வடியும் கருணை எம்மைக் காத்தருளட்டும் எங்கள் பாறை இதயங்களிலிருந்து இரத்தினக்கற்களைச் செதுக்கியெடுப்போம் காதலின் பாதைக்கு அவை ஒளிபாய்ச்சட்டும் தெளிந்து விரிகிறது காதலின் பார்வை அதனொளியினால் …
பெருங்காதல்! பிரிவின் முடிவிலும் பெருங்காதல் ஒருபோதும் சாவதில்லை பெற்றுக்கொண்ட ஸ்பரிசங்கள் மறக்கப்பட்டபின்னும் பீறிட்டுக்கிளம்புவன ஸ்பரிசங்களின் விதைகள் எண்ணற்றவை உன் ஸ்பரிசங்களின் சுவடுகளில் அவை கனிகளும் இலைகளுமாய் இலையுதிர்கால நிலப்பரப்பைப் போன்று கருஞ்சுவாலை இரவுகளின் மகிமையினால் நிரப்பப்படும் நாட்கள் போன்று… எப்பொழுதுமே காதலரைக் காட்டிலும் காதல் ஆழம்பரந்து நிலைக்கும் பார்வையினால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒளி என்னுள் காதலாய் பற்றுவதற்கு …
மெதுவாக… கொஞ்சம் மெதுவாக அம்மா! இப்படி அவசரப்பட என்ன தேவை வந்துவிட்டது எதற்காக இந்த அமைதியிழந்த படபடப்பு கொஞ்சம் மெதுவாக அம்மா!! ஒரு கப் தேநீர் வைத்துக் குடியுங்கள் எனக்குப் பக்கத்தில் வாருங்கள் என்னோடு கொஞ்சநேரம் செலவிடுங்கள் காலணிகளை அணிந்து வெளியில் சற்று உலாத்தி வருவோம் பாதைகளில் தென்படும சருகுக் குவியல்களைக் கால்களால் கிளறிவிடலாம் கலகலத்துச் …
மகிழ்கணம் ஒன்றில் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறோம் நீயும் நானும் வெளித்தெரியும் உருவங்களாக இருவர் ஆனால் ஒற்றை ஆன்மா நீயும் நானும் வழிந்தோடும் வாழ்வுநதியை இங்கு உணர்கிறோம் தோட்டத்தின் அழகுடனும் பறவைகளின் பாடலுடனும் நீயும் நானும் நட்சத்திரங்கள் எம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன ஒரு மெல்லிய பிறைநிலவு எப்படியிருக்கும் என்பதை அவற்றுக்கு நாம் காண்பிக்கின்றோம் செயலற்ற ஊகங்களை அலட்சியம் செய்தபடி …
இடிபாடுகளின் குவியலுக்கடியில்! ஒவ்வொரு நாளும் இங்கு எமது துயரங்களுக்கு அழைப்பு விடுத்தபடியிருக்கிறது ஒவ்வொரு காலடியும் இங்கு நம்பிக்கைகள் மீதான எங்கள் பெருவிருப்பினை பிணைத்தபடியிருக்கிறது அனைத்தும்; இங்கு துர்ரதிஸ்ரவசமான பஞ்சத்தின் வன்முறையை எண்ணி அழுதபடியிருக்கிறது இங்கு ரத்தம் அமைதியாக உறுதிப்படுத்தப்பட்டு துக்கம் தரையை நனைக்கிறது. அவன் இறந்துவிட்டான் கட்டட இடிபாடுகளின் குவியலுக்கடியில் புதையுண்டு போகையில் அவனது பெருமைமிகு …
சூரியனுக்கு எவர் சொல்வர்? என் நிலத்தைப் பற்றி சூரியனுக்கு எவர் எடுத்துச் சொல்வர் துன்புற்ற என் மெட்லர் மரத்தைப் பற்றி நரம்புகள் நீங்கிய என் வசந்தகாலம் பற்றி என் உதவிக்காய் நீளும் என் கரத்தினைப் பற்றிச் சூரியனிடம் யார் எடுத்துச் சொல்வர் வேர்களற்ற என் பூந்தோட்டத்தை எவர் விபரிக்கக்கூடும் வருவோர் அனைவருக்காகவும் எனது கதவுகள் திறந்திருப்பதை, …