கியூபாவுடனான அமெரிக்காவின் உறவு புதுப்பிக்கப்படுகின்ற புறநிலையானது, அமெரிக்காவின் அரசியல் அரங்கில் பதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்பது பரவலான எதிர்பார்ப்பாக இருக்கின்றது. குறிப்பாக தென்னமெரிக்க நாடுகளுக்கான நுளைவாகவும் அமெரிக்காவிற்கு இந்நிகழ்வு அமையக்கூடியது. இலத்தீன் அமெரிக்க நாடுகள் செல்வாக்கினையும் வகிபாகத்தினையும் அமெரிக்கா மீள நிலைநாட்டுவதற்குரிய சாதகமான சூழலாக இதனைப் பார்க்கலாம். நலன்சார் அரசியலும் அனைத்துலக உறவும் தற்போதைய அனைத்துலக …
1960களிலிருந்து கியூபாவின் பொருளாதாரம், நலிவடைந்த நிலையிலிருந்தபோதும், சோவியத் ஒன்றியத்தின் உடைவிற்குப் பின்னர், மேலும் வீழ்ச்சி கண்டிருந்தது. மக்களின் வாழ்க்கைத்தரம் சோவியத் உடைவிற்கு முன்னர் இருந்தததை ஒத்த நிலையில் இன்றும் உள்ளதாக சில ஆய்வுகள் சுட்டுகின்றன. ஆயினும் மூன்றாம் உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, கியூப மக்களின் வாழ்க்கைத்தரம் ஓரளவு சிறப்பாகவுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நவீன தொழில் …
அரசுகள், அவை சார்ந்த நிறுவனங்கள், அனைத்துலக உறவுகள் என்பன நலன்கள் சார்ந்த அச்சில் சுழல்வன. அவை வகுக்கப்பட்ட கொள்கைகளுக்கு அமைய நகர்வன. கொள்கை வகுப்பாளர்களின் கைகளுக்குள் அனைத்தும் அடக்கம். எனவே ஒபாமா ஆட்சியில் அனைத்துலக ரீதியில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ்ந்திருக்குமென எதிர்பார்த்திருந்தமை அரசியல் புரிதலில் நிலவும் வறுமை என்பதைத் தவிர வேறில்லை. அமெரிக்காவின் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான …
இராணுவத்தீர்வு சாத்தியமில்லை என்பதை இருதரப்பும் உணர்ந்த புறநிலையில் அரசியல் ரீதியிலேயே கொலம்பியாவின் முரண்பாடுகளுக்குத் தீர்வைக் கண்டடைய முடியுமென்று இருதரப்பும் நம்பிக்கையும் விருப்பும் கொண்டிருந்த புறநிலையிலேயே பேச்சுவார்த்தைகள் நேர்மறையான பாதையில் நகர்ந்தன. நான்கு ஆண்டுகளாக முன்னேற்றகரமாக நகர்ந்து வரும் கொலம்பிய சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான இறுதித்தீர்வு 2016 இறுதிப்பகுதியில்; எட்டப்பட்டது. கொலம்பியாவின் அரசியல் எதிர்காலத்தைத் திடப்படுத்தும் வகையிலானதும் நிலைத்து …
இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக கடந்த 2010இலிருந்து உலகின் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அரபு நாடுகளில் ஏற்பட்ட வெகுசன எழுச்சி, ஆட்சி மாற்றங்கள், மத்திய கிழக்கில் இஸ்ரேல் பலஸ்தீனப் பிரச்சினையின் இழுபறி, சிரியாவின் உள்நாட்டுப்போர், ஈராக்கில் ’இஸ்லாமிய அரசு – IS’இற்கு எதிரான அமெரிக்காவின் போர், உக்ரைன் நெருக்கடி எனப் பல்வேறு பிராந்தியங்களிலும் …
ஈழத்தமிழர்கள் மற்றும் குர்தீஸ் மக்களும் தமது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பதற்கான பொதுவாக்கெடுப்பினைக் கோரிநிற்கின்றனர். ஸ்கொட்லாண்டினை விடவும், ஏலவே தனிநாடுகளாக பொதுவாக்கெடுப்பு மூலம் பிரிந்து சென்ற கொசவோ மற்றும் மொன்ரநீக்றோ போன்ற ஏனைய நாடுகளின் தேசிய இன மக்களை விடவும் ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கு அதிகம் உரித்துடையவர்கள் என்ற பார்வை ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவுகின்றது. இனப்படுகொலைக்கு உள்ளானவர்கள், …
ஸ்கொட்லாண்ட் தனிநாடாக இறைமையுள்ள ஆட்சியதிகாரத்தோடு இருந்த தேசம். பிரித்தானியாவுடன் 300 ஆண்டுகளுக்கு மேலான பிணைப்பினைக் கொண்டுள்ள தேசமும்கூட. ஸ்கொட்லாண்ட் மக்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்ட வரலாற்றினைகக் கொண்டவர்கள். 15ஆம் நூற்றாண்டு காலப்பகுதிகள் வரை ஸ்கொட்லாண்ட் மற்றும் இங்கிலாந்து ஆகியன தனித்தனி அரசுகளாக மன்னராட்சி முறைமையைக் கொண்டு விளங்கின. அதற்கு முற்பட்ட பல்வேறு காலகட்டங்களில் இரண்டு தேசங்களுக்கிடையில் …
கொம்யூனிசத்தின் வீழ்ச்சியின் பின்னர் போலந்த் நாடு எவ்வாறானதொரு பொருளாதார வளர்ச்சியையும், அதனூடு சமூக மேம்பாட்டினையும் எட்டியதென்பதை முன்னுதாரணமாகக் கொண்டு, அவ்வாறானதொரு வளர்ச்சியைத் தாமும் அடைவதில் உக்ரைனின் தற்போதைய மேற்குலக ஆதரவு அரசாங்கம் முனைப்புக் கொண்டுள்ளது.ரஸ்யா ஒரு பிளவுபட்ட உக்ரைனை விரும்புகின்றது. அதாவது முற்றுமுழுதாக மேற்கின் செல்வாக்கிற்கு உட்பட்டுவிடாத, அதேவேளை தமது கையை மீறாத வகையிலும் இருக்க …
ஐனநாயகம், நல்லாட்சி, ஊடக-கருத்துச் சுதந்திரம் என்ற பேரில் தமது நலன்களுக்குச் சாதகமான ஆட்சியை நிறுவ வழிவகுப்பது என்பது மேற்குலக வல்லரசுகளின் நலன் சார்ந்த அரசியல் காய்நகர்த்தல்கள் என்பது கடந்த காலமும் சமகாலமும் உணர்த்தும் உண்மை. முன்னாள் சோவியத் மற்றும் யூகோஸ்லாவிய குடியரசு நாடுகளில் மேற்கு ஆதரவு அரசாங்கங்களை அமைப்பது என்பது அமெரிக்கா தலைமையிலான நகர்வுவாக இருந்து …
விடுதலைப் போராட்ட அமைப்புகளையும் பயங்கரவாத அமைப்புகளையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கும் உலக மேலாண்மைப் போக்கின் (செப் 11 தாக்குதலின் பின்னரான உலக ஒழுங்கு) விளைவாக பிகேகே அமைப்பும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றினால் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டது. அவுஸ்ரேலியா, கனடா, ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளும் அதனைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. …