சீனாவிற்கு மியான்மார் சார்ந்து தொலைநோக்கு அடிப்படையிலான இலக்குகள் உள்ளன. சீனாவின் வணிகம் மிகப்பெருமளவில் கடலை மையப்படுத்தியது. இந்துமா கடலுக்கு மலாக்கா நீரிணை ஊடான சுற்றுப்பாதையைத் தவிர்த்து நேரடிப் போக்குவரத்துப் பாதைக்கு மியான்மார் அவசியமான தளம். Rakhine கரையோரத்திலிருந்து (Port of Kyaukphyu ) சீனாவின் தென்மேற்கு மாநிலமான Yunnanஇற்கு ஆழ்கடல் வழியான எண்ணெய் மற்றும் எரிவாயு …
70 ஆண்டுகளுக்கு மேலான உள்நாட்டு முரண்பாடுகள், இராணுவ ஆட்சி வரலாற்றையும் கொண்டுள்ளது. இது மூன்றாவது இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு. 1962இலிருந்து 2011 வரையான 50 ஆண்டுகள் இராணுவ ஆட்சிக்குள் இருந்தது. 2011இலிருந்து உள்ளக மற்றும் வெளியக அழுத்தங்கள், மற்றும் பொருளாதார நலன்கள் சார்ந்த தெரிவுகள் ‘ஜனநாயகப் பாதை’யில் நகர்வதற்கான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியிருந்தது. 2021 பெப்ரவரி முதலாம் …
வீக்கிலீக்சின் அம்பலப்படுத்தல்கள் – உலகின் ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்திகளின் உண்மை முகத்தினை வெளிப்படுத்தி வந்தமை அவர்களுக்குக் கசப்பானதே. முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள், சர்வதேச பெரு வணிகமையங்கள் தமது இருண்டதும் சட்டவிரோதமானதுமான பக்கங்களை மூடிமறைக்கவே விரும்புகின்றன. தீவிர புலனாய்வு ஊடகத்துறையினால் தமது மீறல்கள் அம்பலப்படுத்தப்படுவதை அவர்கள் ஒருபோதும் விரும்புவதுமில்லை. அதுவே Assangeஐ பழிவாங்குவதற்கான அமெரிக்காவின் முனைப்பிற்குரிய காரணி …
அமெரிக்காவிடம் அவர் கையளிக்கப்படுவதைத் தடுக்கும் தீர்ப்பின் பின்னணியில், Assange பின்னணி குறித்தும் வீக்கிலீக்ஸ் தோற்றம் வளர்ச்சி பற்றியும், அவர் எதிர்கொண்டுள்ள சட்டச் சிக்கல்கள் தொடர்பாகவும் இக்கட்டுரை பேசுகின்றது. இன்றைய யுகம் என்பது தகவல் யுகம். சமகாலத்தில் காணக்கூடிய எந்தவொரு பலத்தைவிடவும் பன்மடங்கு வலிமையானதும் உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும் சக்தியும் தகவல் தொழில்நுட்பத்திற்கு உண்டு. அதனை உணர்த்திய …
‘விலகல் உடன்படிக்கை’ (Withdrawal agreement) வேறு – பின்-விலகல் உடன்படிக்கை (Post-brexit trade deal) என்பது வேறு. விலகல் உடன்படிக்கை என்பது ஏலவே இருந்த நடைமுறைகள், வணிக உறவுகளிலிருந்து வெளிவருவதற்கானது. அவற்றை ஒரு ஒழுங்குமுறைக்கேற்ப முறித்துக் கொள்வது தொடர்பானது. பின்-விலகல் உடன்படிக்கை என்பது எதிர்கால வணிக உறவுகளுக்கான பரஸ்பர இணக்கப்பாடுகளைக் குறிப்பது. அதாவது விலகலுக்குப் பின்னரான …
சோதியாவின் (சிவதாஸ் சிவபாலசிங்கம்) காலப்பெருவலி கவிதை நூல் அறிமுக அரங்கு ஒஸ்லோவில் 30-08-20 இடம்பெற்றத. இந்நிகழ்வின் முன்னேற்பாடுகளில் பங்களித்தபோதும் தவிர்க்கமுடியாத தனிப்பட்ட காரணத்தினால் நிகழ்வில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும் முழுநிகழ்வினையும் காணொளியில் பார்க்கக்கிடைத்தது. அபிசன் அன்பழகன் துல்லியமான ஒலியுடனான ஒளிப்பதிவினைச் செய்திருக்கின்றார். இந்நிகழ்வு இரண்டு காரணங்களால் முக்கியத்துவம் பெறுகின்றது. கொரோனா நெருக்கடி காரணமாக நீண்ட …
– பகுதி 2 வானவில் அரங்கக் கருத்துருவாக்கம் என்பது விருப்பங்களை அவற்றின் வண்ணங்களாகக் பிரித்துக் கலைத்துப்போட்டுப் புதியதாக – விரும்பிய வழிகளில் அவற்றை மீண்டும் இணைப்பதைக் குறிக்கின்றது. மனித இயல்புக்குள் இருக்கக்கூடிய அனைத்து விதமான நுணுக்கமான பக்கங்களையும், குறிப்பாக ஒடுக்கப்படுகின்ற, தளைகளுக்குட்பட்டிருக்கின்ற பக்கங்களை வானவில் உத்திகளின் மூலம் வெளிக்கொணர முடியும். ஆரம்பத்தில் முதன்மைப்பாத்திரத்தின் குண இயல்பில் …
– பகுதி 1 அகவயப்பட்ட நிலையில் மனிதர்கள் தமது நினைவுகளையும் அனுபவங்களையும் அழகியல் சார்ந்த பரிமாணத்தில் வெளிப்படுத்த முடியும். கடந்தகால அல்லது தன்னுணர்வற்ற நிலையில் நேர்ந்த அனுபவங்களை நிகழ்காலத்திற்கு நெருக்கமாக எடுத்துவருவதற்கு கலைகளின் அழகியல்வெளி துணைநிற்கக்கூடியது. அநேக அரங்குகள் அக மோதல்களை அழகியல் வெளியில் முன்வைக்க விளைகின்றன. அதனூடாக பரந்த பரிமாணத்தை வெளிப்படுத்தவும் முடியும். அரங்கியல் …
James Gallagher (BBC மருத்துவ மற்றும் அறிவியல் நிருபர்) தமிழில்: ரூபன் சிவராஜா பொதுவாக ஒரு தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் எடுக்கும். ஆனால் அதே அளவு கால உழைப்பிற்குரிய பெறுபேறுகளைச் சில மாதங்களில் அடையலாமென ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 2021 நடுப்பகுதியில் புதிய தடுப்பூசி கிடைக்கப்பெறும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். அப்படி நிகழும் பட்சத்தில் அதுவொரு …
இக்கட்டுரைகளின் பயன்பாடு பல வகைகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. விளிம்புநிலைக் குழந்தைகள் பற்றிய உலகத் திரைப்படங்களை, அவற்றின் வெவ்வேறுபட்ட பரிமாணங்களை, சினிமா மரபுகள் சார்ந்த வேறுபட்ட பின்னணிகளோடு வாசகர்களுக்கும், திரைப்பட ஆர்வலர்களுக்கும் அறிமுகப்படுத்துவது – அத்தோடு அந்தத் திரைப்படங்களைத் தேடிப் பார்க்கத் தூண்டுவது. சாதாரண சினிமா பார்க்கும் வாசகர்களைத் தாண்டி, தமிழ்ச்சூழலில் திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கும் பயனுடையது. …