கவிதைகளுக்கு ஊற்றுத் திறந்துவிட்ட அந்த விழிகளை நினைவில் ஏந்தி நிற்கிறது மனம் பேரன்பின் உருவகங்களாய் பேரழகின் படிமங்களாய் பெருங்கனிவின் சொற்களாய் பேரிளமையின் பிரவாகமுமாய் காட்சிகள் அகல விரிகின்றன நினைவுகள் துழாவிக் கையளைந்து கொண்டிருக்கின்றன இன்னமும் ஈரலிப்புடன் ஊறிக்கொண்டிருக்;கின்றன அந்தச் சொற்கள் கனவுகளை வனைந்தபடி அடர்மவுனத்தின் மொழிபெயர்ப்பிலிருந்து பகிராத் தருணங்களும் கனதி அர்த்தங்களும் இடைவிடாது சொட்டுகின்றன!
பறவையின் சிறகுகளை அறிவதில்லை மனச் சிறைகளுக்குப் பழக்கப்பட்ட மனிதர்கள் பறவையின் வெளிகளை அறிவதில்லை சட்டகங்களுக்குள் நிர்ப்பந்திக்கப்பட்ட மனிதர்கள் பறவையின் அகங்களை அறிவதில்லை நரிகளின் தந்திரங்களைத் தத்தெடுத்துத் தமதாக்கிய மனிதர்கள் பறவையின் மவுனங்களை அறிவதில்லை இரைச்சல்களுக்கு இசைந்துவிட்ட மனிதர்கள் பறவையின் மொழிகளை அறிவதில்லை கூடிப்பிதற்றுதல்களில் குளிர்காயும் மனிதர்கள் பறவையின் தேடலை அறிவதில்லை குண்டுச் சட்டிக்குள் குதிரையென்றாகிய மனிதர்கள் …
இரவுகருஞ்சுவாலையை முகத்தில் பூசியிருக்கிறது இரவு இருளை மடியெங்கணும் பரவியிருக்கிறது பகல் குளிரை அள்ளித் தலைமுடிந்திருக்கிறது காலம் இலையுதிர்த்த மரங்கள் பனிப்புழுதி அப்பிய கிளைகள் முகில்முகடுகளுக்குள் ஒளிந்திருக்கின்றன நட்சத்திரங்கள் திண்மப்பனி மூடிய வீதிகளிலும் பனிக்குன்றுகளிலும் உறைந்திருக்கக்கூடும் உனதும் எனதுமான பகிரத்தவறிய வாழ்தல்
பறவைகள் வான்வெளியைச் சிறகுகளால் அளக்கும் மலைகளை உரசும் வனங்களில் இளைப்பாறும் எல்லைகளை நுண்ணறியும் கடல் தாண்டும் காற்றை எதிர்க்கும் எதிர்வரும் இடர்களை சிறகுகளால் இடறிவிடும் இருளைச் சிறைப்பிடிக்கும் ஒளியைப் பருகும் திசையைக் கணிக்கும் உயரப் பறக்கும் உலகைத் தரிசிக்கும் புல்லுருவிகள் அதன் காற்தூசு அதன் சிறகிலிருந்து உதிரும் ஒற்றை இறகுகூட எதையும் சட்டை செய்வதில்லை நீ …
நெருக்கத்தின் விலைமதிப்பற்ற ஓவியமொன்றை காலத்தின் சுவர்களில் வரைந்துகொண்டே இருக்கிறது தூரங்களின் தூரிகை வர்ணங்களின் கசிவுகளை ஏந்திக்கொண்ட வாழ்வு ஜீவநதியின் ஊற்றுத்துளிகளை தெளித்துக் கொண்டிருக்கிறது நினைவுத்தாள்களில் முகில்களின் முகடு பிரித்து இரவுகளின் முகத்தில் நிறம்பூசி வான் நிறைக்கிறது அந்த ஓவியம்! 26/09/18
இரவுகள் நேசிப்பிற்குரியன இரவுகள் நிர்வாணமானவை இரவுகள் வெட்கமறியாதவை கருமையழகின் உச்சமாய் காட்சிகள் விரிந்து கிடக்கின்றன நிசப்தங்களின் இழைகள் கொண்டு இரவின் பாடல் இசைக்கப்படுகிறது நிதானத்தின் அடவுகள் கொண்டு இரவின் நடனம் ஆடப்படுகிறது பேரமைதியின் ஒளிச்சிதறல்களை நட்சத்திரங்கள் அனுப்புகின்றன பகல்களின் பரபரப்பில் முடிச்சிறுகிய சொற்களின் புதிர்களை இரவின் விரல்கள் அவிழ்க்கின்றன நித்தியமான இரவுகளின் மடியில் கனவுகளின் சிறகுகள் …
தீபமொன்று புதிரான பாடலை இசைக்கத் தொடங்கியிருக்கிறது நட்சத்திரங்களின் கண்கள் பதட்டத்துடன் அசைந்துகொண்டிருக்கின்றன இரவுக்குத் துணையாய் இருளைத் தாலாட்டுகிறது தீபத்தின் தீ நாக்கு இலையற்ற உயிர்க்கிளைகளின் உச்சியில் அமர்ந்து உரசிப் பேசுகிறது நிலவு நினைவுகளின் ஸ்பரிசத்தில் நேசம் சிலிர்க்க அதன் சூட்டில் உறைமனம் கரைய ஒளித்துகள்கள் நிலவேறிக் கொட்டுகின்றன வானக்கருமை வழிய நீர்த்திரை நீலம் பரவ மழை …
உனக்குப் பிடித்த அந்த இசையை இன்னும் நான் நிறுத்தவே இல்லை யுகப்பாடலாய் என்னுள் ஒலித்துக் கொண்டிருக்கிறது விசித்திரச் சிறகணிந்து உன் வானில் உலவுகிறது என் பறவை காற்றின் திசைகளில் உனதும் எனதுமான நீயும் நானும் மட்டுமே அறிந்த எம் காலத்தின் சுவடுகள் அடை மழையென்ன நெருக்கும் இருளின் கனதியென்ன அடர் பனியென்ன எதுவுமே பாெருட்டில்லை நினைவுகளின் …
மலைமுகடுகளைக் கழுவி வழியும் மழைநீரை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறேன் தாளகதியுடன் இறங்கும் சாரலின் ஓசை நின்றுவிடக்கூடாதென்று மனம் வேண்டுகிறது எங்கோ தூரத்திலிருந்து பறவையின் குரல் செவிகளில் விழுகிறது பகலை நலன் விசாரித்து நகர்கிறது காற்று அவ்வப்போது முகம் காட்டி மறைகிறது மாயவெயில் மஞ்சள் சிவப்பு நீலம் வெள்ளை ஊதா நிறங்களில் விரிந்து சிரிக்கின்றன கோடைப்பூக்கள் நீள்இரவின் …
தெருவோர மரங்களிலும் அதன் கிளைகளிலும் உறைபனியிலும் உதிராத ஊசி இலைகள் சிலவற்றிலும் கட்டடங்கள் சுவர்கள் வெளிகள் தரிப்பிடங்கள் யாவற்றிலும் சில சொற்கள் எம் மவுனங்கள் விவாதங்கள் காத்திருப்பின் தருணங்கள் இப்போதும் அங்கே சிந்திக்கிடக்கக் கூடும் நீ அறிந்தவைகளும் அறியாதவைகளும் அறிய முற்படாதவைகளுமான என் இரகசியங்களை அவை தம் நினைவில் வைத்திருக்கக்கூடும்