ஒரு பறவை

நிறங்கள் விரிந்த
கனவொன்றின் வேர்
ஆழமாய் ஊன்றிக் கிடக்கிறது
இன்னமும்
திசைகளெங்கும் படர்ந்த
மரக் கிளைகளில்
அமர்ந்திருக்கிறது
ஒரு பறவை
பெருமூச்சும்
பேருவகையும்
பரிதவிப்பும்
குதூகலமும்
வெறுமையுமாய்
உணர்வுகளில் கூடுகட்டும்
சூட்சுமமறிந்த பறவை
காட்சிகள்
மாறித்தோன்றும்
வானமாய்
வாழ்க்கை
அதன் ஆச்சரிய மாயத்தில்
விரிகிறதென் சிறகு

11/06/19

Leave A Reply