குர்தீஸ் போராட்டமும் சமாதான முனைப்பும்
விடுதலைப் போராட்ட அமைப்புகளையும் பயங்கரவாத அமைப்புகளையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கும் உலக மேலாண்மைப் போக்கின் (செப் 11 தாக்குதலின் பின்னரான உலக ஒழுங்கு) விளைவாக பிகேகே அமைப்பும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றினால் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டது. அவுஸ்ரேலியா, கனடா, ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளும் அதனைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. 2008ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் பிகேகே பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை என தீர்ப்பளித்திருந்தது..
பி.கே.கே அமைப்பினை முற்றுமுழுதாக அழித்தொழிக்கின்ற துருக்கியின் இலக்கு நிறைவேறாத புறநிலையிலும், கடந்த 30 ஆண்டுகளாக முயற்சிக்கப்பட்ட இராணுவ மூலோபாயத்தினூடாக முரண்பாட்டுக்கான தீர்வு சாத்தியமில்லை என்பதை தலைமையிலான துருக்கிய அரசாங்கம் உணர்ந்து கொண்டுகள்ள புறநிலையிலும் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
துருக்கிய அரசாங்கத்துடன் ஏற்பட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய,‘PKK’ என அறியப்பட்ட குர்திஸ் விடுதலை அமைப்பு தனது போராளிகளை துருக்கிப் பிரதேசங்களிலிருந்து, அதாவது வட குர்திஸ்தானில் இருந்து தென் குர்திஸ்தானுக்கு (வடக்கு ஈராக்கிற்கு) இம்மாத (மே 2013) ஆரம்பத்திலிருந்து நகர்த்தத் தொடங்கியுள்ளது. 1500க்கும் மேலான போராளிகள் கால்நடையாக Qandil-மலைத் தொடர்களில் உள்ள தமது தளங்களுக்குப் பின்வாங்கிச் செல்லத் தொடங்கியுள்ளனர். துருக்கியச் சிறையில் இருக்கும் பி.கே.கே அமைப்பின் தலைவர் Abdullah Ocalan அவர்களுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மூன்று தசாப்தங்களுக்கு மேல் நீடித்து வந்துள்ள குர்திஸ் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாடு அதுவென்ற ஊகங்கம் ஊடகங்களில் வெளிவந்தன.
பிகேகே அமைப்பு துருக்கியப் பிரதேசங்களிலிருந்து வெளியேறிய பின்னணியில் இருதரப்பிற்குமிடையிலான சதாதான முயற்சி மற்றும் குர்தீஸ் விடுதலைப் போராட்டத்தின் தோற்றம், வளர்ச்சி, சமகாலம் பற்றிச் சுருக்கமாக நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மூன்று படிநிலைகளாக சமாதான முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளதான தகவல்கள் வெளிவந்துள்ளன. முதலாவது கட்டமாக போராளிகளின் பின்வாங்கல் நடவடிக்கையும், அடுத்ததாக துருக்கி நாட்டின் அரசியலமைப்பு மாற்றங்களுக்கு உட்படுத்தப்படவுமுள்ளது. அதில் குர்தீஸ் மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேணடும் என இணக்கம் காணப்பட்டுள்ளது. குர்திஸ் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் பங்கேற்புடன் ஜனநாயக முறையில் அரசியலமைப்பு மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அரசியல் யாப்பு மாற்றத்தின் மூலம் குர்தீஸ் மக்களின் இருப்பும் விடுதலை உரிமையும் அங்கீகரிக்கப்பட வேண்டும், அரசியல், மொழி, பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேணடும் என குர்திஸ் போராட்ட அமைப்பினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவது படி நிலையாக குர்தீஸ் போராளிகளினதும் பிகேகே அமைப்பினதும் எதிர்காலம் தொடர்பான முடிவுகள் ஆராயப்படவுள்ளன. இதில் ஆயுதக் களைவு தொடர்பாக துருக்கிய அரசாங்கத்தால் தொடர்ச்சியாக கோரப்பட்டு வருகின்றது. ஆனால் இது மிகச் சிக்கலான கட்டமாகவே அமையும். முதலிரண்டு படிநிலைகளின் நகர்வு, அதில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்களே மூன்றாவது கட்டத்தைத் தீர்மானிக்கும் என்பதே தற்போது கூறக்கூடியதாகும்.
அரசியல் ஜனநாயக உரிமைகளுக்கான உத்தரவாதம் உறுதிப்படுத்தப்படும் வரை ஆயுதங்களைக் கைவிடுவதென்பது சாத்தியமில்லை என்பதே குர்தீஸ் விடுதலை அமைப்பின் நிலைப்பாடாகும். பொதுவாக பேச்சுவார்த்தைக்குச் செல்லும் அனைத்து விடுதலை அமைப்புகளின் நிலைப்பாடு இதுவாகவே இருந்திருக்கின்றது.
14 மில்லியன் குர்திஸ் இனத்தவர்கள் துருக்கியில் வாழ்கின்றனர். துருக்கியின் மொத்த மக்கட்தொகையில் இது ஏறத்தாழ 20 விழுக்காடாகும். தவிர ஈராக், ஈரான், அர்மேனியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலும் குர்தீஸ் மக்கள் பாரம்பரியமாக வாழ்கின்றனர். குர்திஸ் மக்களின் மொத்தத் தொகை 30 மில்லியன்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. 30 மில்லியன் மக்கட்தொகையைக் கொண்ட குர்திஸ் இனம், மத்திய கிழக்கின் 4வது பெரிய மக்கள் இனமாக விளங்குகின்றது. துருக்கி, ஈரான், ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் எல்லைகளை அண்டிய நிலப்பரப்புகளை உள்ளடக்கியதே குர்திஸ்தான் தேசமாகும்.
பிகேகே அமைப்பின் தலைவர் Abdullah Ocalan 1999இல் துருக்கிய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு கடந்த 14 ஆண்டுகளாக துருக்கியில் சிறை வைக்கப்பட்ட நிலையிலுள்ளார். Ocalan கைதுசெய்யப்பட்டதை அடுத்து இரு தரப்பிற்குமிடையில் பல தடவைகள் போர்நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டதும் பின்னர் அவை மீறப்பட்டதும் மாறிமாறி நிகழ்ந்துள்ள. தற்போது ஏற்பட்டுள்ள போர்நிறுத்தம் சற்று மாறுபட்டதாக, நின்று நிலைக்கக் கூடியதாக, அரசியல் தீர்வுக்கு இட்டுச்செல்லக்கூடியதாக இருதரப்பினாலும் நம்பப்படுவதான தோற்றம் தெரிகின்றது.
வட-ஈராக்கின் குர்தீஸ் பிரதேசத்தில் பிகேகே தலைமையிலான தனி நிர்வாகம் நடைமுறையிலுள்ளது. வட ஈராக்கின் Quandil மலைத் தொடர்கள் பிகேகே இயக்கத்தின் முக்கிய தளமாக விளங்குகின்றது. குர்தீஸ் தேசியத்தை முன்னிறுத்திய சோசலிசத் தனிநாட்டைக் கட்டியமைப்பதே குர்திஸ் விடுதலை அமைப்பின் கோட்பாட்டு இலக்காக வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இஸ்லாமியப் பின்னணியைக் கொண்டிருக்கின்ற போதும், மொழிவழித் தாயக உரிமையை முன்னிறுத்திய தனிநாட்டுக்கான போராட்டமாக விடுதலைப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெண்களை ஆயுதப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ள முற்போக்கான பாத்திரத்தை பெண்களுக்கு வழங்கியுள்ளமை கவனிப்பிற்குரியதாகின்றது. பெண்களுக்கெதிரான கடுமையான கட்டுப்பாடுகள், சமூக அழுத்தங்கள் விதிக்கப்பட்ட ஒரு பின்னணியை உடைத்து பெண்களைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்ட அமைப்பு என்ற வகையில் பிகேகே மற்றம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கிடையில் ஒற்றுமைகள் காணக்கிடைக்கின்றன.
புவியியல் அமைவிட அடிப்படையில் துருக்கியின் தென் கிழக்கு, ஈராக்கின் வடகிழக்கு பிரதேசம், சிரியாவின் வடகிழக்கு மற்றும் ஈரானின் வடமேற்கு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய குர்தீஸ் மக்கள் பாரம்பரியமாக செறிந்து வாழும் குர்திஸ்தான் தாயகமாகக் குர்திஸ் விடுதலை அமைப்பினால் வலியுறுத்தப்பட்டு, தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனபோதும் தற்போது இந்தக் கோரிக்கையில் சற்று நெகிழ்வுப் போக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. துருக்கியில் வாழும் குர்திஸ் மக்களுக்கான அரசியல், பொருளாதார பண்பாட்டு உரிமைகள் என்ற கோரிக்கையாக அது மாற்றமடைந்துள்ளது.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வரும், பிகேகே அமைப்பு, அதன் தலைவர் கைதுசெய்யப்பட்ட பின்னர், உட்பூசல்கள், பிளவுகள் வந்த போதும் கூட விடுதலைப் போராட்ட அமைப்பினை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லாமல் பேணி வந்துள்ளது.
1978களில் மார்க்சிய – லெலினிய சிந்தனை மரபினை அடிப்படையாகக் கொண்ட குர்தீஸ் தொழிலாளர் அமைப்பாகத் தோற்றம் பெற்ற பிகேகே 1984 காலப்பகுதியில் துருக்கி அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை விரிவு படுத்தத் தொடங்கியது. ஆரம்ப காலத்திலிருந்தே, பெண்களுக்கு அந்த அமைப்பில் முக்கிய இடம் அளிக்கப்பட்டு வந்துள்ளது. மத்திய குழு, அரசியல் பிரிவு மற்றும இராணுவப் பிரிவில் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க இடமளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலையில் துருக்கிப் பாராளுமன்றத்தில் குர்தீஸ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான Pநயஉந யனெ னுநஅழஉசயஉல Pயசவலயின் நிர்வாகத்தல் 40விழுக்காடு பெண்கள் என்பதோடு அக்கட்சியின் தலைமை என்பது ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் தலைவர்களாகக் கொண்ட கூட்டுத்தலைமையாக விளங்குகின்றது.
இதுவரை 45 000இற்கும் மேலான குர்தீஸ் மக்கள் போரினால் கொல்லப்பட்டுள்ளனர். 1990களில் தீவிரப்படுத்தப்பட்ட போர் நடவடிக்கைகள் இடம்பெற்றன. குர்தீஸ் பிரதேசங்களில் பாரிய படை நடவடிக்கைகள் துருக்கிய அரச படைகளால் நடாத்தப்பட்டன. கிராமங்கள் அழிக்கப்பட்டன. மக்கள் பாரிய இடப்பெயர்வுகளுக்கு முகம் கொடுத்தனர். 1990களிலேயே தனிநாட்டுக் கோரிக்கை பின்தள்ளபபட்டு, குர்தீஸ் பிரதேசங்களுக்கு மேலதிக சுயாட்சி (More Automoni) ) என்ற அளவில் அரசியல் தீர்வு தொடர்பான விட்டுக்கொடுப்பு PKK தரப்பிலிருந்து வெளிப்படுத்தப்பட்டது.
2009 – 2011 இடைப்பட்ட காலப்பகுதிகளில் நோர்வேயின் அனுசரணையுடன் துருக்கி அரசாங்கத் தரப்கிற்கும் Pமுமு அமைப்பிற்குமிடையில் பல சுற்று இரகசியப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதான தகவல்களும் வெளியாகியுள்ளன. ஆனால் 2011 ஜுன் மாதம் துருக்கிப் படைகளுக்கும் Pமுமுவிற்குமிடையில் இடம்பெற்ற மோதலில் 14 துருக்கிப் படைகள் கொல்லப்பட்டதையடுத்து பேச்சுவாரத்தைகள் முறிவுற்றன. இதனையடுத்து இருதரப்பும் ஒன்றையொன்று குற்றம் சாட்டி பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகின.
விடுதலைப் போராட்ட அமைப்புகளையும் பயங்கரவாத அமைப்புகளையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கும் உலக மேலாண்மைப் போக்கின் (செப் 11 தாக்குதலின் பின்னரான உலக ஒழுங்கு) விளைவாக பிகேகே அமைப்பும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றினால் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டது. அவுஸ்ரேலியா, கனடா, ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளும் அதனைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. 2008ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் பிகேகே பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை என தீர்ப்பளித்திருந்தது..
பி.கே.கே அமைப்பினை முற்றுமுழுதாக அழித்தொழிக்கின்ற துருக்கியின் இலக்கு நிறைவேறாத புறநிலையிலும், கடந்த 30 ஆண்டுகளாக முயற்சிக்கப்பட்ட இராணுவ மூலோபாயத்தினூடாக முரண்பாட்டுக்கான தீர்வு சாத்தியமில்லை என்பதை தலைமையிலான துருக்கிய அரசாங்கம் உணர்ந்து கொண்டுகள்ள புறநிலையிலும் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
அத்தோடு போரை முடிவுக்குக் கொண்டுவந்து, முரண்பாட்டிற்குத் தீர்வு காண்பது தலைமை அமைச்சர் சுநஉநி வுயலலip நுசனழபயn தலைமையிலான தற்போதைய அரசாங்கக் கட்சியின் (துரளவiஉந யனெ னுநஎநடழிஅநவெ pயசவல) தேர்தல் அறுவடைக்குச் சாதகமான விளைவுகளைத் தரக்கூடிய வியூகமாககப் பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அடுத்த ஆண்டு துருக்கியில் அரச தலைவர் தேர்தல் இடம்பெறவுள்ளது. அதேவேளை படைபலம் பொருந்திய துருக்கியை, இராணுவ ரீதியில் வெல்வது கடினமென்ற யதார்த்தத்தை பி.கே.கே உணர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குர்தீஸ் போராட்டத்திற்கான தோற்றம் என்று நோக்கும் போது நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். முதலாம் உலகப்போருக்குப்பின்னர், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகியன குர்தீஸ் தனிநாட்டினை அமைப்பதற்கு உதவுவதாக வாக்குறுதி அளித்திருந்தன. ஆனால் துருக்கியின் மேலாண்மைக்குள் தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரம் வைக்கப்பட்டிருந்ததன் விளைவாக காலப்போக்கில் ஆயதப் போராட்டம் வெடித்தது.
போர் நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது ஒருபுறமிருக்க, மூன்று தசாப்தங்களுக்கு மேலான விடுதலைப் போராட்டம் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகின்ற நிலையை அடைவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்பது குர்தீஸ் போராட்ட செல்நெறியின் வெற்றியாகக் கருதக்கூடியது.
பொங்குதமிழ், மே 2013