அந்த ஓவியம்!

நெருக்கத்தின் விலைமதிப்பற்ற ஓவியமொன்றை
காலத்தின் சுவர்களில்
வரைந்துகொண்டே இருக்கிறது
தூரங்களின் தூரிகை
வர்ணங்களின் கசிவுகளை
ஏந்திக்கொண்ட வாழ்வு
ஜீவநதியின் ஊற்றுத்துளிகளை
தெளித்துக் கொண்டிருக்கிறது
நினைவுத்தாள்களில்
முகில்களின் முகடு பிரித்து
இரவுகளின் முகத்தில் நிறம்பூசி
வான் நிறைக்கிறது
அந்த ஓவியம்!

26/09/18

Leave A Reply