இரவுகள் நேசிப்பிற்குரியன

இரவுகள் நேசிப்பிற்குரியன
இரவுகள் நிர்வாணமானவை
இரவுகள் வெட்கமறியாதவை
கருமையழகின் உச்சமாய்
காட்சிகள் விரிந்து கிடக்கின்றன
நிசப்தங்களின் இழைகள் கொண்டு
இரவின் பாடல்
இசைக்கப்படுகிறது
நிதானத்தின் அடவுகள் கொண்டு
இரவின் நடனம்
ஆடப்படுகிறது
பேரமைதியின் ஒளிச்சிதறல்களை
நட்சத்திரங்கள் அனுப்புகின்றன
பகல்களின் பரபரப்பில்
முடிச்சிறுகிய சொற்களின் புதிர்களை
இரவின் விரல்கள் அவிழ்க்கின்றன
நித்தியமான இரவுகளின் மடியில்
கனவுகளின் சிறகுகள்
பரவிக்கிடக்கின்றன
கனவுகளின் நீட்சிக்கேற்ப சிறகுகளைத்
தேர்வுசெய்யென உத்தரவிடுகிறது
இரவின் முகமும் அகமும்
அறிந்த ஒற்றைக் குரல்!

-25/10/18

Leave A Reply