கியூப – அமெரிக்க பகைமை முடிவு: அமெரிக்காவின் தனிமைப்படுத்தல் மூலோபாயம் தோல்வி பகுதி 1

1960களிலிருந்து கியூபாவின் பொருளாதாரம், நலிவடைந்த நிலையிலிருந்தபோதும், சோவியத் ஒன்றியத்தின் உடைவிற்குப் பின்னர், மேலும் வீழ்ச்சி கண்டிருந்தது. மக்களின் வாழ்க்கைத்தரம் சோவியத் உடைவிற்கு முன்னர் இருந்தததை ஒத்த நிலையில் இன்றும் உள்ளதாக சில ஆய்வுகள் சுட்டுகின்றன. ஆயினும் மூன்றாம் உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, கியூப மக்களின் வாழ்க்கைத்தரம் ஓரளவு சிறப்பாகவுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நவீன தொழில் வளங்கள், உற்பத்திகள் வளங்கள் மற்றம் தொழில்நுட்பங்கள் பெருக்கப்படாத புறநிலையே கியூபா பொருளாதாரத்தில் வளர்ச்சி காண முடியாமைக்கான முதன்மைக் காரணிகளாகும்.

இராஜதந்திர உறவின் மீள்மலர்வு
அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையில் 55 ஆண்டுகளாக நிலவிவந்த கடுமையான பகைமை முடிவுக்கு வந்துள்ளது (2015). இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவு புதுப்பிக்கப்படும் சூழல் கனிந்துள்ளது. இருதரப்பும் இதற்கான இணக்கப்பாட்டினைப் பகிரங்கமாக அறிவித்துள்ளன. கியூபாவைத் தனிமைப்படுத்துகின்ற அமெரிக்காவின் அரசியல் மூலோபாயம் முற்றுமுழுதாகத் தோல்வியடைந்தமை நடைமுறையில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசதலைவர் பராக் ஒபாமா பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளமை கியூபாவிற்கு கிடைத்த இராஜதந்திர வெற்றியாகக் கணிக்கப்படுகின்றது.

அமெரிக்காவிற்கும் கியூபாவிற்குமிடையில் மலர்ந்துள்ள இராஜதந்திர உறவின் பின்னணியில், கியூபாவினுடைய வரலாறு, 1959இல் நிகழ்ந்த கியூபப்புரட்சி, பிடல் கஸ்ரோ தலைமையிலான கொம்யூனிச கியூபா, அமெரிக்க-கியூப உறவில் 55 ஆண்டுகள் நிலவிய பாரிய முறுகல் மற்றும் முரண்பாடுகள் பற்றிய பார்வையைப் பதிவு செய்கிறது இக்கட்டுரை.

கரிபியன் பெருங்கடலை அமைவிடமாகக் கொண்டுள்ள கியூபா கடலால் சூழப்பட்ட தீவு. கியூபாவின் வடக்கில் அமெரிக்கா அமைந்துள்ளது. கியூப கரையோரத்திலிருந்து வெறும் 145 கி.மி தூரத்தில் அமெரிக்காவின் மியாமி மாநிலம் அமைந்துள்ளது. 109810 சதுர கி.மி நிலப்பரப்பினைக் கொண்டுள்ள கியூபாவிற்குள் பல சிறுசிறு தீவுகள் அமைந்துள்ளன. 11,3 மில்லியன் மக்கட்தொகையைக் கொண்டுள்ள கியூபாவின் தலைநகர் ஹவானாவில் 2 மில்லியன் மக்கள் வாழ்கினறனர்.

கஸ்ரோவின் கியூபா
1898இற்கு முற்பட்ட பெரும்பகுதி ஸ்பானிய கொலனித்துவ ஆட்சிக்குட்பட்டதாக இருந்துள்ளது. பிடல் கஸ்ரோ மற்றும் சே குவேரா ஆகியோர் தலைமையில் ஆயுதப்போராட்டத்தினூடான கியூபப்புரட்சி 1959இல் நிகழும்வரை அமெரிக்காவின் அதீத செல்வாக்கிற்கு உட்பட்ட தேசமாக கியூபா விளங்கியது. ஸ்பானிய கொலனித்துவ ஆட்சியை அடுத்து, அதாவது 1898 முதல் 1933 வரையான 35 ஆண்டுகளில் 3 தடவைகள் அமெரிக்கா கியூபாவை ஆக்கிரமித்தது. 1952இல் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி, அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடனும் ஆதரவுடனும் சர்வாதிகார ஆட்சி நடாத்திய டீயவளைவயவை பதவியிலிருந்து அகற்றுவதே பிடல் கஸ்ரோவின் முதன்மை இலக்காக இருந்தது.

1926இல் பிறந்த பிடல் கஸ்ரோ, 1945இல் ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கல்வியை முடித்து சட்டவாளராக வெளியேறியவராவர். மாணவப்பருவத்திலிருந்தே இடதுசாரிப் புரட்சிகர சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவராகவும், கியூபத் தேசியவாதியாகவும், அதேவேளை கியூபா மீதான அமெரிக்காவின் அத்துமீறிய செல்வாக்கினையும் தீவிரமாக எதிர்த்தார். அமெரிக்காவின் மூலோபாய நலன்களுக்கான தளமாக கியூபா கையாளப்படுவது சார்ந்தும் கடுமையான எதிர்நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தார்.

கியூபப் புரட்சி
1953இல் முதன்முறையாக் Batistaவை ஆட்சியதிகாரத்திலிருந்து வீழ்த்துவதற்கான முதலாவது ஆயுதக்கிளர்ச்சி கஸ்ரோ தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. அம்முயற்சி தோல்வியடைந்ததோடு, கஸ்ரோ உட்பட்ட கிளர்ச்சியாளர்கள் கைதுசெய்யப்பட்டனர். 15 ஆண்டுகால சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு கஸ்ரோ சிறையிலடைக்கப்பட்டார். ஆனபோதும் சட்டவாளரான கஸ்ரோ தனக்காகக் தானே நீதிமன்றில் வாதாடி 2 ஆண்டுகளில் சிறையிலிருந்து விடுதலையானார்.

விடுதலையானதை அடுத்து 1956ஆம் ஆண்டு, மெற்சிக்கோவில் தங்கியிருந்தவாறு ‘ஜூலை 26’ எனும் பெயரில் புரட்சி இயக்கத்தினை உருவாக்கினார். 1953இல் Batista ஆட்சியை அகற்றும் முயற்சி தோல்வியடைந்த “26.07.1953” நாளின் நினைவாகவே ‘ஜூலை 26’ எனும் பெயரில் புரட்சியமைப்பு தொடங்கப்பட்டது. மெற்சிக்கோவில் தங்கியிருந்த தருணத்தில் மருத்துவரான சே குவேராவுடனான நட்பு கஸ்ரோவிற்கு ஏற்பட்டது. இருவரும் இணைந்தே, Batistaவின் அரசிற்கெதிரான ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தனர். சோசலிச – பொதுவுடமை பெறுமதிகளின் அடிப்படையில் கியூபப்புரட்சியை முன்னெடுப்பதென்பது கஸ்ரோ மற்றும் சே ஆகியோரது இலக்காக இருந்தது.

உலகளாவிய புரட்சியின் குறியீடாக இன்றளவும் அடையாளப்படுத்தப்படம் சே குவேராவின் போராட்ட வரலாறு தனித்துவம் வாய்ந்தது. அர்ஜென்டீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட, அடிப்படையில் மருத்துவரான சே குவேரா உலகில் எங்கெல்லாம் மானிடம் அடக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் சென்று, அடக்குமுறைக்கெதிராகப் போராடத் தயாராகவும், செயல்முனைப்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த புரட்சியாளராகத் திகழ்ந்தார் என்பது பலரும் அறிந்ததே.

கியூபாவில் 1956ஆம் ஆண்டிலிருந்து கஸ்ரோ – சே குவேரா தலைமையிலான ஆயுதப்போராட்டம் நிகழ்ந்தது. 1959இல் டீயவளைவயவை ஆட்சிபீடத்திலிருந்து அகற்றியது இவர்களின் புரட்சிப்படை. இதுவே கியூபப் புரட்சியென வரலாற்றில் பதிவாகியுள்ளது. கியூபப்புரட்சி வெற்றியடைந்த 1959ஆம் ஆண்டிலிருந்து அரை நூற்றாண்டு காலம் ஒற்றைத் தலைமையாக நின்று கியூபாவை ஆட்சி செய்தவர் கஸ்ரோ. 2007இல் சுகயீனம் காரணமாக பிடல் கஸ்ரோ அந்நாட்டின் அரசதலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற, அவரது இளைய சகோதரர் சுயரட ஊயளவசழவிடம் அரசதலைவர் பொறுப்பு கைமாறியது.

அமெரிககாவின் வர்த்தகத் தடை
கியூபப் புரட்சிக்குப் பின்னர்,கியூபாவில் இருந்த அமெரிக்க தொழில் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட்ட அனைத்தும் கஸ்ரோவினால் தேசிய மயப்படுத்தப்பட்டதன் விளைவாக, அத்தேசத்தில் கொண்டிருந்த அனைத்துவகைச் செல்வாக்குகளையும் இழக்கும் நிலை அமெரிக்காவிற்கு ஏற்பட்டது. வெளிநாட்டு மற்றும் தனியார் தொழில்-உற்பத்தி நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்பட்டன. இவற்றில் பெரும்பான்மையானவை அமெரிக்காவிற்குச் சொந்தமானவையாகும்.

Batista ஆட்சிக்காலத்தில், ஆழக் காலூன்றி செல்வாக்குச் செலுத்திய அமெரிக்காவின் கியூபாவுடனான உறவு கியூபப்புரட்சியை அடுத்து முற்றிலும் முறிவடைந்தது. ஓபாமா ஆட்சிக்கு வந்த பின்னர் அமெரிக்காவிலுள்ள புலம்பெயர்ந்த கியூபர்கள் தாயகம் சென்றுவருவதற்குரிய பயணத்தடை சற்றுத் தளர்த்தப்பட்டதோடு, உறவினர்களுக்கு பணம் அனுப்பும் அனுமதியும் வழங்கப்பட்டது.

1960 இல் அமெரிக்கா கியூபா மீது ஏற்றுமதித்தடை விதித்ததோடு, 1962இல் இறக்குமதிக்கும் தடைவிதித்து வர்த்தகத்தடையை விரிவுபடுத்தியது. 1961ஆம் ஆண்டு சோசலிசக் குடியரசாக கியூபா பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து , கஸ்ரோ ஆட்சிபீடத்தைக் கவிழ்க்கும் நோக்கில் கியூபாவின் தென் கரையில் (Grisebukta) அமெரிக்காவினால் படைத் தரையிறக்கம் செய்யப்பட்டது. இது அமெரிக்க சி.ஐ.ஏ முன்னெடுத்த நடவடிக்கை. அன்றைய அரசதலைவர் John F.Kennedyapdயின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை 3 நாட்களில் கியூபப்படையினரால் முறியடிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு தோல்வியுற்ற புறநிலையில் கியூபா மீது பொருளாதாரம் உட்பட்ட பல்வேறு தடைகளை அமுல்படுத்தியது அமெரிக்கா. அமெரிக்கக் குடிமக்கள் கியூபாவிற்கு பயணம் செய்வது உட்பட பலமுனைகளிலும் கியூபாவைப் பலவீனப்படுத்தும் வகையிலான தனிமைப்படுத்தல் மூலோபாய அரசியலைக் கையாண்டது.

சோவியத் – கியூப உறவு
கியூபப் புரட்சியின் பின்னரான காலப்பகுதி, உலகின் இரண்டு வல்லரசுகளான அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்குமிடையிலான வல்லாண்மைப் போட்டி நிகழ்த்த பனிப்போரின் காலமாகும். எனவே அமெரிக்காவின் பொருளாதாரத்தடை, மற்றும் தொடர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக சோவியத் ஒன்றியத்துடன் தனது அரசியல் பொருளாதார உறவினை வலுப்படுத்தியது கியூபா. எண்ணெய் உட்பட்ட ஏனைய உற்பத்திப் பொருட்கள் மற்றும் படைத்துறை உதவிகளை சோவியத் ஒன்றியம் கியூபாவிற்கு வழங்கிவந்துள்ளது.

இப்புறச்சூலில், 1972ஆம் ஆண்டு காலப்பகுதியில் கியுபாவில் சோவியத் ஒன்றியத்தின் அணுவாயுத மற்றும் இடைத்தூர ஏவுகணைகள நிலைப்படுத்துவதற்கான அனுமதியை கஸ்ரோ வழங்கிய பின்னணியில் பெரும் முரண்நிலைகள் தோன்றின. துருக்கி மற்றும் வேறுபல ஐரோப்பிய நாடுகளில் இதையொத்த படைத்தளங்களை அமெரிக்கா நிறுவியிருந்ததற்கான பதிலடியாகவே கியூபாவில் தமது அணுவாயுத மற்றும் ஏவுகணைத்தளங்களை சோவியத் ஒன்றியம் நிறுவியது. சோவியத் ஒன்றியத்தின்; மையங்களை அமைக்க அனுமதித்த பின்னணியில் மீண்டும் கியூபா மீது தாக்குதல் நடாத்த அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.நாளடைவில் அமெரிக்கா – சோவியத் இடையிலான தொடர்ச்சியான இரகசியப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் கியூபாவிலிருந்து சோவியத் ஒன்றியத்தின் மேற்படி படைக்கலங்கள் அகற்றப்பட்டன என்பது வரலாறு. இல்லையேல் கியூப மண்ணிலிருந்து ஒரு அணுவாயுதப் போர் வெடித்திருக்கும் என்ற கருத்து அக்காலத்தில் பரவலாக நிலவியதாக கூறப்படுகின்றது.

விடுதலைப் போராட்டங்களுக்கு கியூப ஆதரவு
கியூபப்புரட்சிக்குப் பின்னர் உலகின் பல பாகங்களிலும் புரட்சிகர போராட்டங்களை முன்னெடுத்த இயக்கங்களுக்கு கியூபா ஆதரவளித்ததோடு, நிதியுதவி, படைத்துறை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது. 1960 – 1970 காலப்பகுதியில் ஆபிரிக்காவின் Angola மீதான தென் ஆபிரிக்காவின் படையெடுப்பிற்கு எதிராக 40 000 கியூபா படையினர் அனுப்பப்பட்டனர். 80களின் இறுதியில் தென்னாபிரிக்கப்படைகளை Namibia விற்குத் திருப்பியனுப்பியதில் கியூப படையினரின் பங்கு கணிசமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது.

1960களிலிருந்து கியூபாவின் பொருளாதாரம், நலிவடைந்த நிலையிலிருந்தபோதும், சோவியத் ஒன்றியத்தின் உடைவிற்குப் பின்னர், மேலும் வீழ்ச்சி கண்டிருந்தது. மக்களின் வாழ்க்கைத்தரம் சோவியத் உடைவிற்கு முன்னர் இருந்தததை ஒத்த நிலையில் இன்றும் உள்ளதாக சில ஆய்வுகள் சுட்டுகின்றன. ஆயினும் மூன்றாம் உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, கியூப மக்களின் வாழ்க்கைத்தரம் ஓரளவு சிறப்பாகவுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நவீன தொழில் வளங்கள், உற்பத்திகள் வளங்கள் மற்றம் தொழில்நுட்பங்கள் பெருக்கப்படாத புறநிலையே கியூபா பொருளாதாரத்தில் வளர்ச்சி காண முடியாமைக்கான முதன்மைக் காரணிகளாகும்.

கொம்யூனிச-ஒற்றைக்கட்சி ஆட்சி
1959இலிருந்து தொடர்ச்சியாக கியூபாவை கொம்யூனிச-ஒற்றைக்கட்சி ஆட்சிக்கு உட்படுத்தியவர் என்ற குற்றச்சாட்டு பிடல் கஸ்ரோ மீது மேற்குலகினால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுவருகின்றது. ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மதிக்காது, சர்வாதிகார ஆட்சி நடத்தியவர் என்ற விமர்சனங்கள் கஸ்ரோவின் கியூபா மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களாகும். அமெரிக்காவினாலும் அதன் நட்பு சக்திகளினாலும் கியூபாவிற்கு எதிரான பரப்புரைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. பிடல் கஸ்ரோவை பதவி ஆசை கொண்ட சர்வாதிகாரி என்ற உலகளாவிய கருத்து விம்பத்தை ஏற்படுத்துவதில் மேற்குலகம் முனைப்புக்காட்டியே வந்துள்ளது.

ஆனாபோதும் உலகெங்கிலும் அடக்குமுறைக்கெதிராகப் போராடுபவர்களால் புரட்சியின் சின்னமாகப் பார்க்கப்படுபவர்களில் சே குவேராவும், பிடல் கஸ்ரோவும் முக்கியமானவர்கள். இப்பின்னணியில் உலகில் ஒரு சாராரால் போற்றப்படுபவலாகவும், அதேவேளை மேற்குலகின் பலம்பொருந்திய அரசுகளென்று வகைப்படுத்தக்கூடிய மற்றுமொரு சாராரால் தூற்றப்படுபவராகவும் பிடல் கஸ்ரோ விளங்குகின்றார். இன்னொரு வகையில் சொல்வதானால் தனக்கான ஆதரவினையும் எதிர்ப்பினையும் ஒருசேரச் சம்பாதித்துள்ளார் எனலாம்.
உலகெங்கும் தனது வல்லாண்மையைச் செலுத்திவரும் அமெரிக்காவின் தெருக்கோடியில் இருந்தவாறு, அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது, கியூபாவைத் தக்கவைத்துக் கொண்ட கஸ்ரோவின் தலைமைத்துவ ஆளுமை வியப்பிற்குரியதாகவும் பலமட்டங்களில் நோக்கப்படுகின்றது.

பிடல் கஸ்ரோவின் தலைமைத்துவம்
அமெரிக்காவின் கியூப மூலோபாய அணுகுமுறையில் ஏனைய பல நாடுகள் அமெரிக்காவின் பக்கம் நிற்கவில்லை. 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக அமெரிக்காவின் பொருளாதாரத்தடைக்கு எதிரான தீர்மானங்கள் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளமை அதனைத் தெளிவுபடுத்துகின்றது.

பிடல் கஸ்ரோ கியூப அரசதலைவராக பதவியிலிருந்த 50 ஆண்டுகளிலும் அதற்குப் பின்னரான காலப்பகுதிகளையும் சேர்த்து 11 அரச தலைவர்களைக் கண்டுள்ளது அமெரிக்கா. ஆனால் எவராலும் கஸ்ரோவின் கியூபாவை அசைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்கா காலம்காலமாக கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளது. கஸ்ரோவின் உயிரைப்பறிப்பதற்கு 600 தடவைகளுக்கு மேல் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (Central Intelligence Agency – CIA) அவர் மீதான கொலை முயற்சிகளை மேற்கொண்டு தோல்வி கண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதார மற்றும் ஏனைய தடை நடவடிக்கைகள் கியூபபாவைப் பலவீனப்படுத்தியதைவிட பலப்படுத்தியதே அதிகமெனப் பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது ஒரு பொது எதிரியைக் கையாள்வதற்குரிய மூலோபாயத்தை வகுத்துக் கொள்வதற்கும், கியூப மக்கள் மத்தியில தேசிய ஒருமைப்பாட்டினை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்காவின் ‘தடை அரசியல்’ பெரிதும் பங்காற்றியது என்ற கோணத்தில் அவ்வாறு பார்க்கப்படுகின்றது.

பொங்குதமிழ், ஜனவரி 2015

Leave A Reply