நீ பற!

பறவைகள்
வான்வெளியைச்
சிறகுகளால் அளக்கும்
மலைகளை உரசும்
வனங்களில் இளைப்பாறும்
எல்லைகளை நுண்ணறியும்
கடல் தாண்டும்
காற்றை எதிர்க்கும்
எதிர்வரும் இடர்களை
சிறகுகளால் இடறிவிடும்
இருளைச் சிறைப்பிடிக்கும்
ஒளியைப் பருகும்
திசையைக் கணிக்கும்
உயரப் பறக்கும்
உலகைத் தரிசிக்கும்
புல்லுருவிகள் அதன் காற்தூசு
அதன் சிறகிலிருந்து உதிரும்
ஒற்றை இறகுகூட
எதையும் சட்டை செய்வதில்லை
நீ பற!

10.05.2018

Leave A Reply