ஒரு மெல்லிய பிறைநிலவு
மகிழ்கணம் ஒன்றில்
தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறோம்
நீயும் நானும்
வெளித்தெரியும் உருவங்களாக இருவர்
ஆனால் ஒற்றை ஆன்மா
நீயும் நானும்
வழிந்தோடும் வாழ்வுநதியை
இங்கு உணர்கிறோம்
தோட்டத்தின் அழகுடனும்
பறவைகளின் பாடலுடனும்
நீயும் நானும்
நட்சத்திரங்கள் எம்மைப்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
ஒரு மெல்லிய பிறைநிலவு
எப்படியிருக்கும் என்பதை
அவற்றுக்கு நாம் காண்பிக்கின்றோம்
செயலற்ற ஊகங்களை
அலட்சியம் செய்தபடி
தன்னலமற்று
ஒன்றாக இருக்கின்றோம்
நீயும் நானும்
நாம் சேர்ந்து சிரிக்கையில்
சர்க்கரை வெடிப்புகள் எனவாகின்றன
சொர்க்கத்தின் கிளிகள்
இந்தப் பூமியின் மீது
ஒரு வடிவத்திலும்
காலமற்ற ஒரு இனிய தேசத்தில்
இன்னொரு வடிவத்திலுமாக
நீயும் நானும்
-மூலம்:ரூமி
-தமிழில்: ரூபன்.சி