உலக நாடுகளில் இராணுப் புரட்சி மூலமே பெரும்பாலான ஆட்சிக் கவிழ்ப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் மக்கள் புரட்சி மூலம் ஆட்சியதிகாரத்தை ஆட்டம் காணச் செய்ததற்கான சமகால எடுத்துக்காட்டாகவும் உந்துதலாகவும் துனிசியாவும் எகிப்த்தும் அமைந்துள்ளன. 2010ஆம் ஆண்டின் முடிவு, வீக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஊடாக அனைத்துலக அரசியல் இராஜதந்திர உள்வட்டாரத்தில் பரிமாறப்பட்ட பல்லாயிரக்கணக்கான இரகசிய ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்டு, அமெரிக்கா உட்பட்ட …
Assad ஆட்சிபீடம் உள்நாட்டிலும் வெளியிலும் ஒரு அடக்குமுறை ஆட்சிபீடமாகவே பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பான்மை சன்னி முஸ்லீம் மக்களாக இருக்கின்றபோதும், மக்கட்தொகையில் 12 விழுக்காடாகவுள்ள சியா முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த யுளளயன குடும்ப ஆட்சி 44 ஆண்டுகளாக நீடித்துள்ளது. அந்தச் சமூகத்தவர்களே அரச இயந்திரத்தினதும் அதன் நிர்வாக அலகுகளினதும் உயர்பதவிகளில் பெரும் சலுகைகளைப் பெற்றுவந்துள்ளனர். 2010 இறுதிக்காலப்பகுதியில் …
ஆட்சி மாற்றம் கோரிய மக்கள் எதிர்ப்புப் போராட்டம், உள்நாட்டுப்போராகி, தேசியப்பிரச்சினையாகி, பிராந்திய விரிவாக்கம் பெற்று – அனைத்துலக விவகாரமாகியுள்ளது. 2011இலிருந்து தொடரும் சிரியாவின் உள்நாட்டுப் போர் அந்நாட்டினைப் சொல்லொணா மனிதப் பேரவலங்களுக்குள் தள்ளியுள்ளது. பாரிய உயிரழிவுகளுக்குள்ளும் இலகுவில் மீளமுடியாத போர் நெருக்கடிக்குள்ளும் தள்ளியுள்ளது. சிரியாவின் மொத்த மக்கட்தொகை 21 மில்லியன்கள். இதில் கிட்டத்தட்ட அரைவாசிப் பேர் …
இத்தனை ஆண்டுகளாக Assadஐ அகற்றவோ அன்றி சிரியா விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவோ அமெரிக்காவால் முடியவில்லை என்பது அமெரிக்க அணுகுமுறையின் தோல்வியேயன்றி வேறல்ல. அரசியல், இராஜதந்திர, இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் இது அமெரிக்காவிற்குப் பெருந்தோல்வி. அமெரிக்காவின் தோல்வியினைச் சமயம் பார்த்துப் பல முனைகளிலும் தனக்குச் சாதகமான வெற்றியாக்கியுள்ளது ரஸ்யா. “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற அமெரிக்காவின் …
தனக்குத் தேவைப்படும் போது கிளர்ச்சியாளர்கள் எனச் சித்தரிப்பதும், தனக்குச் சவாலாக தலையெடுக்கும் போது பயங்கரவாதிகளென்று சொல்வதொன்றும் அமெரிக்காவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் புதிதல்ல. அமெரிக்கா உட்பட்ட அதிகார சக்திகள் அடிப்படைவாத ஆயுதக்குழுக்களை எப்படிக் கருவிகளாகக் கையாள்கின்றன என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தமது பூகோள-பொருளாதார-அதிகார நலன்களை மீளுறுதிப்படுத்தவும், மேலோங்கச் செய்யவும் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வது வரலாறு நெடுகிலும் …
இலங்கைத் தீவில் பவுத்த சிங்கள மேலாதிக்கம் எவ்வாறு ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் அண்மைக் காலமாக முஸ்லீம் எதிர்ப்பு மனநிலையை வெளிப்படுத்தியதோ அதனையொத்த நிலைமைகளையும் அணுகுமுறைகளையும் பர்மாவின் பவுத்த மேலாதிக்க சிந்தனையிலும் அணுகுமுறைகளிலும் காண முடியும். திட்டமிட்ட, நிறுவனமயப்படுத்தப்பட்ட அடக்குமுறை ரொகிங்யா மக்கள் மீதும் பிரயோகிக்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்வது கடினமல்ல. பர்மாவின் பெரும்பான்மை பவுத்த …
ஐ.எஸ் பயங்கரவாதம் சிரியா, ஈராக்கின் எல்லைகளைக் கடந்து முழு உலகத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக ஆக்கப்பட்டுள்ளது. அப்படிக் காட்டிக் கொள்வதற்குரிய தேவையும் முனைப்பும் சர்வதேசத்திற்கு உள்ளது. அதேவேளை அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் என்ற கோசத்தையும் மேற்குலக எதிர்ப்பையும் கொண்டிருக்கும் ஐ.எஸ் இவ்வகைக் கருத்துருவாக்கத்தை விரும்பும் வகையில், தம்மீதான அச்சத்தினைப் பரவலாக்கி வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் 13 …
கிரீஸ் நாட்டின் பொருளாதாரத் தள்ளாட்டம் அந்நாட்டின் பலவீனத்தால் இயல்பாக நிகழ்ந்ததல்ல. திட்டமிட்ட முறையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அனைத்துலக நிதிநிறுவனங்களால் அதன் மீது திணிக்கப்பட்ட நெருக்கடி இது. அனைத்துலக மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பலம்மிக்க நாடுகள் தமது நிதிநிறுவனங்கள் மூலம் கிரீஸ் போன்ற தென் ஐரோப்பிய நாடுகளிடமும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிடமும் சுரண்டல் பொருளாதார அணுகுமுறையைக் …
அனைத்துலக பொருளாதாரத் தடைநீக்கம் செய்யப்பட்ட பலமான ஈரான் பிராந்தியத்தில் தமது செல்வாக்கினையும் வகிபாகத்தினையும் நலிவடையச் செய்துவிடுமென்ற அச்சம் மேற்சொன்ன அரபு நாடுகளுக்கு உள்ளது. 60 தசாப்த காலங்கள் கியூபாவைத் தனிமைப்படுத்தும் அமெரிக்க மூலோபாயத்தின் தோல்வி அமெரிக்காவினால் பகிரங்கமாக அண்மையில் (2015) ஒப்புக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து இருநாட்டுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2015 ஏப்ரல் மாத …
கிழக்கு உக்ரைன் பிரதேசங்களுக்கு உள்ளக சுயாட்சியுடனான கூட்டாட்சி அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்று ரஸ்யா போருகிறது. இதனை உக்ரைன் கடுமையாக மறுத்துள்ளது. ஆனால் அரசியலமைப்பு மறுசீரமைப்பினூடாக இப்பிரதேசங்களுக்கு “விசேட அந்தஸ்து” வழங்குவதற்கு உக்ரைன் இணங்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. 2014 மார்ச் மாதத்திலிருந்து ரஸ்யாவின் அண்டை நாடான உக்கிரைனின் கிழக்குப் பிராந்திய நகரங்களில் கடும்போர் இடம்பெற்று வந்துள்ளது. …