சிங்கள மக்களின் தற்போதை எழுச்சியானது இளைய தலைமுறையிலிருந்து செயற்திறனும் ஆளுமையும் ஜனநாயகத்தின் பன்மைத்தன்மையை மதிக்கின்ற பண்புமுடைய புதிய அரசியல் தலைமையை அல்லது தலைமைகளை உருவாக்குமாயின் அது இலங்கைத்தீவின் எதிர்கால அரசியலுக்கு வலுச் சேர்க்கக்கூடியது. 1948இற்குப் பின்னர், அதாவது இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னரான 70 ஆண்டு கால வரலாற்றில் அந்நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி இதுவென …
தலிபான்களுடன் மேற்கு அவசரமாக பேச முன் வந்ததற்கான ஒரு காரணியாக ரஷ்யாவையும் சீனாவையும் தலிபான்களுடன் பேச விடாமல், நெருங்க விடாமல் தடுப்பது என்பதாகவும் கருதலாம். அது மேற்கின் பிராந்திய நலன்சாந்த நகர்வு. ஐரோப்பா எதிர்கொள்ளும் அகதிகள் நெருக்கடியும் துணைக்காரணியாகக் கொள்ளக்கூடியது. 2022 ஜனவரி இறுதியில் ஆப்கானிஸ்தானின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்களின் குழு ஒன்று நோர்வே தலைநகர் …
அரசியல் அதிகார நிறுவனங்களில் எடுக்கப்படும் முடிவுகளின் தரத்தினையும் விளைவுத்தாக்கத்தினையும் உறுதிப்படுத்தவும் அது பன்மைத்துவத்தினைப் பிரதிபலிக்கவும் வேண்டும் என்ற கருத்தியல் நோர்வே உட்பட்ட ஸ்கன்டிநேவிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வலுப்பெற்று வருகின்றன. அந்தப் பன்மைத்துவம் என்பது பாலின, இனத்துவ, மொழித்துவ, சமய மற்றும் வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட (LGBT – lesbian, gay, bisexual, and …
1970 – 1990 வரையான இருபதாண்டுக் காலப்பகுதியிலேயே நோர்வே அரசியலில் அதி முக்கியத்துவம் பெற்ற காலமென வரையறுக்கப்படுகின்றது. அதற்கு முன்னர் கிட்டத்தட்டப் பிரசன்னம் இல்லாமலிருந்த நிலையிலிருந்து மக்களால் தேர்நதெடுப்பட்ட ஜனநாயக அரசியல் அமைப்புகளுகள், பொதுச் செயற் குழுக்களுக்குள் பெண்கள் மிக அதிக எண்ணிக்கையில் பிரவேசிக்கின்றனர். இதனை ஆய்வுத் துறையில் Critical mass அல்லது Critical volume …
முந்தைய தீர்ப்பு அடிப்படையில் மிகப் பலவீனமானது. கையளிப்பிற்கு எதிராக மிக நியாயமான பல வாதங்கள் இருந்தபோதிலும், அசாஞ்சின் உள-உடல் நிலையை முன்னிலைப்படுத்தி தற்கொலைக்கான ஆபத்தினை முதன்மைக்காரணமாகக் கூறித் தீர்ப்பு வழங்கியமை பலவீனமானது. கையளிப்பானது, மனிதஉரிமைச் சாசன மீறல் என்றோ, ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றோ, நீதிக்குப் புறம்பானது என்றோ தீர்ப்பு வழங்கப்படவில்லை. அசாஞ் வழக்கினை பிரித்தானிய …
தடுப்பூசி பங்கீட்டில் நீதியற்ற அணுகுமுறைக்கும் காப்புரிமை விலக்குக்கு எதிரான போக்கிற்குமான முதன்மைக் காரணி வணிகநோக்கம். ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, சுவிஸ், நோர்வே போன்ற நாடுகள், உலகளாவிய தடுப்பூசி உற்பத்தி அளவினை அதிகரிக்கின்ற அனுமதியைத் தடுக்கின்றன. காப்புரிமை விலக்கிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதனூடாக வறிய, நடுத்தர நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசிகள் தயாரிக்கப்படுவதையும் சென்றடைவதையும் தடுக்கின்றன காப்புரிமை விலக்கிற்கு எதிரான …
ஒருபுறம் அவர்களைப் பல தலைமுறைக் காலங்கள் வறுமைக்குள் தள்ளுகின்ற இழிவரசியலைச் செய்து கொண்டு, மறுபுறம் அவர்களுக்கான ‘சுதந்திரத்தைக்’ கோருவதென்பது அப்பட்டமான அரசியல் போலித்தனம். சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் என்பனவற்றை அமெரிக்காவும் அதன் தலைமையிலான மேற்கின் சக்திகளும் உலக நாடுகளில் எவ்வாறு கையாள்கின்றன என்பதற்கு வரலாறு நெடுகிலும் பல உதாரணங்கள் உள்ளன. கியூப …
இதுவரை ஒரு சதிக்கோட்பாடாகவும் சர்ச்சையாகவும் திசைதிருப்பலாகவும் மறுதலிக்கப்பட்டுவந்த கருத்தியல் மீண்டும் சர்வதேச விவகாரமாகியுள்ளது. இததற்கான முதன்மைக் காரணி அமெரிக்க ஜனாதிபதி புலனாய்வுத்துறையிடம் கோரியுள்ள விசாரணை அறிக்கை. ஆனால் அதனைவிடப் பல்வேறு துணைக்காரணிகளும் உள்ளன. கொரோனா பெருந்தொற்று உலகமெங்கும் பரவத்தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை உலகம் முழுவதுமாக 3,4 மில்லியன் வரையான மக்கள் அந்தக் கொடும் …
ஒரு படைவலுச் சமநிலை இல்லாத இருதரப்புகளுக்கிடையிலான முரண்பாடு இது. அரசுக்கும் அரசில்லாத தரப்பிற்கும் இடையிலான மோதல்கள். தரை, வான், கடல், பெரும் நவீன தொழில்நுட்ப படைக்கட்டுமானங்களைக் கொண்ட அரசுக்கும் போராளி அமைப்பிற்கும் இடையிலான பிணக்குகளாக உலகம் இஸ்ரேல் – பலஸ்தீனப் பிரச்சினையை அணுகுவதில்லை. பாரிய ஆக்கிரமிப்பு சக்திக்கும், பல தசாப்தங்களாக ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டினை …
உலகின் செல்வந்த நாடுகள் மட்டும் தடுப்பூசிகளைப் போட்டு விடுவதால் தொற்றுப் பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடாது. உலக நாடுகள் அனைத்தும் வழமைக்குத் திரும்புவது என்பதே தொற்றுப்பரம்பலைக் கட்டுக்குள் கொண்டுவருவதென்பதன் உள்ளார்ந்த பொருள். அதுவே தொற்றுப்பரம்பலைக் கட்டுப்படுத்துவதில் வினைத்தாக்கம் மிக்க செயற்பாடு. அப்படி நிகழத் தவறினால் நாடுகடந்த பயணங்கள் மீண்டும் மீண்டும் புதியபுதிய தொற்றுஅலைகளைத் தோற்றுவித்துக்கொண்டே இருக்கும். இந்தப் …