ஐரோப்பாவின் அகதிகள் நெருக்கடிக்கான உடனடிக் காரணம் சிரியாவின் போர் என்றபோதும் அதற்கான தோற்றுவாய் அதுவல்ல. ஈராக், ஆப்கானிஸ்தான், தீர்வின்றி இழுத்தடிக்கப்படும் மத்தியகிழக்கின் இஸ்ரேல்-பலஸ்தீனச் சிக்கல், அரபு நாடுகளின் ஆட்சிமாற்றம் கோரிய வெகுசனப்போராட்டங்களில் (அரபு வசந்தம்) மேற்குலகின் நலன்சார் அணுகுமுறை, என்பனவே இன்றைய நிலைக்குரிய தோற்றுவாய். சிரியப்போரின் விளைவாக ஐரோப்பா பெருந்திரளான அகதிகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. சிரியாவிலிருந்து …
புரட்சியில் வெல்லப்பட்ட கியூபா பனிப்போர் காலத்தின் ஆடுகளமாக விளங்கியது. அதனை மிக நுண்ணிய இராஜதந்திரத் திறன் மூலம் கியூபாவின் பாதுகாப்பிற்கு ஏதுவாக கஸ்ட்ரோ கையாண்டார் என்பது வரலாற்றுப் புரிதலுக்கும் வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்வதற்கும் மிகப் பயனுடையதாகும். ஃபிடல் கஸ்ட்ரோ (1926–2016) என்ற பெயர் புரட்சியின் குறியீடாகப் போற்றப்படும் அதேவேளை சர்வாதிகாரியென்று ஒருசாராரால் தூற்றவும்படுகின்றது. அமெரிக்காவும் அதன் …
சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னரும் இரும்புக்கரம் கொண்டு கொம்யூனிச ஆட்சி நடாத்தியவர், மனித உரிமை மீறல்கள் நிறைந்த நாடு, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து மக்களை வறுமைக்குள் தள்ளியவர், மில்லியன் கணக்கான மக்கள் நாட்டிலிருந்து புலம்பெயர வைத்தவர் போன்ற ‘கறுப்பு வெள்ளை’ வகைக் குற்றச்சாட்டுகளை மேற்குலக நாடுகளும் ஊடகங்களும் திரும்பத்திரும்ப கஸ்ட்ரோ மீது சுமத்தி வந்துள்ளன. 1980களின் நடுப்பகுதியில் …
வன்முறை, பயங்கரவாத்திற்கு எதிரான கரிசனை என்ற போர்வையில் இந்தத் தணிக்கை முன்னெடுக்கப்படுவது வேடிக்கையானதாகும். இங்குதான் Facebook-சமூக வலைத்தளத்தின் அரசியல் வெளிப்படுகின்றது. அது அதிகார நலன்களைச் சார்ந்து இயங்குகின்றது என்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவைப்படாது. போர் அவலத்தின் குறியீடாக விளங்கும் வியட்னாம் சிறுமி உடலில் எரிகாயங்களுடன் நிர்வாணமாக ஓடும் காட்சியின் ஒளிப்படம் Facebook – முகநூல் நிர்வாகத்தினால் …
ஊழல், சொத்துக்குவிப்பு, கறுப்புபணம் போன்ற மோசடிகள் ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் அரசியல் தலைவர்கள் மத்தியிலேயே அதிகம் அறியப்பட்டிருந்த நிலையில், மேற்குலக அரசியல் தலைவர்கள் ஊழல் அற்றவர்கள் எனக் கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பம் தகர்ந்துள்ளது 2016 ஏப்பல் ஆரம்பத்திலிருந்து ‘Panama Papers’ எனும் அடையாளப் பெயருடன் உலகளாவிய ரீதியில் வரி ஏய்ப்பு, நிதி மோசடிகள் தொடர்பான பாரிய இரகசிய …
இந்த நூற்றாண்டின் இனக்கருவறுப்பு என அடையாளப்படுத்தப்படுபவற்றில், Holocaust, Rwanda அர்மேனியா ஆகியவை இடம்பெறுகின்றன. தென் சூடான் மக்கள் மீதான வட சூடானின் அட்டூழியங்கள், தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா பேரினவாத அரசின் திட்டமிட்ட இனக்கருவறுப்புகள், பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் அட்டூழியங்கள் என்பன மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என்ற அளவில் தான் உலக நாடுகள் மட்டத்தில் …
உலக வரலாற்றுப் பட்டறிவினூடு நோக்குகையில் அரசுகளும் அரசுகளால் இயக்கப்படுகின்ற சக்திகளுமே இனக்கருவறுப்பினை அரங்கேற்றியிருக்கின்றன. துருக்கியக் குடியுரிமை வைத்திருக்கும் ஒன்றரை மில்லியன் மக்கள் ஜேர்மனியில் வசிக்கின்றார்கள். அதேவேளை கிட்டத்தட்ட அதேயளவு தொகையுள்ள துருக்கிய வேர்களைக் கொண்ட , ஜேர்மன் குடியுரிமை வைத்திருப்பவர்களும் ஜேர்மனியில் வாழ்கின்றனர். அர்மேனிய மக்கள் 1915 காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டமை இனக்கருவறுப்பு (Genocide) என்ற …
நில அபகரிப்பினால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் 40 000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. சாதிய ஒடுக்குமுறை தொடர்வதன் விளைவாக தாழ்த்தப்பட்ட மக்கள் நிலவுரிமையற்ற நிலையில் உள்ளனர். இன ரீதியிலான பிளவுகளையும் நிலப்பிரச்சினை அதிகப்படுத்துகின்றது. முஸ்லீம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறவில்லை. பாதுகாப்பு தொடர்பான பரஸ்பர நம்பிக்கையீனம் அகலவில்லை. போருக்குப் பின்னான சூழலில் …
உலக நாடுகளில் இராணுப் புரட்சி மூலமே பெரும்பாலான ஆட்சிக் கவிழ்ப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் மக்கள் புரட்சி மூலம் ஆட்சியதிகாரத்தை ஆட்டம் காணச் செய்ததற்கான சமகால எடுத்துக்காட்டாகவும் உந்துதலாகவும் துனிசியாவும் எகிப்த்தும் அமைந்துள்ளன. 2010ஆம் ஆண்டின் முடிவு, வீக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஊடாக அனைத்துலக அரசியல் இராஜதந்திர உள்வட்டாரத்தில் பரிமாறப்பட்ட பல்லாயிரக்கணக்கான இரகசிய ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்டு, அமெரிக்கா உட்பட்ட …
Assad ஆட்சிபீடம் உள்நாட்டிலும் வெளியிலும் ஒரு அடக்குமுறை ஆட்சிபீடமாகவே பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பான்மை சன்னி முஸ்லீம் மக்களாக இருக்கின்றபோதும், மக்கட்தொகையில் 12 விழுக்காடாகவுள்ள சியா முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த யுளளயன குடும்ப ஆட்சி 44 ஆண்டுகளாக நீடித்துள்ளது. அந்தச் சமூகத்தவர்களே அரச இயந்திரத்தினதும் அதன் நிர்வாக அலகுகளினதும் உயர்பதவிகளில் பெரும் சலுகைகளைப் பெற்றுவந்துள்ளனர். 2010 இறுதிக்காலப்பகுதியில் …