இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக கடந்த 2010இலிருந்து உலகின் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அரபு நாடுகளில் ஏற்பட்ட வெகுசன எழுச்சி, ஆட்சி மாற்றங்கள், மத்திய கிழக்கில் இஸ்ரேல் பலஸ்தீனப் பிரச்சினையின் இழுபறி, சிரியாவின் உள்நாட்டுப்போர், ஈராக்கில் ’இஸ்லாமிய அரசு – IS’இற்கு எதிரான அமெரிக்காவின் போர், உக்ரைன் நெருக்கடி எனப் பல்வேறு பிராந்தியங்களிலும் …
ஈழத்தமிழர்கள் மற்றும் குர்தீஸ் மக்களும் தமது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பதற்கான பொதுவாக்கெடுப்பினைக் கோரிநிற்கின்றனர். ஸ்கொட்லாண்டினை விடவும், ஏலவே தனிநாடுகளாக பொதுவாக்கெடுப்பு மூலம் பிரிந்து சென்ற கொசவோ மற்றும் மொன்ரநீக்றோ போன்ற ஏனைய நாடுகளின் தேசிய இன மக்களை விடவும் ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கு அதிகம் உரித்துடையவர்கள் என்ற பார்வை ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவுகின்றது. இனப்படுகொலைக்கு உள்ளானவர்கள், …
ஸ்கொட்லாண்ட் தனிநாடாக இறைமையுள்ள ஆட்சியதிகாரத்தோடு இருந்த தேசம். பிரித்தானியாவுடன் 300 ஆண்டுகளுக்கு மேலான பிணைப்பினைக் கொண்டுள்ள தேசமும்கூட. ஸ்கொட்லாண்ட் மக்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்ட வரலாற்றினைகக் கொண்டவர்கள். 15ஆம் நூற்றாண்டு காலப்பகுதிகள் வரை ஸ்கொட்லாண்ட் மற்றும் இங்கிலாந்து ஆகியன தனித்தனி அரசுகளாக மன்னராட்சி முறைமையைக் கொண்டு விளங்கின. அதற்கு முற்பட்ட பல்வேறு காலகட்டங்களில் இரண்டு தேசங்களுக்கிடையில் …
கொம்யூனிசத்தின் வீழ்ச்சியின் பின்னர் போலந்த் நாடு எவ்வாறானதொரு பொருளாதார வளர்ச்சியையும், அதனூடு சமூக மேம்பாட்டினையும் எட்டியதென்பதை முன்னுதாரணமாகக் கொண்டு, அவ்வாறானதொரு வளர்ச்சியைத் தாமும் அடைவதில் உக்ரைனின் தற்போதைய மேற்குலக ஆதரவு அரசாங்கம் முனைப்புக் கொண்டுள்ளது.ரஸ்யா ஒரு பிளவுபட்ட உக்ரைனை விரும்புகின்றது. அதாவது முற்றுமுழுதாக மேற்கின் செல்வாக்கிற்கு உட்பட்டுவிடாத, அதேவேளை தமது கையை மீறாத வகையிலும் இருக்க …
ஐனநாயகம், நல்லாட்சி, ஊடக-கருத்துச் சுதந்திரம் என்ற பேரில் தமது நலன்களுக்குச் சாதகமான ஆட்சியை நிறுவ வழிவகுப்பது என்பது மேற்குலக வல்லரசுகளின் நலன் சார்ந்த அரசியல் காய்நகர்த்தல்கள் என்பது கடந்த காலமும் சமகாலமும் உணர்த்தும் உண்மை. முன்னாள் சோவியத் மற்றும் யூகோஸ்லாவிய குடியரசு நாடுகளில் மேற்கு ஆதரவு அரசாங்கங்களை அமைப்பது என்பது அமெரிக்கா தலைமையிலான நகர்வுவாக இருந்து …
விடுதலைப் போராட்ட அமைப்புகளையும் பயங்கரவாத அமைப்புகளையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கும் உலக மேலாண்மைப் போக்கின் (செப் 11 தாக்குதலின் பின்னரான உலக ஒழுங்கு) விளைவாக பிகேகே அமைப்பும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றினால் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டது. அவுஸ்ரேலியா, கனடா, ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளும் அதனைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. …
பல பத்து ஆண்டுகள் அடிமைப்படுத்தப்பட்ட சமூகமாகவும், அடிமைப் படுத்திய சமூகமாகவும் இருந்த ஒரு தேசத்தை மீண்டும் பகை முரண்களுக்குள் இட்டுச் செல்வதை முற்றிலும் தடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புணர்வோடுதான் கறுப்பின மற்றும் வெள்ளையின மக்களுக்கிடையிலான நல்லிணக்கம் முன்னிலைப்படுத்தப்பட்டது. அதனால் தான் நல்லிணக்கத்திற்கான முக்கிய குறியீடாகவும் மண்டேலா மேற்குலகத்தால் போற்றப்படுகின்றார். தென்னாபிரிக்காவில் நிலவிவந்த வெள்ளையர்களின் நிறவெறி மேலாதிக்க …
இஸ்ரேல் பலஸ்தீன முரண்பாட்டுக்கு ‘இரு நாடுகள்’ (two-state solution) தீர்வு என்பது அனைத்துலக நாடுகளின் ஒட்டுமொத்தமாக அங்கீகரித்துள்ள நிகழ்வாகும். ஆகவே பலஸ்தீனத் தனிநாட்டுக்குரிய அங்கீகாரம் ஏலவே வழங்கப்பட்ட ஒன்றாகும். அதன் எல்லைகள் தொடர்பான இணக்கப்பாடு தான் எட்டப்படவில்லையே தவிர, தனிநாட்டை அமைப்பதற்கான அனைத்துலக ஆதரவிலோ அங்கீகாரத்திலோ கொள்கையளவில் தடைகள் இல்லை. ஆனால் பேச்சுவார்த்தை தேக்கமடைந்துள்ள கால …
செப்ரெம்பர் 11, 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள உலக பொருளாதார மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மற்றும் வோசிங்ரன் நகரில் அமைந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலகம் ஆகியன விமானங்கள் மூலம் மோதித் தகர்க்கப்பட்டன. இப்பயங்கரவாதத்தாக்குதலின் 10வது ஆண்டு கடந்த மாதம் நிறைவடைந்துள்ளது. உயிரழிவு, உடமை அழிவு இரண்டிலும் அமெரிக்க வரலாற்றில் மோசமான …
2010ஆம் ஆண்டு நோபல் தெரிவுக் குழு பொருளாதார வல்லரசு ஒன்றுக்கு சவால் விடும் துணிவை வெளிப்படுத்தியுள்ளது என்ற கருத்தும் நிலவுகின்றது. சீனாவுடன் வலுவான பொருளாதார உறவினைக் கொண்டிருக்கும் நோர்வே, நோபல் தெரிவுக் குழு சுயாதீனமான அமைப்பு என்று கூறி தப்பிக்கொள்ள முயலுகின்ற போதும், நோர்வே அரசாங்கத்தை நோக்கி சீனா காட்டமான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் நோர்வே …