உன்னை நினைத்தவாறிருக்கிறேன் என் உடலுக்குள் பூட்டப்படாத கதவுடன் ஒரு அறை அங்கு உன் எல்லாப் பொருட்களும் உன் சொற்ப வாழ்வின் எல்லாத் தடங்களும் பனியின் நிழல்களாகி நிலவொளியில் படர்ந்திருக்கின்றன திறப்பு என்னிடமுள்ளது விநாடிகளின் இடைவெளிகளுக்கொருமுறை உட்செல்கிறேன் எல்லாவற்றையும் தொட்டுப் பார்கிறேன் சொற்களற்றுப் பேசுகிறேன் வெறுமையுடன் நிரந்தரச் செவியொன்றுடன் உன் நினைவில் ஏங்குகிறேன் அதிகபட்சம் என்னைப் போலவே …
உன் பாடலின் உட்பொருள் அழகின் உணர்வெனில் பாலைவன இதயத்திலும் உன் பாடலுக்கான ஒரு பார்வையாளன் உள்ளதை அறி! உன் அடைவிற்கான தேடல் வாழ்க்கையின் இதயமெனில் காணும் பொருளனைத்திலும் அழகினைத் தரிசிப்பாய் அழகினைப் புறமொதுக்கும் பார்வை குன்றிய விழிகளிலும் அதனைக் கண்டடைவாய் அழகின் அற்புதங்களைக் கண்டடைவதற்கானது நம் வாழ்தல் மற்றைய அனைத்தும் ஒருவகைக் காத்திருப்பு! இரண்டேயிரண்டு கூறுகள்தான் …
எனக்குத் தெளிவாகத் தெரிகிறது இங்கிருக்கும் எல்லா வீடுகளும் என்னைப் பார்த்துப் புன்னகைக்கின்றன உன்னை நான் நேசிப்பதை அவை புரிந்திருக்கின்றன நீ நகரத்திற்கு வந்துவிடு பூங்காவிலுள்ள மரங்களில் நான் அதனைக் காண்கிறேன் அசையும் இலைகளுடன் நின்றபடி அம்மரங்கள் காற்றிடமிருந்தும் சூரியனிடமிருந்தும் முத்தங்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன. நீ நகரத்திற்கு வந்துவிடு ஆதலால் தான் ஒளியிலிருந்து… காற்றிலிருந்து… தென்றலில் அசையும் பாய்மரக்கப்பலிலிருந்து …
பல்லாண்டுகளாக நீ என் கண்களில் படவேயில்லை அந்தப் பேரூந்து மிகமெதுவாக என்னைக் கடந்து வளைந்து சென்ற அக்கணம் அதன் ஜன்னலோரம் மின்னலாய் உன்னைக் கண்டேன் உனதந்தப் பார்வை… அதில் சட்டென உன் சுயம் அதீதமாய்த் தோன்றிற்று எம்மைப் பிரித்த இத்தனை ஆண்டுகாலம் நான் என்னோடு காவித்திரிகின்ற உன் உருவப்படத்திலிருந்து முற்றிலும் வேறான தோற்றத்தில் நீயிருந்தாய் என்னால் …
பக்திமிகு பிரசங்கியாக இருந்தேன் நீயென்னைக் கவிஞனாக மாற்றினாய் கிளர்ச்சியின் கிளைகளை என்னுள் படரவிட்டாய் கொண்டாட்ட விருந்துகள் ஒவ்வொன்றிலும் போதை மயக்கத்தை உண்ணத்தந்தாய் நீடித்த பிரார்த்தனைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட கண்ணியமான மனிதனாக இருந்தேன் தெருக்குழந்தைகளின் விளையாட்டுப்பொருளாக என்னை ஆக்கிவிட்டாய் -தமிழில்: ரூபன் சி -29.06.18-
சுதந்திரப்பறவை காற்றின் திசையறிந்து விர்ரெனப் பறக்கிறது பூமியின் தற்போதைய முனைவரை அதனால் கீழ்நோக்கி மிதக்கவும் முடிகிறது செம்மஞ்சள் சூரியக் கதிர்களுக்குள் தன் இறக்கைகளை உட்செலுத்துவதும் அதற்குச் சாத்தியமாகிறது வானத்தைப் பிரகடனப்படுத்தவும் அது துணிகிறது. சிறு கூண்டுக்குள் அடைக்கப்பட்ட இன்னொரு பறவையால் எப்பொழுதேனும் ஒருமுறைதான் கூண்டுக் கம்பிகளுக்கு வெளியில் பார்க்க முடிகிறது அதன் இறக்கைகள் வெட்டப்பட்டு கால்கள் …
சமகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான தொடுப்பு என்றானவன் கவிஞன் தாகமுற்ற எல்லா ஆன்மாக்களும் பருகக்கூடிய தூய வசந்தம் அவன் எழில்மிகு நதியிலிருந்து பாயும் நீரில் வளரும் மரம் போன்றவன் பசித்த இதயங்கள் வேண்டிநிற்கும் பழக்கூடை என்றானவன் அவன் ஒரு இராப்பாடி குமையும் ஆன்மாக்களின் சோர்வைத் தன் இதமான மெட்டுக்களால் தூரம் துரத்துபவன் அவன் அடிவானத்தில் தோன்றும் ஓர் …
காதலை நான் காதல் செய்கிறேன் காதல் என்னைக் காதல் செய்கிறது என் ஆன்மாவுடன் காதல் கொள்கிறது என் மெய் என்னில் காதல் கொள்கிறது என் ஆன்மா காதலிப்பதை நாம் திருப்பங்களால் நிரப்புகிறோம் காதலிக்கப்படுவதையும் திருப்பங்கள் நிரப்புகின்றன – . தமிழில்: ரூபன் சி
உன்னை நினைத்தவாறிருக்கிறேன் என் உடலுக்குள் பூட்டப்படாத கதவுடன் ஒரு அறை அங்கு உன் எல்லாப் பொருட்களும் உன் சொற்ப வாழ்வின் எல்லாத் தடங்களும் பனியின் நிழல்களாகி நிலவொளியில் படர்ந்திருக்கின்றன திறப்பு என்னிடமுள்ளது விநாடிகளின் இடைவெளிகளுக்கொருமுறை உட்செல்கிறேன் எல்லாவற்றையும் தொட்டுப் பார்க்கிறேன் சொற்களற்றுப் பேசுகிறேன் வெறுமையுடன் நிரந்தரச் செவியொன்றுடன் உன் நினைவில் ஏங்குகிறேன் அதிகபட்சம் என்னைப் போலவே …