கொரோனா நெருக்கடியை முன்வைத்து..! கியூப மருத்துவத்துறை சர்வதேச நாடுகளில் பங்களிப்பதென்பது அதன் உலகளாவிய மனிதாபிமான செயற்பாட்டின் ஒரு நீண்டகால நிலைகொள் வடிவம். இந்தப் பங்களிப்பிற்கு ஒரு நீண்ட வரலாற்றுப் பக்கம் உள்ளது. அந்த வரலாறு கியூப வெளியுறவுக் கொள்கையோடு தொடர்புபட்டது. பொதுவான வெளியுறவுக் கொள்கை மரபுகள் நலன்சார் இராஜதந்திர உறவுகளை மையப்படுத்தியது. கியூபாவின் மருத்துவப் பங்களிப்பு …