சோதியாவின் (சிவதாஸ் சிவபாலசிங்கம்) காலப்பெருவலி கவிதை நூல் அறிமுக அரங்கு ஒஸ்லோவில் 30-08-20 இடம்பெற்றத. இந்நிகழ்வின் முன்னேற்பாடுகளில் பங்களித்தபோதும் தவிர்க்கமுடியாத தனிப்பட்ட காரணத்தினால் நிகழ்வில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும் முழுநிகழ்வினையும் காணொளியில் பார்க்கக்கிடைத்தது. அபிசன் அன்பழகன் துல்லியமான ஒலியுடனான ஒளிப்பதிவினைச் செய்திருக்கின்றார். இந்நிகழ்வு இரண்டு காரணங்களால் முக்கியத்துவம் பெறுகின்றது. கொரோனா நெருக்கடி காரணமாக நீண்ட …