எம்முள் வடியும் கருணை
வா
மீண்டும்
காதலில் வீழ்வோம்
தங்கபஸ்பங்களை
முழுவுலகின் மீதும் பரவுவோம்
புதிய வசந்தமென்றாவோம்
வானத்துவாசம் காவிவரும்
தென்றலை உணர்ந்திருப்போம்
பூமிக்குப் பச்சை உடுத்துவோம்
இள மரமொன்றின் பசும் சாறுபோல்
எம்முள் வடியும் கருணை
எம்மைக் காத்தருளட்டும்
எங்கள் பாறை இதயங்களிலிருந்து
இரத்தினக்கற்களைச் செதுக்கியெடுப்போம்
காதலின் பாதைக்கு அவை ஒளிபாய்ச்சட்டும்
தெளிந்து விரிகிறது காதலின் பார்வை
அதனொளியினால் நாம்
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம்!
***
– மூலம்: ரூமி
– தமிழில் : ரூபன் சி