இரவு

இரவுகருஞ்சுவாலையை முகத்தில்
பூசியிருக்கிறது இரவு
இருளை மடியெங்கணும்
பரவியிருக்கிறது பகல்

குளிரை அள்ளித்
தலைமுடிந்திருக்கிறது காலம்
இலையுதிர்த்த மரங்கள்
பனிப்புழுதி அப்பிய கிளைகள்

முகில்முகடுகளுக்குள்
ஒளிந்திருக்கின்றன
நட்சத்திரங்கள்

திண்மப்பனி மூடிய வீதிகளிலும்
பனிக்குன்றுகளிலும்
உறைந்திருக்கக்கூடும்
உனதும் எனதுமான
பகிரத்தவறிய வாழ்தல்

Leave A Reply