இஸ்ரேல்-பலஸ்தீன சமாதானப் பேச்சுக்கள்
இஸ்ரேல்-பலஸ்தீனச் சிக்கல் நீண்ட நெடுங்காலமாகத் தீர்க்கப்படாதிருக்கும் இன முரண்பாடு. சமாதான முயற்சிகள் அவ்வப்போது தூசி தட்டப்பட்டுத் தொடங்கப்படுவதும் பின்னர் கிடப்பில் போடப்படுவதும் மாறி மாறி நடந்தேறிய நிகழ்வுகளாகியுள்ளன.
60 ஆண்டுகளுக்கு மேலான போராட்டம்
பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம், 60 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. இத்தனை கால நீட்சி கொண்ட இன முரண்பாட்டுத் தரப்புகளான இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கிடையில் 1991ஆம் ஆண்டு தொடக்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்து வந்துள்ளன. 1993 ஆண்டின் ”ஒஸ்லோ உடன்படிக்கை” சமாதான முயற்சியின் முக்கிய நகர்வாகக் கருதப்பட்டது. ஆனபோதும் அவ்வுடன்படிக்கையில் காணப்பட்ட இணக்கப்பாடுகள் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் பலஸ்தீனச் சிக்கலுக்கான இறுதித் தீர்வு இருபது ஆண்டுகளாக இழுபறி நிலையில் உள்ளது.
இஸ்ரேலின்; கடும்போக்கு நிலைப்பாடு ஒருபுறம் இருக்க- அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வே ஆகிய அனுசரணையாளர்களால் உரிய முறையில் பேச்சுவார்த்தை நகர்த்தப்படாமை உட்பட்ட பல்வேறு அக-புறக் காரணிகளால் உரிய இலக்கை அடையவில்லை. அதாவது இறுதித் தீர்வு எட்டப்படவில்லை. ஆனால் பலஸ்தீனத்தின் மேற்றுக்கரை (இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுஇ யூதக்குடியேற்றங்கள் நிறுவப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த) மற்றும் காஸா ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய ”பலஸ்தீன தன்னாட்சி அதிகார நிர்வாகம்” உருவாக்கப்பட்டது.
முன்னேற்றமில்லாத பேச்சுவார்த்தைகள்
இறுதித் தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகள் கிடப்பில் போடப்பட்டன. அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட போதும்இ முன்னேற்றம் ஏதுமின்றி மிகவும் குறைந்த ஆயுளுடன் அவை நின்று போனதே வரலாறு. இறுதியாக 2007ஆம் ஆண்டின் முடிவில்இ அமெரிக்க முன்னாள் அரச தலைவர் ஜோர்ஜ் புஸ் தலைமையில் அமெரிக்காவின் Annapolis நகரில் இருதரப்பிற்குமிடையில் பேச்சுக்கள் நடைபெற்றன. 2008ஆம் ஆண்டு முடிவிற்குள் இறுதித்தீர்வினை எட்டும் வகையில் பேச்சுக்களைத் தொடர்வதென்ற அறிவிப்போடு பேச்சுக்கள் நடந்தன. ஆனபோதும் அவ்வுடன்பாடு எட்டப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளாகவே காஸா மீது இஸ்ரேல் பாரிய படை நடவடிக்கையைத் தொடங்கியது.
2008 நவம்பர் முதல் 2009 ஜனவரி இறுதிவரை, காஸா மீது இஸ்ரேல் பாரிய படை நடவடிக்கையை நடத்தியது. இதில் 1400க்கு மேற்பட்ட பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். பின்னர் அனைத்துலக அழுத்தம் காரணமாக ஜனவரி இறுதியில் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்திஇ காஸாவிலிருந்து படைகளை விலக்கியது.
அமெரிக்காவின் நேரடித் தலையீடு
2010 மீண்டும் இரு தரப்பிற்குமிடையில் அமெரிக்கா தலைமையில் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்ட ஆரம்ப காலங்களில் நோர்வே அனுசரணை நாடாக செயற்பட்டது. ஐரோப்பிய ஒன்றியமும் கணிசமான பங்கு வகித்தது. அமெரிக்கா பின்னணியில் இருந்தது. ஆனால் பேச்சுவார்த்தைகளின் தொடர் தோல்விகளால்இ இறுதிக் காலங்களில் அமெரிக்காவின் நேரடித் தலைமையில் சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கென அமெரிக்காவின் சிறப்புத் தூதுவராக புநழசபந ஆவைஉhநடட நியமிக்கப்பட்டுள்ளார். பலஸ்தீனத்திற்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளுக்கு தொடர்ந்தும் நோர்வே தலைமை வகிக்கின்றது.
செப்ரெம்பர் மாத ஆரம்பத்தில் வோசிங்ரனில் (வெள்ளை மாளிகையில்) இருதரப்பிற்குமிடையில் நேரடிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. ஆரம்பக்கட்ட பேச்சுக்களில் அமெரிக்க அரசதலைவர் பராக் ஒபாமா மற்றும் வெளியுறவு அமைச்சர் கிலறி கிளின்டன் ஆகியோர் பங்கேற்றனர். அதன் தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கொரு முறை இருதரப்பும் நேரடிப் பேச்சுக்களில் ஈடுபடுவதென்ற இணக்கம் காணப்பட்டது. இஸ்ரேல் தரப்பில் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் பலஸ்தீன தரப்பில்இ பாஃதா தலைவர் மஃமுத் அப்பாஸ் ஆகியோர் நேரடிப் பேச்சுக்களில் பங்கேற்று வருகின்றனர்.
அமெரிக்க அரசதலைவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் நேரடியாக பேச்சுக்களில் பங்கேற்றுள்ளமையானதுஇ இந்த விவகாரத்தில் ஒபாமா நிர்வாகம் கொண்டுள்ள அக்கறையினையும்இ அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினையும் வெளிக்காட்டுகின்றது.
அமெரிக்க நலன்
ஒபாமா அவர்கள் அரசதலைவர் வேட்பாளராகப் போட்டியிட்ட தருணத்தில் வெளியுறவு அரசியல் சார்ந்து வழங்கிய முக்கிய வாக்குறுதிகளில் – ஈராக் விவகாரத்திற்கு அடுத்தபடியாக ”இஸ்ரேல் – பலஸ்தீன விவகாரம்” முக்கியனதாக அமைந்தது. மத்திய கிழக்கில் விரிவுபடுத்தப்பட்ட ஈடுபாட்டினை அnமிக்கா கொண்டிருக்கும் என்பதாக ஒபாமாவின் வாக்குறுதி அமைந்திருந்தது.
பேச்சுவார்த்தைகளுக்கான அழுத்தங்களைத் தொடர்ந்து அமெரிக்கா கொடுத்து வந்திருக்கின்றதென்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். மத்திய கிழக்கின் இஸ்லாமிய அரபு நாடுகள் மத்தியில் அமெரிக்க எதிர்ப்புணர்வு வளர்ந்து வருகின்றமைக்குஇ நீண்ட காலமாகத் தீர்க்கப்படாது நீடிக்கும் பலஸ்தீனச் சிக்கல் ஒரு முக்கிய காரணியாகும். தவிர இம்முரண்பாடு நீடிப்பதால் மத்திய கிழக்கின் அமைதியும் திடத்தன்மையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கருதுகின்றது.
இவ்வாறான புறநிலைகளிலிருந்து நோக்கும் போதுஇ இஸ்ரேல்-பலஸ்தீன முரண்பாட்டிற்கு நிரந்தரத் தீர்வினை எட்டவேண்டியதுஇ அமெரிக்க நலன்களுக்கு அவசியமாகவுள்ளதன் பின்னணியை இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.
நிரந்தரத் தீர்வு காணப்படும் பட்சத்தில்இ மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் நிலவும் அமெரிக்க எதிர்ப்புணர்வினைத் தணிக்க முடியும். அப்பிராந்தியத்தில் அமைதியையும் திடத்தன்மையையும் பேணமுடிமென அமெரிக்கா கருதுகின்றது. அவ்வாறு நிகழும் போது அமெரிக்காவின் செல்வாக்கும் வலுப்பெறுமென்ற நம்பிக்கையும் அமெரிக்காவிற்கு உண்டு.
அத்துடன் நிரந்தரத் தீர்வு மூலம்இ மத்திய கிழக்கில் ஈரான் கொண்டிருக்கின்ற செல்வாக்கினை நலிவுறச் செய்ய முடியுமென்பதும் அமெரிக்காவின் கணிப்பாகும்.
ஒபாமாவின் தேர்தல் வாக்குறுதி
இன்றைய சமகாலத்தில் இந்த விவகாரத்திற்கு ஒபாமா நிர்வாகம் முக்கியத்துவம கொடுப்பதற்கான காரணங்களில் ஒன்றுஇ எதிர்வரும் நவம்பர் 2ஆம் நாள் நடைபெறவுள்ள அமெரிக்க கொங்கிரஸ் அவைக்கான தேர்தல் என்றதொரு கருத்தும் நிலவுகின்றது. எனவே தேர்தலுக்கு முன்னர்இ தகுந்த கால அவகாசத்துடன் இப்பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டுமென்ற ஒபாமா நிர்வாகத்தின் வெளிப்பாட்டின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றதான கருத்தும் உண்டு.
ஒரு நாட்டின் வெளியுறவு விவகாரங்களை வைத்துஇ உள்நாட்டு தேர்தலில் மக்கள் வாக்களிப்பதென்பது அரிது. அமெரிக்க மக்களும் வெளியுறவு விவகாரங்களின் அடிப்படையில் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை. எனவே வெளியுறவு விவகாரங்கள் உள்நாட்டுத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பவை அல்ல. இங்கு ஈராக் விவகாரம் முற்றிலும் மாறுபட்டது. பெருமெடுப்பிலான அமெரிக்கப்படைகள் ஈராக் போருக்கு அனுப்பப்பட்ட நிலையில்இ தமது நாட்டினர் இன்னுமோர் நாட்டின் மீது படையெடுப்பதால் உயிர்ப்பலிகள் ஆவதை அமெரிக்க மக்கள் ஏற்றுக் கொள்ளாதஇ உணர்வு நிலைப்பட்ட விவகாரமாக அது பார்க்கப்பட்டது. அதனால் ஈராக்கிலிருந்து படைகளைத் திருப்பி அழைத்தல் என்ற ஒபாமாவின் தேர்தல் வாக்குறுதி அவரது வாக்கு வங்கிக்கு பலமாக அமைந்தது.
ஆனபோதும் வெளியுறவு அரசியல் விவகாரங்களை நேர்த்தியாகவும்இ வாக்குறுதிக்கு அமையவும் கையாளுவதன் மூலம் செயற்திறன் மிக்க அரசதலைவராகத் தன்னை அடையாளப்படுத்த ஒபாமா முனைகின்றார். அவ்வாறான பிம்பத்தை ஏற்படுத்துவதுஇ இடம்பெறப்போகும் தேர்தலில ஜனநாயகக் கட்சிக்கு பலமாக அமையும்.
பிளவுபட்டுள்ள பலஸ்தீனத் தலைமைகள்
பலஸ்தீன தலைமைகளுக்கிடையில் (பாஃதா மற்றும் ஹமாஸ்) கூர்மையடைந்துள்ள முரண்பாடும் அம்முரண்பாட்டின் விளைவான தலைமைத்துவ பிளவும் பேச்சுவார்த்தைகளின் முக்கிய பலிவீனங்களில் ஒன்றாகும்.
2006ஆம் ஆண்டு இடம்பெற்ற பலஸ்தீன தன்னாட்சி அதிகார நிர்வாகத்திற்குரிய தேர்தலில் ஹமாஸ் அமைப்பு வெற்றியீட்டியது. இஸ்ரேலும் மேற்குலகமும் காஸா மீது பொருளாதாரத் தடை விதித்தன. ஹமாஸ் அமைப்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியனவற்றின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ள பின்னணியில்இ அதனைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளே அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.
ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தலில் பலஸ்தீன மக்கள் ஹமாஸ் அமைப்பிற்கு வழங்கிய ஆதரவினை மேற்குலகம் அங்கீகரிக்கவில்லை. ஹமாஸ் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத நிலையிலேயே சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஹமாஸ் மற்றும் பாஃதா (பலஸ்தீன விடுதலை அமைப்பின் அரசியல் பிரிவு பாஃதா எனப்படுகிறது) ஆகியவற்றுக்கிடையில் 2007ஆம் ஆண்டு கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்டது. ஆனபோதும் முரண்பாடுகள் முற்றியதை அடுத்து அவற்றிற்கிடையில் ஆயுத மோதுகை வெடித்தது. இதனை அடுத்து காஸா பிரதேசம் முழுவதையும் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
பொருளாதார முற்றுகைக்குள் காஸா
இதனை அடுத்து இஸ்ரேல் மற்றும் எகிப்த் காஸாவிற்கான தமது எல்லைகளை மூடின. இதனால் காஸாவிற்கெதிரான பொருளாதாரத் தடை மேலும் இறுக்கமடைந்தது. 1இ5 மில்லியன் வரையான காஸா மக்கள் இன்றுவரை பெரும் பொருளாhர நெருக்கடிக்கு முகம் கொடுக்கின்றனர்.
இன்றைய நிலையில் பலஸ்தீனப் பிரதேசம் (இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பெரும்பகுதி நீங்கலாக) நிர்வாக ரீதியாக இரண்டு தலைமைகளுக்குள் பிளவுபட்டுள்ளது. ஹமாஸ் நிர்வாகத்தின் கீழ் காஸாவும்இ பாஃதா தலைமையிலான பலஸ்தீன தன்னாட்சி நிர்வாகத்தின் கீழ் மேற்குக்கரையும் உள்ளன.
எனவே பாஃதா – ஹமாஸ் இடையிலான இணைவும் கூட்டுச் செயற்பாடு சமாதான முயற்சிகளின் முன்னகர்வுக்கு இன்றியமையாத அடிப்படைகளாகும்.
இறுதித் தீர்வு – நான்கு முக்கிய விவகாரங்கள்
தற்போதைய பேச்சுவார்த்தைகளில் இறுதித்தீர்வு தொடர்பான நான்கு முக்கிய விவகாரங்கள் பேசுபொருளாகியுள்ளன. பலஸ்தீனப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட யூதக் குடியேற்றங்கள்இ எதிர்கால பலஸ்தீன தனியரசின் எல்லைகள்இ ஜெருசலேமின் எதிர்காலம் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்துள்ள பலஸ்தீன மக்களின் எதிர்காலம் ஆகியவை அம்முக்கிய விவகாரங்களாகும்.
திட்டமிட்ட யூதக் குடியேற்றம்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரைப் பிரதேசத்தில் இஸ்ரேல் பெருமெடுப்பிலான திட்டமிட்ட யூதங்குடியேற்றங்களை நிறுவியுள்ளது – தொடர்ச்சியாக நிறுவியும் வருகின்றது. இதுவரை 500 000 வரையான யூதர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் குடியேற்றப்பட்ட நிலை உள்ளது. அத்தோடு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் பாரிய தடுப்புச் சுவரினை இஸ்ரேல் எழுப்பியுள்ளது. திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதும் ஏலவே நிறுவப்பட்டவற்றை அகற்றுவது தொடர்பான ஏற்புடைய இணக்கப்பாட்டினை எட்டுவதும் முக்கிய விவகாரமாக பலஸ்தீனத் தரப்பால் முன்வைக்கப்படுகின்றது.
பலஸ்தீனத் தனியரசின் எல்லைகள்
அடுத்த விவகாரம்இ அமையப் போகும் பலஸ்தீனத் தனியரசின் எல்லைகள் பற்றியதாகும். எல்லைகள் தொடர்பான பலஸ்தீனத் தரப்பின் கோரிக்கையாக – நிபந்தனையாகஇ 1967க்கு முன்னதாக இருந்த ஆள்புலத்தைக் கொண்டதாக எல்லைகள் வகுக்கப்பட வேண்டும் என்பதாக உள்ளது. அதாவது 1967இல் முதன்முதலாக பலஸ்தீன மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் இஸ்ரேலினால் (”6 நாள் போர் மூலம்”) ஆக்கிரமிக்கப்படுவதற்கு முன்பிருந்த பிரதேசங்களை உள்ளடக்கியதாக எல்லைகள் அமைய வேண்டுமென்பது பலஸ்தீன மக்களின் கோரிக்கையாகும்.
ஜெருசலேம் நகரின் நிலை
பலஸ்தீன தனிநாடானது காஸாஇ மேற்குக் கரைஇ தென் ஜெருசலேம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டுமென்பது பலஸ்தீன மக்களின் வேணவா. இதில் ஜெருசலேமும்இ மேற்குக்கரையில்; குடியேற்றத்திற்குள்ளாகியுள்ள பிரதேசங்களும் சர்ச்சைக்குரியனவாக உள்ளன. யூதர்களும் பலஸ்தீனர்களும் ஜெருசலேமினைத் தமது புனித பிரதேசமாக உரிமை கொண்டாடும் நிலைஇ அதனைச் சர்ச்சையில் வைத்துள்ளது.
ஜெருசலேமினைத் தமது நிரந்தரமான புனித நகராகக் கருதும் இஸ்ரேல்இ அதனை விட்டுக் கொடுக்க ஒருபோதும் தயாராக இருக்கப் போவதில்லை என்ற வலுவானதொரு கருத்தும் உண்டு.
இன்றுள்ள இஸ்ரேல் அரசாங்கம் ஆறு கட்சிகளின் கூட்டணி அரசாங்கம் ஆகும். இவற்றுள் பல வலதுசாரி கடும்போக்கு கட்சிகள். ஜெருசலேம் மற்றும் யூதக் குடியேற்றங்கள் தொடர்பான கடும்போக்கு நிலைப்பாடுடையவை. அவற்றின் எதிர்ப்பை மீறிஇ இஸ்ரேல் தரப்பில் சமாதான முயற்சிகளில் விட்டுக்கொடுப்பும் நெகிழ்வுப் போக்கும் வெளிப்படுவதென்பது சாத்தியம் குறைந்த விடயமாகும்.
இடம்பெயர்ந்தோர் எதிர்காலம்
அடுத்தபடியாக பல மில்லியன் பலஸ்தீன மக்கள் உள்நாட்டிலும்இ அயல் நாடுகள் மற்றும் ஏனைய வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இவர்கள் பலஸ்தீனத் தாயகத்திற்கு மீளவும் வந்து குடியேறுவதை இஸ்ரேல் விரும்பவில்லை. அவ்வாறான மீள் குடியேற்றம் நிகழ்ந்தால்இ மக்கட்தொகை அடிப்படையில் பலஸ்தீனப் பிரதேசம் தமக்கு அச்சுறுத்தலாக அமையுமென்பது இஸ்ரேலின் எதிர்ப்புக்குரிய மூலகாரணியாகும்.
இவ்வாறான சர்ச்சைகளுக்குரிய விவகாரங்கள் 1991ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பேசப்படவில்லை. இன்று கிட்டத்தட்ட 20 ஆண்டுகளின் பின்னர் இறுதித் தீர்வுக்குரிய மேற்படி விவகாரங்கள் பற்றி பேசப்படுகின்றன.
தனிமைப்படுத்தப்பட்ட ஹமாஸ்
ஹமாஸ் உள்ளடக்கப்படாது பேச்சுவார்த்தைகள் தொடரும் பட்சத்தில்இ தீர்வு நோக்கிய நகர்வினை அவை வெகுவாகப் பாதிக்கும் – பலவீனப்படுத்தும் என்பது யதார்த்தமாகும்.
தமது பிரதிநிதித்துவம் இல்லாத சமாதானப் பேச்சுக்களை ஹமாஸ் எதிர்ப்பதானதொரு தோற்றம் தெரிகின்றது. பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் தீர்iவின மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடாத்தி ஏற்றுக் கொள்வதாஇ எதிர்ப்பதா என்ற முடிவினை எடுப்பது தொடர்பான சிந்தனை ஹமாஸிடம் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போது தொடங்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஆண்டுக்குள் இறுதித் தீர்வினை எட்டும் வகையில் பேச்சுக்களை முன்னெடுக்குமாறு ஒபாமா நிர்வாகம் இருதரப்பினையும் பணித்துள்ளது. பெரும் சவால்களை எதிர்கொண்டே இறுதித் தீர்வினை எட்டமுடியும் என்ற அடிப்படையில்இ தொடர்ந்து நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளின் நகர்வுகளே இறுதித் தீர்வின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதை மட்டுமே இன்றைய தருணத்தில் கூறமுடியும்.
பொங்குதமிழ் இணையம்இ ஒக்ரோபர்.2010