கவிஞனாக மாற்றினாய்

பக்திமிகு பிரசங்கியாக இருந்தேன்
நீயென்னைக் கவிஞனாக மாற்றினாய்
கிளர்ச்சியின் கிளைகளை
என்னுள் படரவிட்டாய்
கொண்டாட்ட விருந்துகள் ஒவ்வொன்றிலும்
போதை மயக்கத்தை உண்ணத்தந்தாய்
நீடித்த பிரார்த்தனைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட
கண்ணியமான மனிதனாக இருந்தேன்
தெருக்குழந்தைகளின் விளையாட்டுப்பொருளாக என்னை ஆக்கிவிட்டாய்

-தமிழில்: ரூபன் சி
-29.06.18-

Leave A Reply