தீபத்தின் தீ நாக்கு

தீபமொன்று
புதிரான பாடலை
இசைக்கத் தொடங்கியிருக்கிறது
நட்சத்திரங்களின் கண்கள்
பதட்டத்துடன்
அசைந்துகொண்டிருக்கின்றன
இரவுக்குத் துணையாய்
இருளைத் தாலாட்டுகிறது
தீபத்தின் தீ நாக்கு
இலையற்ற
உயிர்க்கிளைகளின்
உச்சியில் அமர்ந்து
உரசிப் பேசுகிறது
நிலவு
நினைவுகளின் ஸ்பரிசத்தில்
நேசம் சிலிர்க்க
அதன் சூட்டில்
உறைமனம் கரைய
ஒளித்துகள்கள்
நிலவேறிக் கொட்டுகின்றன
வானக்கருமை வழிய
நீர்த்திரை நீலம் பரவ
மழை
நிலம்தொட்டு நிரவ
பிரபஞ்ச நிறங்களின்
தன்மையோடு
காதலை வரைகிறது
தீபத் தூரிகை

-18.01.19

Leave A Reply