தொடுகை!

சில முத்தங்கள்
வாழ்வு முழுவதும்
பின்தொடர்பவை
உடல்மீது
ஆன்மாவின் தொடுகை
எனவாகித் தித்திப்பவை
முத்துக்கள் தம்மீது
போர்த்தியுள்ள சிப்பியைக்
கழற்ற வேண்டுமென்பது
கடல்நீரின் வேண்டுகை
லில்லிமலர்…!
அதற்கும்
எழில் உணர்வின்
தீவிரக்காதல்
தேவையென்றாகுகின்றது!

-மூலம்: ரூமி
-தமிழில்: ரூபன் சி

Leave A Reply