‘96’ – காதலித்துப் பிரிந்தவர்கள் இரண்டு தசாப்தங்களுக்குப் பின் சந்திக்கும் தருணங்களின் மென்னுர்வுகளைச் சித்தரிக்கின்றது. மனம் திறந்து உணர்வுகளையும் நினைவுகளையும் மிக நெருக்கமாகப் பகிர்ந்து கொள்கின்றார்கள். ஆனால் ‘உடல்’ மீது கட்டமைக்கப்பட்ட பிற்போக்கு விம்பத்தை நிறுவுவதிலும் புனிதப்படுத்துவதிலும் இயக்குனர் கொண்டிருக்கும் கவனம் நெருடுகிறது. ‘உடல்’ சார்ந்து ‘கலாச்சாரக் காவல்தனம்’ பல இடங்களில் வலிந்த திணிப்பாகத் தோன்றுகிறது. …
******நூல் அறிமுகம்****** கமலின் அரசியல் சார்பு நிலையைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் நான்கு திரைப்படங்களை மையப்படுத்தி யமுனா ராஜேந்திரன் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கிய புத்தகம் இது. 110 பக்கங்கள். சில மணி நேரங்களில் வாசித்து முடிக்கக்கூடிய புத்தகம். ஹேராம், தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன். விஸ்வரூபம் ஆகிய திரைப்படங்கள் கமல்ஹாஸன் எழுதி இயக்கியவை அல்லது கதை, திரைக்கதை உரையாடலில் …
புதியவன் ராசையாவின் ‘ஒற்றைப் பனை மரம்’ திரைப்படம் நேற்று ஒஸ்லோவில் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. -‘ஒற்றைப் பனை மரம்’ பின்-முள்ளிவாய்க்கால் துயரத்தினைச் சித்தரிக்கிறது. -முதல் 15 நிமிடங்கள் வரை முள்ளிவாய்க்கால் இறுதிக் கணங்களும், இராணுவத்தின் பிடிக்குள் மக்கள் கையறுநிலையில் செல்வதும், காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. – இதன் முதன்மைப் பாத்திரம் ‘புனர்வாழ்வு’ பெற்று விடுதலையாகும் விடுதலைப் புலிகள் அமைப்பின் …
வாழ்க்கையில் எதற்குமே பொருளில்லை¸ சத்தில்லை¸ சாரமில்லை? முன்னைய பதிவொன்றில் கடந்த வாரம் பார்த்ததாக நான் குறிப்பிட்ட இன்னொரு நாடகம் இளைஞர்களுக்கானது. நோர்வேஜிய மொழியில் இதன் தலைப்பு ‘Ingenting’. இதன் பொருள் ‘எதுவுமேயில்லை’ (பொருளற்ற வெறுமை) . இதன் பேசுபொருளும்¸ வடிவமும் இது எழுப்புகின்ற கேள்விகளும் பல்பரிமாணம் மிக்கவை. மேடை அமைப்பு¸ ஆற்றுகை, வடிவம்¸ பேசுபொருள்¸ நடிப்பு¸ …