நேரநெருக்கடி காரணமாகவும் ஒட்டுமொத்த நிகழ்வொழுங்கின் தன்மை கருதியும் 10.04.2022 நடைபெற்ற எனது மூன்று புத்தகங்களின் அறிமுக நிகழ்வில், எனது உரையில் மனதிலிருந்ததை முழுமையாகப் பகிர்ந்துகொள்கின்ற வாய்ப்பு அமையவில்லை. ஆதலால் பகிர்ந்தவற்றோடு பகிராமற்போனவற்றையும் சேர்த்து இந்தப் பதிவு. நிகழ்வை நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளடக்கக்கனதியுடனும் நிகழ்வினைக் கவிதா நெறிப்படுத்தியிருந்தார். எழுத்தாளர் சரவணன் ’அதிகார நலனும் அரசியல் நகர்வும’; புத்தகம் …
சோதியாவின் (சிவதாஸ் சிவபாலசிங்கம்) காலப்பெருவலி கவிதை நூல் அறிமுக அரங்கு ஒஸ்லோவில் 30-08-20 இடம்பெற்றத. இந்நிகழ்வின் முன்னேற்பாடுகளில் பங்களித்தபோதும் தவிர்க்கமுடியாத தனிப்பட்ட காரணத்தினால் நிகழ்வில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும் முழுநிகழ்வினையும் காணொளியில் பார்க்கக்கிடைத்தது. அபிசன் அன்பழகன் துல்லியமான ஒலியுடனான ஒளிப்பதிவினைச் செய்திருக்கின்றார். இந்நிகழ்வு இரண்டு காரணங்களால் முக்கியத்துவம் பெறுகின்றது. கொரோனா நெருக்கடி காரணமாக நீண்ட …
சமூக வலைத்தளங்கள் எந்தவிதக் கட்டுகளுமற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துவதற்குரிய வெளிகளைத் திறந்துவிட்டிருக்கின்றன. இணைய இணைப்புடன் ஒரு கைத்தொலைபேசி இருந்துவிட்டால் போதும். யாரும் எங்கிருந்தும் கருத்துகளைப் பகிர்ந்து விடலாம். கருத்தென்ற பேரில்கூட எதையாவது பதிந்து விடலாம். கருத்துகளை வெளிப்படுத்துவதற்கென்று ஒரு அணுகுமுறை இருக்கிறது. வரைமுறை இருக்கிறது. அடிப்படை அறம் சார் விழுமியங்களும், பண்புகளும் இருக்கின்றன. பாெறுப்புணர்வு அவசியம். அவரவர் …