வெளிச்சக்திகளின் இராணுவத் தலையீட்டின் மூலம் திடமான நல்லாட்சியினையே, ஜனநாயகத்தையோ உறுதிப்படுத்த முடியாது என்பதற்கு வரலாற்றில் நிரூபிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் உள்ளன. லிபியாவில் கடாபியின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த வெளிச்சக்திகளின் இராணுவத் தலையீடு, அங்கு ஜனநாயகத்தை நிறுவுவதில் தோல்வி கண்டுள்ளது. இவ்வாறான தலையீடுகள் ஐனநாயத்தின், நல்லாட்சியின, மனிதாபி;மானத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்டாலும், உள்ளார்ந்த அரசியல் நோக்கங்கள் வேறாகவே …
பயங்கரவாதத்திற்கு எதிரான – அனைத்துலகப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான போர்கள் என்ற போர்வையில் தொடங்கப்பட்டாலும், அவை ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்டவையாகவே இருந்தன. பொருளாதார நலன் சார்ந்த – பிராந்திய நலன்கள் சார்ந்தவையாகவே அதன் அணுகுமுறைகள் இருந்தன. ஈராக்கில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகள் ஓகஸ்ட் 31ஆம் நாளுடன் (2010) அதிகார முறையாக அமெரிக்காவினால் மீள அழைக்கப்பட்டுள்ளன. அதாவது ஈராக்கில் …
தென் சூடான் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கு வலுவான அனைத்துலக ஆதரவு என்ற பின்புலம் ஒருபுறம் இருந்தாலும், சமாதான முயற்சிகள் தடம்புரளாது, காத்திரமான தீர்வு நோக்கி நகர்ந்துள்ளமைக்கு தென் சூடான் விடுதலை அமைப்பு (SPLM) சமாதான முயற்சியினைத் தமது நலன்களுக்கு ஏதுவான முறையில், அரசியல் இராஜதந்திர அணுகுமுறையைக் கையாண்டதும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். உலகில் அவ்வப்போது …
சூடானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான அனைத்துலக சமூகத்தின் அக்கறை பற்றியும் சூடான் மீது செல்வாக்கு செலுத்த காய்நகர்த்தும் வல்லரசுகளின் உள்நோக்கம் பற்றியும் புரிந்துகொள்வது அவசியமாகும். தென் சூடான் எண்ணெய் வளமிக்க நாடு. வட சூடான் அரசு எண்ணெய் வள அபிவிருத்திக்கான ஏக உரிமையினை சீனாவிற்கு வழங்கியுள்ளது. எண்ணெய் அபிவிருத்திக்கான ஏக உரிமை, வல்லரசாக வளர்ந்துள்ள சீனாவை …
உரையின் பெரும் பகுதி ”நீதிக்கான போர்” என்ற சொல்லாடலின் கீழ், அமெரிக்காவின் போர்களை நியாயப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. மானிடத்தின் நீண்ட வரலாற்றுப் பாதையில் தேசிய விடுதலை, ஜனநாயகம், சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட போர்கள் பற்றிய வரலாற்று எடுத்தரைப்புகளினூடாக அமெரிக்காவின் சமகாலப் போர் முன்னெடுப்புகளை நியாயப்படுத்த அவர் முயன்றார். ”பயங்கரவாதத்திற்கு எதிரான போர், நீதிக்கான போர், …
தனது இராணுவ இயந்திர மேலாதிக்க அடக்குமுறைக்கு ஊடாக தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை முற்று முழுதாக நசுக்குவதும், தமிழினத்தை சரணாகதி அடைய வைத்தலுமே பேரினவாதத்தின் மூலோபாயமாக இருந்து வந்துள்ளது. காலங்காலமாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களத் தலைமைகள், இராணுவ அடக்குமுறையைக் கருவியாகக் கொண்ட மூலோபாயத்தையே கையாண்டன. இன அழிப்பே பேரினவாத அரச இயந்திரத்தின் …
பன்னாட்டு அரசியலின் சமகால நிகழ்வுகளில் கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் தொடர்பான விவகாரம், அதீத முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா ஆகியவற்றின் நேரடித் தலையீட்டுடன் சேர்பியா-கொசோவோ தரப்புகளுக்கிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டன. ஆனபோதும் தீர்வுகள் ஏதும் எட்டப்படவில்லை. இன்றைய நிலையில் 2008 பெப்ரவரி மாத இறுதிக்குள் கொசோவோ தனிநாட்டுப் …
சினம்கொள்! – ஈழச் சினிமா பற்றிய நம்பிக்கையை முன்னகர்த்தும் திரைப்படமாக நோக்கக்கூடியது! ஜனரஞ்சக சினிமாவுக்கும் யதார்த்த சினிமாவுக்கும் இடைப்பட்ட ஒரு வடிவத்தை தேர்ந்து கொண்டிருக்கின்றார் கனடியத் தமிழரான திரைப்பட நெறியாளர் ரஞ்சித் ஜோசப். தொழில்நுட்ப நேர்த்தியும் காட்சிக் கோர்வையின் கச்சிதமும் உணர்வு பூர்வமான கதை சொல்லலும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. காட்சிபூர்வ அழகியல், பாத்திரப்படைப்பில் அழுத்தம், தொய்வற்ற …
கட்புலனாகா தியேட்டர் (Invisible Theater) பற்றிய எனது கட்டுரை (பகுதி 1). தாயகத்திலிருந்து வெளிவரும் ‘தமிழர் தளம்’ மாதமிரு முறை, ஓகஸ்ட் முதலாவது இதழில்: கட்புலனாகா தியேட்டர் (Invisible Theater) – சமூக மாற்றத்திற்கான கருவி! – ரூபன் சிவராஜா பிரேசில் நாட்டு அரங்கவியல் அறிஞர் Augusto Boal தோற்றுவித்து வளர்தெடுத்த ‘ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கம்’ (Theatre …
கட்புலனாகா தியேட்டரில் அதன் முதன்மைப் பாத்திரங்கள் பாதுகாப்புக் காரணங்களால் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் அவ்விடத்திலிருந்து வெளியேறி விடுவர். மீதமுள்ள பாத்திரங்களும், அவதானிகளும் கையாளப்பட்ட பேசுபொருளை மேற்கொண்டு விவாதித்துச் செயற்படுவர். கட்புலனாக தியேட்டர் முற்றுமுழுதாக வெற்றியடையலாம் அல்லது படுதோல்வியடையலாம். இரண்டுக்குமான இடைவெளி மிகக்சொற்பம். எந்தக் கட்டத்தில் மக்கள் தலையிட்டுக் கருத்துக்கூறுவர் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. அது …