பறவையின் சிறகுகளை அறிவதில்லை மனச் சிறைகளுக்குப் பழக்கப்பட்ட மனிதர்கள் பறவையின் வெளிகளை அறிவதில்லை சட்டகங்களுக்குள் நிர்ப்பந்திக்கப்பட்ட மனிதர்கள் பறவையின் அகங்களை அறிவதில்லை நரிகளின் தந்திரங்களைத் தத்தெடுத்துத் தமதாக்கிய மனிதர்கள் பறவையின் மவுனங்களை அறிவதில்லை இரைச்சல்களுக்கு இசைந்துவிட்ட மனிதர்கள் பறவையின் மொழிகளை அறிவதில்லை கூடிப்பிதற்றுதல்களில் குளிர்காயும் மனிதர்கள் பறவையின் தேடலை அறிவதில்லை குண்டுச் சட்டிக்குள் குதிரையென்றாகிய மனிதர்கள் …
உன் பாடலின் உட்பொருள் அழகின் உணர்வெனில் பாலைவன இதயத்திலும் உன் பாடலுக்கான ஒரு பார்வையாளன் உள்ளதை அறி! உன் அடைவிற்கான தேடல் வாழ்க்கையின் இதயமெனில் காணும் பொருளனைத்திலும் அழகினைத் தரிசிப்பாய் அழகினைப் புறமொதுக்கும் பார்வை குன்றிய விழிகளிலும் அதனைக் கண்டடைவாய் அழகின் அற்புதங்களைக் கண்டடைவதற்கானது நம் வாழ்தல் மற்றைய அனைத்தும் ஒருவகைக் காத்திருப்பு! இரண்டேயிரண்டு கூறுகள்தான் …
சமூக வலைத்தளங்கள் எந்தவிதக் கட்டுகளுமற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துவதற்குரிய வெளிகளைத் திறந்துவிட்டிருக்கின்றன. இணைய இணைப்புடன் ஒரு கைத்தொலைபேசி இருந்துவிட்டால் போதும். யாரும் எங்கிருந்தும் கருத்துகளைப் பகிர்ந்து விடலாம். கருத்தென்ற பேரில்கூட எதையாவது பதிந்து விடலாம். கருத்துகளை வெளிப்படுத்துவதற்கென்று ஒரு அணுகுமுறை இருக்கிறது. வரைமுறை இருக்கிறது. அடிப்படை அறம் சார் விழுமியங்களும், பண்புகளும் இருக்கின்றன. பாெறுப்புணர்வு அவசியம். அவரவர் …
இரவுகருஞ்சுவாலையை முகத்தில் பூசியிருக்கிறது இரவு இருளை மடியெங்கணும் பரவியிருக்கிறது பகல் குளிரை அள்ளித் தலைமுடிந்திருக்கிறது காலம் இலையுதிர்த்த மரங்கள் பனிப்புழுதி அப்பிய கிளைகள் முகில்முகடுகளுக்குள் ஒளிந்திருக்கின்றன நட்சத்திரங்கள் திண்மப்பனி மூடிய வீதிகளிலும் பனிக்குன்றுகளிலும் உறைந்திருக்கக்கூடும் உனதும் எனதுமான பகிரத்தவறிய வாழ்தல்
சினம்கொள்! – ஈழச் சினிமா பற்றிய நம்பிக்கையை முன்னகர்த்தும் திரைப்படமாக நோக்கக்கூடியது! ஜனரஞ்சக சினிமாவுக்கும் யதார்த்த சினிமாவுக்கும் இடைப்பட்ட ஒரு வடிவத்தை தேர்ந்து கொண்டிருக்கின்றார் கனடியத் தமிழரான திரைப்பட நெறியாளர் ரஞ்சித் ஜோசப். தொழில்நுட்ப நேர்த்தியும் காட்சிக் கோர்வையின் கச்சிதமும் உணர்வு பூர்வமான கதை சொல்லலும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. காட்சிபூர்வ அழகியல், பாத்திரப்படைப்பில் அழுத்தம், தொய்வற்ற …
எனக்குத் தெளிவாகத் தெரிகிறது இங்கிருக்கும் எல்லா வீடுகளும் என்னைப் பார்த்துப் புன்னகைக்கின்றன உன்னை நான் நேசிப்பதை அவை புரிந்திருக்கின்றன நீ நகரத்திற்கு வந்துவிடு பூங்காவிலுள்ள மரங்களில் நான் அதனைக் காண்கிறேன் அசையும் இலைகளுடன் நின்றபடி அம்மரங்கள் காற்றிடமிருந்தும் சூரியனிடமிருந்தும் முத்தங்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன. நீ நகரத்திற்கு வந்துவிடு ஆதலால் தான் ஒளியிலிருந்து… காற்றிலிருந்து… தென்றலில் அசையும் பாய்மரக்கப்பலிலிருந்து …
பறவைகள் வான்வெளியைச் சிறகுகளால் அளக்கும் மலைகளை உரசும் வனங்களில் இளைப்பாறும் எல்லைகளை நுண்ணறியும் கடல் தாண்டும் காற்றை எதிர்க்கும் எதிர்வரும் இடர்களை சிறகுகளால் இடறிவிடும் இருளைச் சிறைப்பிடிக்கும் ஒளியைப் பருகும் திசையைக் கணிக்கும் உயரப் பறக்கும் உலகைத் தரிசிக்கும் புல்லுருவிகள் அதன் காற்தூசு அதன் சிறகிலிருந்து உதிரும் ஒற்றை இறகுகூட எதையும் சட்டை செய்வதில்லை நீ …
கட்புலனாகா தியேட்டர் (Invisible Theater) பற்றிய எனது கட்டுரை (பகுதி 1). தாயகத்திலிருந்து வெளிவரும் ‘தமிழர் தளம்’ மாதமிரு முறை, ஓகஸ்ட் முதலாவது இதழில்: கட்புலனாகா தியேட்டர் (Invisible Theater) – சமூக மாற்றத்திற்கான கருவி! – ரூபன் சிவராஜா பிரேசில் நாட்டு அரங்கவியல் அறிஞர் Augusto Boal தோற்றுவித்து வளர்தெடுத்த ‘ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கம்’ (Theatre …
பல்லாண்டுகளாக நீ என் கண்களில் படவேயில்லை அந்தப் பேரூந்து மிகமெதுவாக என்னைக் கடந்து வளைந்து சென்ற அக்கணம் அதன் ஜன்னலோரம் மின்னலாய் உன்னைக் கண்டேன் உனதந்தப் பார்வை… அதில் சட்டென உன் சுயம் அதீதமாய்த் தோன்றிற்று எம்மைப் பிரித்த இத்தனை ஆண்டுகாலம் நான் என்னோடு காவித்திரிகின்ற உன் உருவப்படத்திலிருந்து முற்றிலும் வேறான தோற்றத்தில் நீயிருந்தாய் என்னால் …
கட்புலனாகா தியேட்டரில் அதன் முதன்மைப் பாத்திரங்கள் பாதுகாப்புக் காரணங்களால் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் அவ்விடத்திலிருந்து வெளியேறி விடுவர். மீதமுள்ள பாத்திரங்களும், அவதானிகளும் கையாளப்பட்ட பேசுபொருளை மேற்கொண்டு விவாதித்துச் செயற்படுவர். கட்புலனாக தியேட்டர் முற்றுமுழுதாக வெற்றியடையலாம் அல்லது படுதோல்வியடையலாம். இரண்டுக்குமான இடைவெளி மிகக்சொற்பம். எந்தக் கட்டத்தில் மக்கள் தலையிட்டுக் கருத்துக்கூறுவர் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. அது …