முந்தைய தீர்ப்பு அடிப்படையில் மிகப் பலவீனமானது. கையளிப்பிற்கு எதிராக மிக நியாயமான பல வாதங்கள் இருந்தபோதிலும், அசாஞ்சின் உள-உடல் நிலையை முன்னிலைப்படுத்தி தற்கொலைக்கான ஆபத்தினை முதன்மைக்காரணமாகக் கூறித் தீர்ப்பு வழங்கியமை பலவீனமானது. கையளிப்பானது, மனிதஉரிமைச் சாசன மீறல் என்றோ, ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றோ, நீதிக்குப் புறம்பானது என்றோ தீர்ப்பு வழங்கப்படவில்லை. அசாஞ் வழக்கினை பிரித்தானிய …
தடுப்பூசி பங்கீட்டில் நீதியற்ற அணுகுமுறைக்கும் காப்புரிமை விலக்குக்கு எதிரான போக்கிற்குமான முதன்மைக் காரணி வணிகநோக்கம். ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, சுவிஸ், நோர்வே போன்ற நாடுகள், உலகளாவிய தடுப்பூசி உற்பத்தி அளவினை அதிகரிக்கின்ற அனுமதியைத் தடுக்கின்றன. காப்புரிமை விலக்கிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதனூடாக வறிய, நடுத்தர நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசிகள் தயாரிக்கப்படுவதையும் சென்றடைவதையும் தடுக்கின்றன காப்புரிமை விலக்கிற்கு எதிரான …
ஒருபுறம் அவர்களைப் பல தலைமுறைக் காலங்கள் வறுமைக்குள் தள்ளுகின்ற இழிவரசியலைச் செய்து கொண்டு, மறுபுறம் அவர்களுக்கான ‘சுதந்திரத்தைக்’ கோருவதென்பது அப்பட்டமான அரசியல் போலித்தனம். சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் என்பனவற்றை அமெரிக்காவும் அதன் தலைமையிலான மேற்கின் சக்திகளும் உலக நாடுகளில் எவ்வாறு கையாள்கின்றன என்பதற்கு வரலாறு நெடுகிலும் பல உதாரணங்கள் உள்ளன. கியூப …
Galdhøpiggen என்பது ஒரு மலையின் பெயர். இது நோர்வேயின் மட்டுமல்ல வட ஐரோப்பாவினதும் மிக உயரமான மலை. கடல் மட்டத்திலிருந்து 2469 கி.மீ உயரம். இம்மலை உச்சிக்கு ஏறுவதற்கான பயணம் ஒன்றினை ஜூன் இறுதியின் வார இறுதியில் மேற்கொண்டிருந்தோம். இந்த மலையானது தென்-நோர்வேயின் மத்திய பகுதியினை அமைவிடமாகக் கொண்ட Jotunheimen பிரதேசத்தில் உள்ளது. ஒஸ்லோவிலிருந்து கிட்டத்தட்ட …
இதுவரை ஒரு சதிக்கோட்பாடாகவும் சர்ச்சையாகவும் திசைதிருப்பலாகவும் மறுதலிக்கப்பட்டுவந்த கருத்தியல் மீண்டும் சர்வதேச விவகாரமாகியுள்ளது. இததற்கான முதன்மைக் காரணி அமெரிக்க ஜனாதிபதி புலனாய்வுத்துறையிடம் கோரியுள்ள விசாரணை அறிக்கை. ஆனால் அதனைவிடப் பல்வேறு துணைக்காரணிகளும் உள்ளன. கொரோனா பெருந்தொற்று உலகமெங்கும் பரவத்தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை உலகம் முழுவதுமாக 3,4 மில்லியன் வரையான மக்கள் அந்தக் கொடும் …
– சோதியா அவருக்கான ஒரு சொற்களஞ்சியத்தை, ஒரு கவிமொழியை அவர் வனைந்திருக்கின்றார். யார் தன்மையையும் சாராது, நகல் எடுக்காது ஏனைய கவிஞர்களிலிருந்து இங்கு வேறுபடுகின்றார். அவரது கவிதைகளை ஒன்றுசேர்த்த இத்தொடர் வாசிப்பில், அதனை நிறுவுவதற்கான பல ஆச்சர்யங்கள் ஆங்காங்கே தலைதட்டுகின்றன. திட்டமிடப்படாமல் சடுதியாக, இயல்பாக எழுதும் கவிதைகளே உயிர்ப்புடையனவாக இருக்கும் எனும் பல கவிஞர்களது …
ஒரு படைவலுச் சமநிலை இல்லாத இருதரப்புகளுக்கிடையிலான முரண்பாடு இது. அரசுக்கும் அரசில்லாத தரப்பிற்கும் இடையிலான மோதல்கள். தரை, வான், கடல், பெரும் நவீன தொழில்நுட்ப படைக்கட்டுமானங்களைக் கொண்ட அரசுக்கும் போராளி அமைப்பிற்கும் இடையிலான பிணக்குகளாக உலகம் இஸ்ரேல் – பலஸ்தீனப் பிரச்சினையை அணுகுவதில்லை. பாரிய ஆக்கிரமிப்பு சக்திக்கும், பல தசாப்தங்களாக ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டினை …
உலகின் செல்வந்த நாடுகள் மட்டும் தடுப்பூசிகளைப் போட்டு விடுவதால் தொற்றுப் பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடாது. உலக நாடுகள் அனைத்தும் வழமைக்குத் திரும்புவது என்பதே தொற்றுப்பரம்பலைக் கட்டுக்குள் கொண்டுவருவதென்பதன் உள்ளார்ந்த பொருள். அதுவே தொற்றுப்பரம்பலைக் கட்டுப்படுத்துவதில் வினைத்தாக்கம் மிக்க செயற்பாடு. அப்படி நிகழத் தவறினால் நாடுகடந்த பயணங்கள் மீண்டும் மீண்டும் புதியபுதிய தொற்றுஅலைகளைத் தோற்றுவித்துக்கொண்டே இருக்கும். இந்தப் …
தூரத்தின் அருகில் ரூபன். அருகின் தூரத்தில் ரூபன். புலம்பெயர் வாழ்வின் மணற்கடிகையில் தலைகீழ் முரணாய்க் கசியும் மணற்துகள் நாள்களால் காலம் அளக்க வாய்த்த கனவுக்காரர். விழிப்பதற்குச் சற்று முந்தையதான கனவுகளில்… எதார்த்த பகல்… எதார்த்த இரவு விழிக்கும் எதார்த்தங்களில்… நீளப் பகல். நீள நீள நீள நீளப் பகல். அப்படித்தான் இரவும். “துருவக் குளிரின் உத்தரிப்புகளோடு …
-பேராசிரியர். ந.சண்முகரத்தினம் தனது கவிதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டுவர இருப்பதாகவும் அதில் எனது பார்வையில் ஒரு ‘அறிமுக-விமர்சனக் குறிப்பு இடம்பெறுவது பொருத்தமென’ என்ணுவதாகவும், அதைச் செய்ய நேரமும் வாய்ப்பும் இருக்கிறதா என ரூபன் சில மாதங்களுக்குமுன் ஒரு மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தார். நான் கவிதைகளை முதலில் படிக்க விரும்புவதால் அவற்றை அனுப்பிவைக்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டேன். சில …