அனைத்துலக பொருளாதாரத் தடைநீக்கம் செய்யப்பட்ட பலமான ஈரான் பிராந்தியத்தில் தமது செல்வாக்கினையும் வகிபாகத்தினையும் நலிவடையச் செய்துவிடுமென்ற அச்சம் மேற்சொன்ன அரபு நாடுகளுக்கு உள்ளது. 60 தசாப்த காலங்கள் கியூபாவைத் தனிமைப்படுத்தும் அமெரிக்க மூலோபாயத்தின் தோல்வி அமெரிக்காவினால் பகிரங்கமாக அண்மையில் (2015) ஒப்புக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து இருநாட்டுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2015 ஏப்ரல் மாத …
கிழக்கு உக்ரைன் பிரதேசங்களுக்கு உள்ளக சுயாட்சியுடனான கூட்டாட்சி அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்று ரஸ்யா போருகிறது. இதனை உக்ரைன் கடுமையாக மறுத்துள்ளது. ஆனால் அரசியலமைப்பு மறுசீரமைப்பினூடாக இப்பிரதேசங்களுக்கு “விசேட அந்தஸ்து” வழங்குவதற்கு உக்ரைன் இணங்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. 2014 மார்ச் மாதத்திலிருந்து ரஸ்யாவின் அண்டை நாடான உக்கிரைனின் கிழக்குப் பிராந்திய நகரங்களில் கடும்போர் இடம்பெற்று வந்துள்ளது. …
குர்திஸ் அரசியல் கட்சி வரலாற்றில் இதற்கு முன்னர் துருக்கிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தினைக் கொண்டிருக்கவில்லை. இன்னொரு வகையில் சொல்வதானால் குர்திஸ் மக்களுக்கு துருக்கியின் ஜனநாயக நடைமுறைகளில் பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுவந்துள்ளது. பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மூலம் துருக்கிய மைய அரசியலில் குர்திஸ் கட்சியொன்று பங்கெடுப்பது இதுவே முதற்தடவை என்பதால் குர்திஸ்; ஐனநாயக மக்கள் கட்சியின் இந்த வெற்றி வரலாற்று …
அமெரிக்காவும் PKK மீதான துருக்கியின் தாக்குதல்களுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இங்குதான் மீண்டும் அமெரிக்காவின் இரட்டை முகம் வெளிச்சத்திற்கு வருகின்றது. Pமுமு அமைப்பிற்கு ஆயுத உதவி வழங்கி IS படைகளுடன் மோதவிட்டமை ஒருபுறமிருக்க, மறுபுறம் தற்போது PKKயினைப் பலவீனப்படுத்துவதற்கும் துருக்கிக்கு முண்டுகொடுக்கின்றது அமெரிக்கா. PKK அமைப்பினை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்துவதன் ஊடாக அரசியல் உரிய அரசியல் தீர்வினை …
உலக வரலாற்றில் தேசிய மக்களினங்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கி, இன அழிப்பினை மேற்கொண்டஃமேற்கொள்கின்ற அடக்குமுறை அரசுகள் பல, திட்டமிட்ட குடியேற்றங்களை அதற்கான கருவியாகக் கைக்கொண்டன. திட்டமிட்ட குடியேற்றங்களை மிக நுணுக்கமாகவும், பேரினவாதத்தின் தொலைநோக்கு நலன்களுக்குச் சாதகமாகவும் கையாண்ட அரசுகளில் இஸ்ரேலும் சிறிலங்காவும் முதன்மையானவை. இதன் மூலம் விடுதலைக்காக போராடும் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலுவிழக்கச் செய்வது அல்லது இல்லாமற் …
இஸ்ரேல்-பலஸ்தீனச் சிக்கல் நீண்ட நெடுங்காலமாகத் தீர்க்கப்படாதிருக்கும் இன முரண்பாடு. சமாதான முயற்சிகள் அவ்வப்போது தூசி தட்டப்பட்டுத் தொடங்கப்படுவதும் பின்னர் கிடப்பில் போடப்படுவதும் மாறி மாறி நடந்தேறிய நிகழ்வுகளாகியுள்ளன. 60 ஆண்டுகளுக்கு மேலான போராட்டம் பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம், 60 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. இத்தனை கால நீட்சி கொண்ட இன முரண்பாட்டுத் தரப்புகளான …
அமெரிக்காவின் மத்தியகிழக்கு அரசியல் விவகாரங்கள் சார்ந்த அணுகுமுறைக்கும் இஸ்ரேலுடனான உறவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இஸ்ரேலை மீறியோ, அதனை மேவியோ, அதன் நலன்களுக்கு குந்தகமாக அமெரிக்க அணுகுமுறை ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக இஸ்ரேலுக்கான தார்மீக ஆதரவு சக்தியாக எல்லாத்தருணங்களிலும் முண்டுகொடுப்பு அரசியலையே அமெரிக்கா கடைப்பிடித்துவந்தது. மார்ச் 17ஆம் திகதி (2015) இஸ்ரேலில் இடம்பெற்ற தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகு …
122 நாடுகள் வரை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் அங்கத்துவம் வகிக்கின்றன. இதன் இயங்குதலுக்கான நிதி பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளினாலும், சில வட ஆசிய நாடுகளினாலும் வழங்கப்படுகின்றன. இஸ்ரேல், அமெரிக்கா, ரஸ்யா, சீனா உட்பட்ட பல நாடுகள் இதில் அங்கத்துவம் வகிக்கவில்லை. பலஸ்தீன இஸ்ரேல் பிரச்சினை அவ்வப்போது அனைத்துலக அரசியல் அரங்கில் பேசுபொருளாகுவது வழமையான ஒன்று. 2012 …
சிறிலங்காவின் இறுதிப்போர் விவகாரத்தில் மேற்குலக நாடுகளும் சுயாதீனமான விசாரணைகளை கோருகின்றன. ஆனால் காத்திரமான செயற்திட்டங்களை இதுவரை முன்வைக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கமே அதற்கான பொறிமுறையைக் கண்டறிய வேண்டுமென்ற கருத்துகள் சில மேற்குலக நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தமது நலன் சார் அரசியலைத் தாண்டி இது விவகாரத்தில் செயலாற்ற இந்த நாடுகள் தயாராக இல்லை என்பதையே இது …
1970களின் நடுவிலிருந்து அமெரிக்க அனுசரணையுடன் இஸ்ரேல் – பலஸ்தீன முரண்பாட்டுக்கான தீர்வு முயற்சிகள் தொடங்கப்பட்டாலும் 1993 இல் ஒஸ்லோ உடன்படிக்கையே அனைத்துலக மயப்பட்ட சமாதானத்தை நோக்கிய முனைப்பான காலகட்டமாக நோக்கக்கூடியது. 1967-இல் அமைந்திருந்த ஆள்புல எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு பலஸ்தீனத் தனியரசை அமைப்பதற்கான தீர்வு பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படுவதென்பது ஒஸ்லோ உடன்படிக்கையில் இணங்கப்பட்ட ஒன்றாகும். எனவே …