நேரநெருக்கடி காரணமாகவும் ஒட்டுமொத்த நிகழ்வொழுங்கின் தன்மை கருதியும் 10.04.2022 நடைபெற்ற எனது மூன்று புத்தகங்களின் அறிமுக நிகழ்வில், எனது உரையில் மனதிலிருந்ததை முழுமையாகப் பகிர்ந்துகொள்கின்ற வாய்ப்பு அமையவில்லை. ஆதலால் பகிர்ந்தவற்றோடு பகிராமற்போனவற்றையும் சேர்த்து இந்தப் பதிவு. நிகழ்வை நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளடக்கக்கனதியுடனும் நிகழ்வினைக் கவிதா நெறிப்படுத்தியிருந்தார். எழுத்தாளர் சரவணன் ’அதிகார நலனும் அரசியல் நகர்வும’; புத்தகம் …
– சோதியா அவருக்கான ஒரு சொற்களஞ்சியத்தை, ஒரு கவிமொழியை அவர் வனைந்திருக்கின்றார். யார் தன்மையையும் சாராது, நகல் எடுக்காது ஏனைய கவிஞர்களிலிருந்து இங்கு வேறுபடுகின்றார். அவரது கவிதைகளை ஒன்றுசேர்த்த இத்தொடர் வாசிப்பில், அதனை நிறுவுவதற்கான பல ஆச்சர்யங்கள் ஆங்காங்கே தலைதட்டுகின்றன. திட்டமிடப்படாமல் சடுதியாக, இயல்பாக எழுதும் கவிதைகளே உயிர்ப்புடையனவாக இருக்கும் எனும் பல கவிஞர்களது …
தூரத்தின் அருகில் ரூபன். அருகின் தூரத்தில் ரூபன். புலம்பெயர் வாழ்வின் மணற்கடிகையில் தலைகீழ் முரணாய்க் கசியும் மணற்துகள் நாள்களால் காலம் அளக்க வாய்த்த கனவுக்காரர். விழிப்பதற்குச் சற்று முந்தையதான கனவுகளில்… எதார்த்த பகல்… எதார்த்த இரவு விழிக்கும் எதார்த்தங்களில்… நீளப் பகல். நீள நீள நீள நீளப் பகல். அப்படித்தான் இரவும். “துருவக் குளிரின் உத்தரிப்புகளோடு …
-பேராசிரியர். ந.சண்முகரத்தினம் தனது கவிதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டுவர இருப்பதாகவும் அதில் எனது பார்வையில் ஒரு ‘அறிமுக-விமர்சனக் குறிப்பு இடம்பெறுவது பொருத்தமென’ என்ணுவதாகவும், அதைச் செய்ய நேரமும் வாய்ப்பும் இருக்கிறதா என ரூபன் சில மாதங்களுக்குமுன் ஒரு மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தார். நான் கவிதைகளை முதலில் படிக்க விரும்புவதால் அவற்றை அனுப்பிவைக்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டேன். சில …