உலக வரலாற்றில் தேசிய மக்களினங்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கி, இன அழிப்பினை மேற்கொண்டஃமேற்கொள்கின்ற அடக்குமுறை அரசுகள் பல, திட்டமிட்ட குடியேற்றங்களை அதற்கான கருவியாகக் கைக்கொண்டன. திட்டமிட்ட குடியேற்றங்களை மிக நுணுக்கமாகவும், பேரினவாதத்தின் தொலைநோக்கு நலன்களுக்குச் சாதகமாகவும் கையாண்ட அரசுகளில் இஸ்ரேலும் சிறிலங்காவும் முதன்மையானவை. இதன் மூலம் விடுதலைக்காக போராடும் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலுவிழக்கச் செய்வது அல்லது இல்லாமற் …
இஸ்ரேல்-பலஸ்தீனச் சிக்கல் நீண்ட நெடுங்காலமாகத் தீர்க்கப்படாதிருக்கும் இன முரண்பாடு. சமாதான முயற்சிகள் அவ்வப்போது தூசி தட்டப்பட்டுத் தொடங்கப்படுவதும் பின்னர் கிடப்பில் போடப்படுவதும் மாறி மாறி நடந்தேறிய நிகழ்வுகளாகியுள்ளன. 60 ஆண்டுகளுக்கு மேலான போராட்டம் பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம், 60 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. இத்தனை கால நீட்சி கொண்ட இன முரண்பாட்டுத் தரப்புகளான …
அமெரிக்காவின் மத்தியகிழக்கு அரசியல் விவகாரங்கள் சார்ந்த அணுகுமுறைக்கும் இஸ்ரேலுடனான உறவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இஸ்ரேலை மீறியோ, அதனை மேவியோ, அதன் நலன்களுக்கு குந்தகமாக அமெரிக்க அணுகுமுறை ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக இஸ்ரேலுக்கான தார்மீக ஆதரவு சக்தியாக எல்லாத்தருணங்களிலும் முண்டுகொடுப்பு அரசியலையே அமெரிக்கா கடைப்பிடித்துவந்தது. மார்ச் 17ஆம் திகதி (2015) இஸ்ரேலில் இடம்பெற்ற தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகு …
122 நாடுகள் வரை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் அங்கத்துவம் வகிக்கின்றன. இதன் இயங்குதலுக்கான நிதி பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளினாலும், சில வட ஆசிய நாடுகளினாலும் வழங்கப்படுகின்றன. இஸ்ரேல், அமெரிக்கா, ரஸ்யா, சீனா உட்பட்ட பல நாடுகள் இதில் அங்கத்துவம் வகிக்கவில்லை. பலஸ்தீன இஸ்ரேல் பிரச்சினை அவ்வப்போது அனைத்துலக அரசியல் அரங்கில் பேசுபொருளாகுவது வழமையான ஒன்று. 2012 …
சிறிலங்காவின் இறுதிப்போர் விவகாரத்தில் மேற்குலக நாடுகளும் சுயாதீனமான விசாரணைகளை கோருகின்றன. ஆனால் காத்திரமான செயற்திட்டங்களை இதுவரை முன்வைக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கமே அதற்கான பொறிமுறையைக் கண்டறிய வேண்டுமென்ற கருத்துகள் சில மேற்குலக நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தமது நலன் சார் அரசியலைத் தாண்டி இது விவகாரத்தில் செயலாற்ற இந்த நாடுகள் தயாராக இல்லை என்பதையே இது …
1970களின் நடுவிலிருந்து அமெரிக்க அனுசரணையுடன் இஸ்ரேல் – பலஸ்தீன முரண்பாட்டுக்கான தீர்வு முயற்சிகள் தொடங்கப்பட்டாலும் 1993 இல் ஒஸ்லோ உடன்படிக்கையே அனைத்துலக மயப்பட்ட சமாதானத்தை நோக்கிய முனைப்பான காலகட்டமாக நோக்கக்கூடியது. 1967-இல் அமைந்திருந்த ஆள்புல எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு பலஸ்தீனத் தனியரசை அமைப்பதற்கான தீர்வு பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படுவதென்பது ஒஸ்லோ உடன்படிக்கையில் இணங்கப்பட்ட ஒன்றாகும். எனவே …
கியூபாவுடனான அமெரிக்காவின் உறவு புதுப்பிக்கப்படுகின்ற புறநிலையானது, அமெரிக்காவின் அரசியல் அரங்கில் பதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்பது பரவலான எதிர்பார்ப்பாக இருக்கின்றது. குறிப்பாக தென்னமெரிக்க நாடுகளுக்கான நுளைவாகவும் அமெரிக்காவிற்கு இந்நிகழ்வு அமையக்கூடியது. இலத்தீன் அமெரிக்க நாடுகள் செல்வாக்கினையும் வகிபாகத்தினையும் அமெரிக்கா மீள நிலைநாட்டுவதற்குரிய சாதகமான சூழலாக இதனைப் பார்க்கலாம். நலன்சார் அரசியலும் அனைத்துலக உறவும் தற்போதைய அனைத்துலக …
1960களிலிருந்து கியூபாவின் பொருளாதாரம், நலிவடைந்த நிலையிலிருந்தபோதும், சோவியத் ஒன்றியத்தின் உடைவிற்குப் பின்னர், மேலும் வீழ்ச்சி கண்டிருந்தது. மக்களின் வாழ்க்கைத்தரம் சோவியத் உடைவிற்கு முன்னர் இருந்தததை ஒத்த நிலையில் இன்றும் உள்ளதாக சில ஆய்வுகள் சுட்டுகின்றன. ஆயினும் மூன்றாம் உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, கியூப மக்களின் வாழ்க்கைத்தரம் ஓரளவு சிறப்பாகவுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நவீன தொழில் …
அரசுகள், அவை சார்ந்த நிறுவனங்கள், அனைத்துலக உறவுகள் என்பன நலன்கள் சார்ந்த அச்சில் சுழல்வன. அவை வகுக்கப்பட்ட கொள்கைகளுக்கு அமைய நகர்வன. கொள்கை வகுப்பாளர்களின் கைகளுக்குள் அனைத்தும் அடக்கம். எனவே ஒபாமா ஆட்சியில் அனைத்துலக ரீதியில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ்ந்திருக்குமென எதிர்பார்த்திருந்தமை அரசியல் புரிதலில் நிலவும் வறுமை என்பதைத் தவிர வேறில்லை. அமெரிக்காவின் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான …
இராணுவத்தீர்வு சாத்தியமில்லை என்பதை இருதரப்பும் உணர்ந்த புறநிலையில் அரசியல் ரீதியிலேயே கொலம்பியாவின் முரண்பாடுகளுக்குத் தீர்வைக் கண்டடைய முடியுமென்று இருதரப்பும் நம்பிக்கையும் விருப்பும் கொண்டிருந்த புறநிலையிலேயே பேச்சுவார்த்தைகள் நேர்மறையான பாதையில் நகர்ந்தன. நான்கு ஆண்டுகளாக முன்னேற்றகரமாக நகர்ந்து வரும் கொலம்பிய சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான இறுதித்தீர்வு 2016 இறுதிப்பகுதியில்; எட்டப்பட்டது. கொலம்பியாவின் அரசியல் எதிர்காலத்தைத் திடப்படுத்தும் வகையிலானதும் நிலைத்து …